அல்ட்ரா புரோசசஸ்ட் ஃபுட்ஸ்! - பதப்படுத்தப்பட்ட பொருட்களில் என்ன இருக்கிறது?

 








நுட்பமாக பதப்படுத்தப்பட்ட பொருட்கள்

குழந்தை உணவுகள், கார்பன் பானங்கள், நொறுக்குத்தீனிகள், பிஸ்க், பிரட், காலை உணவாக சாப்பிடும் உணவுகள், இனிப்புகள், உடனடியாக சூடு செய்து உண்ணும் உணவுகள்  இந்த வகைமையில் வரும்.

பழச்சாறு சார்ந்த பொருட்கள், மால்டோடெக்ஸ்ட்ரின், டெக்ஸ்ட்ரோஸ், கோல்டன் சிரப், சோயா புரதம், நீரேற்றம் செய்யப்பட்ட எண்ணெய்கள், குளூட்டேன், மோனோசோடியம் குளுட்டமேட், செயற்கை நிறமிகள், அடர்த்திக்காக சேர்க்கும் வேதிப்பொருட்கள், கெடாமல் வைத்திருக்கவும், செரிமானத்திற்காகவும் சேர்க்கப்படும் பொருட்களும் இதில் உண்டு.

நுட்பமாக பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு, அடிமைப்படுத்தும் விதமான பொருட்கள் உள்ளன. இதன் விளைவாக ஒருவருக்கு உடல் பருமன், இரண்டாம் நிலை நீரிழிவு நோய், இதயதசை தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இந்த உணவுகளில் புரதம், ஜிங்க்,, மெக்னீசியம், வைட்டமின் ஏ, சி,டி, இ, பி12 ஆகியவை குறைவாக இருக்கும். வயிற்றில் உள்ள செரிமானத்திற்கு உதவும் பாக்டீரியாக்களை இந்த உணவு பாதிக்கிறது.

காமில் அஹ்மது

கார்டியன் வீக்லி

படம் - பின்டிரெஸ்ட்

கருத்துகள்