இடுகைகள்

வெல்மா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மல்யுத்தக்களத்தை குலைக்க நினைக்கும் தொன்மை விலங்கு! ஸ்கூபி டூ குழுவினரின் வேட்டை

படம்
                  ரெசில்மேனியா ஸ்கூபி டூ அனிமேஷன் ஹன்னா பார்பரா வார்னர் பிரதர்ஸ் டபிள்யூடபிள்யூஈ நிகழ்ச்சியில் திடீரென அசம்பாவிதம் ஒன்று நடக்கிறது . அங்கு ஏதோ விலங்கு ஒன்று வந்து வீர ர்களை அடித்துப்போடுகிறது . பல்வேறு அறைகளை அடித்து நொறுக்கிறது . அங்கு மல்யுத்தப்போட்டி தொடர்பாக நடத்தப்பட்ட டிவி டான்ஸில் ஸ்கூபிடூ போட்டியிட்டு வெல்கிறது . எனவே அவர்களுக்கு முழுப்போட்டியை பார்ப்பதற்கான டிக்கெட் கிடைக்கிறது . சேகியும் ஸ்கூபிடூவும் தங்களது துப்பறியும் குழுவை சம்மதிக்க வைத்து போட்டி நடத்தும் இடத்திற்கு செல்கிறார்கள் . அங்கு இவர்கள் செல்வதற்கு முன்னரே வீரர் ஒருவர் படுகாயமுற்று இருக்கிறார் . தொன்மை விலங்கு உயிர்பெற்று வந்துவிட்டதா என வெல்மா தலைமையிலான துப்பறியும் குழு உண்மையைக் கண்டுபிடித்ததா , சாம்பியன் பெல்டை காப்பாற்ற முடிந்ததா என்பதையெல்லாம் மல்யுத்த களத்தில் பரபரப்புடன் சொல்லியிருக்கிறார்கள் .    இந்த தொடரில் ஸ்கூபிடூ மல்யுத்த வீரரின் யுக்தியைப் பயன்படுத்தி பெல்டை கடத்துகிறது . ஹிப்னாடிசம் மூலம் நடக்கும் இந்த திருட்டினால் ஸ்கூபிடுவும் அதன் தோழன் சே

தொன்மையான ரத்தக்காட்டேரி உயிர்பெற்று வந்து திருமணம் செய்ய முயற்சித்தால்.... துப்பறியும் ஸ்கூபி டூபி டூ குழு

படம்
          ஸ்கூபி டூ மியூசிக் ஆப் தி வாம்பயர் அனிமேஷன் வார்னர் பிரதர்ஸ் அனிமேஷன்   பேய்களையும் , குற்றவாளிகளையும் பிடித்து களைப்பில் இருக்கும் மிஸ்டரி மெஷின் குழு , ஓய்வெடுக்க நினைக்கிறது . இதற்காக அவர்கள் ரத்தக்காட்டேரிகள் உள்ள ஊருக்கு செல்கிறது . அங்கு வின்சென்ட் என்பவர் , பரம்பரை வழியில் ரத்தக்காட்டேரிகள் பற்றி கதைகளை எழுதி வருகிறார் . இதற்கென தனது அருங்காட்சியகம் ஒன்றை நிறுவியிருக்கிறார் . ஆண்டுதோறும் ரத்தக்காட்டேரிகளை பெருமைப்படுத்தும் விழாவும் அவரது ஊரில் நடத்தப்படுகிறது . ஆனால் ரத்தக்காட்டேரிகளைப் பற்றிய காதல் நூல்களை எழுதிவரும் காலத்தில் அவரின் திகில் எழுத்துகள் விற்கமாட்டேன்கிறது . இந்த நிலையில் அவரது அருங்காட்சியகத்தில் உள்ள ரத்தக்காட்டேரிக்கு உயிர் வருகிறது . மக்களைக் கொல்லுவதற்காக துரத்துகிறது . குறிப்பாக , ரத்தக்காட்டேரி நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் புதுமையான தொன்மை ரத்தக்காட்டேரியின் சக்திக்கு அடிமையாகிறார்கள் . அதேநேரம் அங்குள்ள நகர மேயர் ரத்தக்காட்டேரி என்ற வார்த்தையை வெறுப்பவர . அவர் மக்களைத் திரட்டி ரத்தக்காட்டேரி அருங்காட்சியகம் , விழா ஆகியவற்றைத்

ஸ்கூபி டூ தியரிகள் - நாம் அறியாத ரகசியங்கள்!

படம்
1960 ஆம் ஆண்டு வெளியான ஹன்னா பார்பரா சீரிஸைச் சேர்ந்த ஸ்கூபி டூ மிகப் பிரபலமான அனிமேஷன் தொடர். இத்தொடர் பற்றிய பல கேள்விகள் உங்கள் மனதில் இருக்கலாம். இங்கு முடிந்தவரை சில விஷயங்களுக்கு பதில் சொல்ல முயற்சித்திருக்கிறோம். ஸ்கூபி டூ என்பது ரஷ்யாவைச் சேர்ந்த லைகா என்ற நாயை மாடலாக கொண்டு உருவாக்கப்பட்டது. அப்போது ரஷ்யா, அமெரிக்காவுக்கு இடையே விண்வெளிப்போர் இருந்தது. இதற்கு ரசிகர்களின் தியரி, ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்ட ஸ்கூபி டூ, மனிதர்களின் பேச்சை புரிந்துகொள்ளக்கூடியது. மிஸ்டரி.இன்க் எனும் கம்பெனியின் நான்கு ஆட்களோடு ஒன்றாக சுற்றுவது ஸ்கூபிடூவின் வேலை. சேஜி எனும் கதாபாத்திரம் ஸ்கூபியோடு எப்போதும் கூடவே இருப்பது. இருவரும்தான் அனைத்து விஷயங்களிலும் உள்ளே நுழைந்து கண்டுபிடிப்பது. எல்லாமே குறியீடு ஸ்கூபி டூ பேய் மர்மங்களை துப்பறியச் செல்லும் அனைத்து இடங்களுமே பேய் பங்களா மாதிரியே  இருக்கும். ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? அப்போது பொருளாதார மந்தநிலை நிலவியது. அதைக் குறிக்கும் குறியீடுகளாக சுரங்கம், மனிதர்கள் இல்லாத பாழடைந்த நகரம் என குற்றம் நடைபெறும் இடங்களாக காட்டுவார்க