இடுகைகள்

மாற்றுப்பாலின சாதனையாளர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூல்களை வாசி, மூடத்தனத்தை ஒழி - பார்பரா கிட்டிங்ஸ்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் பார்பரா கிட்டிங்ஸ் 1932 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த மாற்றுப்பாலின ஆர்வலர். இன்று ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு கிடைத்துள்ள உரிமைகளுக்காக இறக்கும் வரை போராடினார். அமெரிக்க நூலகங்களில் மாற்றுப்பாலினத்தவருக்காக பல்வேறு நூல்களை சேகரித்து நாளிதழ்களில் எழுதி அவர்களுக்காகப் பாடுபட்டார். மாற்றுப்பாலினத்தவரை சிறந்த முறையில் நாவலில் எழுதுபவர்களுக்கு பார்பார கிட்டிங்ஸ் என்ற பெயரில் விருதும் கூட வழங்கப்பட்டு வருகிறது. 1972 ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கை என்பது மனநல குறைபாடு என்ற கருத்து அமெரிக்க சமூகத்தில் இருந்தது. அதனை நீக்க நிறைய எழுதினார். பேசினார். இவர் அமெரிக்காவில் சமூக செயற்பாட்டாளராக இருந்தாலும் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிறந்தவர். அமெரிக்க அரசில் தந்தைக்கு வேலை கிடைக்க, இங்கு இடம்பெயர்ந்து வந்தனர். டெலாவரில் இவருக்கு வீடு அமைந்தது. பள்ளிக்குச் சென்றவருக்கு பெண்தோழிகளின் மீது பெரும் பித்து இருந்தது. இதனால் இவரை ஓரினச்சேர்க்கையாளர் என ஆசிரியே முத்திரை குத்தியதுதான் சோகம். இதனால் ஹானர் சொசைட்டி எனும் அமைப்பில் பார்பரா நிராகரிக்கப்பட்டார். அப்போது ஓரினச்ச

அகதிகளின் உரிமைக்காக போராடிய மனிதர்! - பேயார்ட் ரஷ்டின்

படம்
பேயார்ட் ரஷ்டின் அமெரிக்காவில் 1912 ஆம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்க சமூகத்தில் மனித உரிமைகள், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான உரிமைகள் பற்றி பேசிய ஆளுமை இவர். அமெரிக்க அதிபரின் விருதைப் பெற்ற சாதனையாளரும் கூட. 1941 ஆம் ஆண்டு வாஷிங்டன் மூவ்மெண்ட் எனும் இயக்கத்தைத் தொடங்கினார். மார்ட்டின் லூதர் கிங்குடன் இணைந்து செயல்பட்டு, அகிம்சை, கருப்பினத்தவர்களுக்கான இனவேற்றுமை, வேலைவாய்ப்பு பாகுபாடு ஆகியவற்றைத் தீவிரமாக எதிர்த்தார். பென்சில்வேனியாவில் பிறந்து நியூயார்க் நகரில் இறந்த ரஷ்டின், அதுவரையிலும் மனித உரிமைகள், அகதிகளுக்கான உதவிகள் என உழைத்துக்கொண்டே இருந்தார். வியட்நாம், கம்போடியாவிலிருந்து வந்த அகதிகள், ஹைதி அகதிகள் என உழைத்த சமயத்தில்தான் உலகிலிருந்து விடைபெறும் அழைப்பும் வந்தது. பென்சில்வேனியாவின் வெஸ்ட் செஸ்டரில் பிறந்த ரஷ்டினை வளர்த்த பொறுப்பு அவரின் தாத்தா - பாட்டியைச் சேரும். ஜூலியா ஜெனிஃபர் ரஷ்டின் தம்பதிக்கு பனிரெண்டு பிள்ளைகளில் ஒன்பதாவது பிள்ளை பேயார்ட் ரஷ்டின். அவரின் குடும்பம் உணவகம் வைத்திருந்தனர். வருமானம் வர நல்ல பெரிய வீட்டில்தான் ரஷ்டின் வளர்ந்தார். அவரின் பெற்ற

ஓடுக்கப்பட்டோருக்கான உரிமைக்குரல்! - லாங்டன் ஹியூஸ்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் கவிஞர் லாங்டன் ஹியூஸ் அமெரிக்காவில் மிசோரியில் 1902 ஆம் ஆண்டு பிறந்தார் ஹியூஸ். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கைத தொடர்பான கவிதைகள், கட்டுரைகள், நாளிதழ் பத்திகள் எழுதியுள்ளார். இவர் பிறந்ததும் கணவரை விட்டு தாய் பிரிந்து கிளீவ்லாந்து வந்தார். அங்கு அவரின் பாட்டியுடன் சேர்ந்து வசிக்கத்தொடங்கினார். ஆற்றைப் பற்றி பேசும் நீக்ரோ என்ற கவிதையை பள்ளிப்பருவத்தில் எழுதினார். அது பிரசுரமாகவே எழுத்து பற்றிய நம்பிக்கையைப் பெற்றார். 1921 ஆம் ஆண்டு தி கிரிசிஸ் என்ற பத்திரிகையில் அக்கவிதை பிரசுரமானது. பின்னர், கவிதைகளை தொடர்ந்து  எழுதிக்கொண்டிருந்தவருக்கு 1925 ஆம் ஆண்டு ஆப்பர்சூனிட்டி இதழின் பரிசும் கிடைத்தது. அதோடு இரு நண்பர்களான அர்னா, வெச்டன் ஆகியோரின் நட்பும் கிடைத்தது. இவர்களின் நட்பு வாழ்நாள் முழுமைக்கும் தொடர்ந்தது. பல்கலைக்கழக படிப்புக்காக வந்தவருக்கு ஹார்லேம் நகருடன் நீடித்த தொடர்பு ஏற்பட்டது. இருள் நகரம் என்று அதனை எப்போதும் குறிப்பிடுவது ஹியூஸின் பாணி. 1926,27 ஆண்டுகளில் தி நேஷன் உள்ளிட்ட பத்திரிகைகளில் சிறந்த ஆப்பிரிக்க அமெரிக்க கவிஞராக பாராட்டு பெ

நவீன தலைமுறையின் போராட்டக்குரல் - அலிசியா கார்ஸா!

படம்
out.com மாற்றுப்பாலின சாதனையாளர்கள்! அலிசியா கார்ஸா கலிஃபோர்னியாவின் ஓக்லாந்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர். தி கார்டியன் பத்திரிகையில் கட்டுரைகளை எழுதியுள்ளார். தி நேஷன் பத்திரிகையில் செயற்பட்டவர், பெண்களுக்கான பல்வேறு அமைப்புகளில் செயல்பட்டுள்ளார். பிளாக் லிவ்ஸ் மேட்டர் எனும் அமைப்பின் துணை நிறுவனர் அலிசியா. சாண்டியாகோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலையில் படித்தார். அப்போதே, பெண்களுக்கான உரிமைகள், கருத்தடுப்பு விஷயங்களைப் பற்றிப் பேசினார். பிளாக் லிவ்ஸ் மேட்டர் எனும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகள் பேசும் அமைப்பின் ஸ்லோகன் போன்றவற்றை இவரே உருவாக்கினார். தனது பாலின விருப்பத்தை வெளிப்படையாக அறிவித்தவர், சக பெண் துணையான திருநங்கையுடன் வாழ்ந்து வருகிறார். சான்பிரான்சிஸ்கோ கடற்புர பகுதியில் பல்வேறு மனித உரிமைச் சம்பவங்களை செய்தவர், இவர். இதற்காக சில விருதுகளையும் வென்றிருக்கிறார். ட்ரேவோன் மார்ட்டின் என்ற இளைஞர், ஜார்ஜ் ஸிம்மர்மேன் என்பவரால் அநீதியாக சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்காக நீதிவேண்டி போராடியதில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு. மேலும் மாணவர் உரிமை, இயற்கை வளங்கள