இடுகைகள்

சார்லஸ் மேன்சன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொலைகார கூட்டாளிகள்- கொலைக்கு ஒத்தாசை செய்யும் நபர்கள் 1

படம்
  சார்லஸ் மேன்சன், வெள்ளையர்களுக்கு எதிராக கறுப்பினத்தவர்கள் வளருகிறார்கள் என்ற வெறுப்பு வாதத்தைத் தூண்டிவிட்ட மத தலைவர். இவர் தனது வெறுப்பு பேச்சு மூலம் 37 கொலைகளை   செய்தார். ஆனால் எந்த கொலையையும் மேன்சன் நேரடியாக செய்யவில்லை. அனைத்து விஷயங்களையும் தனது குழுவினர் மூலம் சிறப்பாக செய்வதே அவரது வழக்கம். தனது கருத்துகளை பிறர் மூளையில் செலுத்தி அவர்களை தனது குடும்பம் என நம்ப வைத்து கொலைகளை   செய்ய வைப்பது மேன்சனின் பாணி. இந்த வகையில்தான் அவர் ரஷ்ய இயக்குநர் ரோமன் போலான்ஸ்கியின் கர்ப்பிணி மனைவி உட்பட ஐந்து நபர்களை கொன்றனர். இந்த கொலை வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது மேன்சனை ஜூரிகள் குற்றம்சாட்டினாலும் கூட நேரடியான ஆதாரம் கிடையாது. அவரது சீடர்கள் கொலை குற்றத்தை ஏற்றுக்கொண்டனர். இப்படி கொலைகாரர்களுக்கு உதவும் நண்பர்கள் குற்ற இலக்கியத்தில் எப்போதும் உண்டு. சாத்தானுக்கும் நண்பர்கள் உண்டு என்பார்களே அந்த வகைதான்.   ஆண்களுக்கு பெண்கள் உதவுகிறார்கள் என்றால் அங்கு பிடிஎஸ்எம் வாழ்க்கை முறையில் வருவது போல எஜமான் அடிமை உறவு   இருக்கலாம். அவர்கள் கொலை செய்வதை, உடலை புதைப்பது...