இடுகைகள்

பின்லேடன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வன்முறையைக் கொண்டாடும் தீவிரவாத இயக்கங்கள்

படம்
  தாலிபன் ஆப்கானிஸ்தானை ஆளுகின்ற தீவிரவாதக் குழு. மதநம்பிக்கைப்படி ஆட்சி நடத்துபவர்கள். இவர்களுக்கு எதிராக இருந்த பஞ்ஷிர் பகுதியையும் நவீன ஆயுதங்களோடு, ராணுவப் பயிற்சியோடு கையகப்படுத்திவிட்டனர்.  இவர்களை ஊக்குவிப்பது பாகிஸ்தான் நாடு. தாலிபன் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை பாகிஸ்தானின் க்வெட்டா நகரில் சுலபமாக சந்திக்கலாம்.  ஹபிபுல்லா அகுந்த்ஸாடா, மொகமது ஹசன் அகுந்த், அப்துல் கானி பாரதர் ஆகியோர் தாலிபன் அமைப்பின் முக்கியமான தலைவர்கள்.  ஹக்கானி குழு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற குழு. இப்போது தாலிபனில் முக்கியமான அங்கம்.  தாலிபன், அல்கொய்தா ஆகிய இரு தீவிரவாத இயக்கங்களையும் இக்குழு ஒருங்கிணைக்கிறது.  இதனை தொடங்கியவர் ஜலாலுதீன் ஹக்கானி. அவரின் மகன் சிராஜூதீன் இக்குழுவின் முக்கியமான தலைவர். புதிய தாலிபன் அரசில் இவரும் முக்கியமான அங்கம். அதாவது அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார்.  வடக்கு கூட்டணி தாலிபன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கூட்டணி. பஸ்துன் இஸ்லாமிய கூட்டணி. எப்போதும் தாலிபன்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள். பஞ்சிர் பள்ளத்தாக்கிலிருந்து தாலிபன்களை எதிர்க்கிறார்கள். இவர்களை தாக்கி பகுதிய

வர்த்தக மையத் தாக்குதலை மையமாக கொண்ட திரைப்படங்கள்!

படம்
  யுனைடெட் 93 தீவிரவாதிகள் கடத்திய நான்காவது விமானத்தில் பயணித்த பயணிகள் பற்றியது. ஏறத்தாழ அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமான படம். இந்த விமானத்தையும் ஏதாவது கட்டிடத்தில் செலுத்தி வெடிக்க வைப்பதுதான் திட்டம். ஆனால் அதனை மக்கள் நெஞ்சுரத்தோடு போராடி முறியடித்தனர். பால் கிரீன்கிராஸ் என்பவரின் படம் இது.  வேர்ல்ட் டிரேட் சென்டர் அமெரிக்க தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் இரு வீரர்களைப் பற்றிய கதை இது. ஆலிவர் ஸ்டோன் படத்தை இயக்கியிருந்தார்.  ஜீரோ டார்க் தேர்டி அல்கொய்தா தலைவர் பின்லேடனை வேட்டையாடிய சம்பவத்தை தழுவிய படம் இது. 2012ஆம் ஆண்டு கேத்தரின் பிக்யிலோ எடுத்த திரைப்படம்.   

வர்த்தக மையம் தாக்குதல் தொடர்பான நூல்கள்!

படம்
 தி லூமிங் டவர் ஐந்தாண்டு ஆராய்ச்சி, நூற்றுக்கும் மேலான நேர்காணல்கள் ஆகியவற்றைக் கொண்ட நூல். தாக்குதலை நடத்தியவர்களின் மனநிலையை சிறப்பாக பிரதிபலித்து புலிட்சர் விருது வென்றது. இதனை வர்த்தக மையம் சார்ந்த நூல்களில் முக்கியமாக கருதுகிறார்கள்.  ஃபாலிங் மேன் அமெரிக்க வர்த்தக மையம் தாக்கப்பட்டபிறகு டான் டிலில்லோ என்ற நபரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை விவரிக்கிற நாவல் இது.  டைரக்டரேட் எஸ் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் செய்த போர் பற்றிய நூல். அல்கொய்தா எப்படி உருவானது, அமெரிக்காவில் வர்த்தக மையம் தாக்கப்பட்டபிறகு ஆப்கானில் அல் கொய்தா வளர்ச்சி பெற்றதை நூல் விவரிக்கிறது புலிட்சர் விருது பெற்ற நூலை பத்திரிகையாளர் ஸ்டீவ் கோல் எழுதியிருக்கிறார்.  தி ரைஸ் அண்ட் ஃபால் ஆப் ஒசாமா பின்லேடன் பத்திரிகையாளர் பீட்டர் பெர்ஜென் எழுதியுள்ள நூல் இது. அமெரிக்க தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாகவே பின்லேடனின் வாழ்க்கையைப் பதிவு செய்ய முயன்றிருக்கிறது. 

உளவு பார்க்கும் விலங்குகள் - பயிற்சி கொடுக்கும் அமெரிக்கா!

படம்
giphy தெரிஞ்சுக்கோ! விலங்குகளை உளவு பார்க்க பயன்படுத்துவது தொன்மைக் காலத்திலிருந்து நடைபெற்று வருகிற சங்கதி. மனிதர்கள் என்றால் உடனே போட்டுத்தள்ளி விடுவார்கள். ஆனால் புறா, கிளி, மீன் என்றால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. நஷ்டம் குறைவு. எனவே, உளவு பார்க்க விலங்குகளை அனைத்து நாட்டு ராணுவங்களும் பயிற்றுவிக்கின்றன. ஐஎஸ் தீவிரவாதி தலைவரையும் இம்முறையில் உளவு பார்த்து நாயை விட்டு கண்டறிந்தது அமெரிக்கப்படை. அண்மையில் பெலுகா திமிங்கலம் நார்வேயில் பிடிபட்டது. அதில் செயின் பீட்டர்ஸ்பர்க்கின் சொத்து என எழுதப்பட்டிருந்தது. அனைவரும் ரஷ்யாவை குற்றம் சாட்ட, எங்களுக்கும் அந்த மீனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என காசை வெட்டிப்போட்டது போல ரஷ்யா பேசியது. டேட்டா அமெரிக்காவில் 2012ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஸ்பாவார் அமைப்பு,  85க்கும் மேற்பட்ட டால்பின் மீன்களை உளவு பார்க்க பயிற்றுவித்து வருகிறது. மேலும் இந்த அமைப்பு 50 கடற்சிங்கங்களை - வால்ரஸ்  கட்டுப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் நாட்டிலிருந்து இந்தியா எல்லைக்குள் 4.5 கி.மீ. பறந்து வந்த புறாவை இந்திய அதிகாரிகள் கைது செய்தனர். எப்போது