இடுகைகள்

வரலாறு - சைகைமொழி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காற்றில் விரல்மொழி - சைகைமொழி வரலாறு

படம்
காற்றில் விரல்மொழி!  மொழி ஜோதிகா பள்ளிக் குழந்தைகளிடம் விரல்களால் பேசுவாரே, அதேமொழிதான். சாதாரணமாக செய்திகளை மக்களுக்கு பேச்சு வழியாக கூறலாம். ஆனால் காது கேளாத, பேசமுடியாதவர்கள் இதனை எப்படி புரிந்துகொள்வார்கள்? இதற்கென அரசு தொலைக்காட்சிகளில் சைகைமொழியில் செய்திகளை விளக்கி கூறுவது வழக்கம். இன்று இச்செய்திமுறை பெரும்பாலான டிவிகளில் வழக்கொழிந்துவிட்டது. காதுகேளாத, பேசமுடியாத குழந்தைகளுக்கென நர்சரி முதல் நான்காவது வரையிலான சைகைமொழியை நொய்டா காதுகேளாதோர் சங்கம்(NDS), பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு மாநில குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறது. தில்லியைச் சேர்ந்த ரூமா ரோகா, இம்மையத்தை 2005 ஆம் ஆண்டு தொடங்கியபோது இருந்த மாணவர்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து 75 ஆக அதிகரித்துள்ளது. இப்பள்ளியில் பணியாற்றுபவர்கள் 70 சதவிகிதம் பேர் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. காதுகேளாதோரின் பிரச்னைகளுக்கு இறுதியாக செவிசாய்த்த இந்திய அரசின் சமூநலம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, 2015 ஆம் ஆண்டு சைகைமொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிமையத்தை(ISLRTC) தில்லியில் தொடங்கியது. இம்மையம், இந்த ஆண்டின் மார