இடுகைகள்

பெரியார்தாசன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிராமணர்களை நிராகரித்து வேதங்களை புறக்கணித்து புத்தர் காட்டும் தம்ம நெறி - புத்தரும் அவர் தம்மமும் - அம்பேத்கர்

படம்
 புத்தரும் அவர் தம்மமும் - அம்பேத்கர்  தமிழில் பெரியார் தாசன் வெளியீடு பெரியார் தாசன்  புத்தரின் வாழ்க்கை, அவரது கொள்கைகள் பற்றிய நூல். இதை அம்பேத்கரே ஆராய்ந்து எழுதியிருக்கிறார். அம்பேத்கர் எழுதிய நூல்களில் புத்தரும் அவர் தம்மமும் நூல் முக்கியமானது. இந்தியாவில் உள்ள மதங்களில் பௌத்தம் முக்கியமானது. நிர்வாக ரீதியாக இந்து மதத்தில் பௌத்தம் சீக்கியம் உள்ளடங்கியது என தேசியவாதிகள் கூறுகின்றனர்.  பௌத்தம் எவ்வாறு வேதங்களிலிருந்த மாறுபட்டுள்ளது என்பதை உயர்வெய்திய புத்தர் விளக்குகிறார். நூலின் பக்கங்கள் ஐநூறுக்கும் அதிகமானவை. அவை அனைத்திலும் கூறப்படும் விஷயங்களைப் படித்தால் மதம் என்பது என்ன, அது மனிதர்களுக்கு பயன்படும் விதம் ஆகியவற்றை தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.  பௌத்தத்திலுள்ள பல்வேறு கொள்கைகளை திருடி தன்னை சற்றே மாற்றிக்கொண்டாலும் பிராமணத்துவம் மனிதர்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையவில்லை. ஒட்டுமொத்த சமூக அமைப்பும் சுரண்டலுக்கானதாகவே இருக்கிறது. மனிதகுல முன்னேற்றத்திற்கானதாகவே மதம் அமையவேண்டும். அவ்வாறு அமையாதபோது, அதன் தேவையே இல்லை என புத்தர் பிராமணத்துவத்தை, வேத மதங்களை தவிர்க்கிறார்.