இடுகைகள்

மழை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காட்டுத்தீக்கு காரணம் என்ன?

படம்
  காட்டுத்தீக்கு காரணம் என்ன? அண்மையில் நீலகிரியில் உள்ள குன்னூர் காட்டுப்பகுதியில் காட்டுத்தீ பற்றியது. அதை அணைக்க இந்திய விமானப்படையின் உதவி வழங்கப்பட்டது. மாநில வனத்துறையும் தீயை அணைக்க பாடுபட்டனர். இதற்காக எம்ஐ 17 வி5 என்ற ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. பம்பி பக்கெட் மூலம் பதினாயிரம் லிட்டர் நீர் செலவானது. காட்டில் உள்ள தீயை அணைக்க நிலப்பரப்பு வழியாக வீரர்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் பம்பி பக்கெட் பயன்படுத்தப்படுகிறது. குளம், ஏரியில் இருந்து நீரை எடுத்து வந்து அப்படியே தீ மீது ஊற்றுகிறார்கள். இதற்கென பக்கெட்டில் கீழ்ப்புறம் சிறப்பு வால்வு அமைக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் நவம்பர் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை அதிகளவு காட்டுத்தீ சம்பவங்கள் நடக்கிறது. அதிலும் பிப்ரவரி, ஏப்ரல் மே மாதங்களில் காட்டுத்தீ பாதிப்பு அதிகமாக நடைபெற்று வருகிறது.  இந்திய வன ஆய்வுத்துறை, 2019ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுப்படி, 36 சதவீத காட்டுத்தீ சம்பவங்கள் ஆண்டுதோறும் நடந்து வருகின்றன. 4, 6 சதவீதம் என்று ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்கள் மட்டுமே தீவிரமானவையாக உள்ளன என அறிக்கையில் தெரிய வந்துள்ளது.  2015ஆம் ஆண்டு, உல

விநோதரச மஞ்சரி - புயல்

படம்
  விநோத ரச மஞ்சரி புயல்களுக்கு யார் பெயர் வைத்தது என கேட்கத் தோன்றும் அளவுக்கு பல்வேறு பெயர்களை உலக நாடுகள் சூட்டி வருகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வானியலாளர் ஒருவர் தனக்கு பிடிக்காத அரசியல்வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டி டிரெண்டிங்கை தொடங்கினார். அமெரிக்காவில் 1950களில் பெயர் சூட்டும் வழக்கம் தொடங்கியது. அடுத்து, இதிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கோரி ரோக்ஸி போல்டன் போராடினார். எனவே, அவருக்காக 1979ஆம் ஆண்டில் இருந்து புயல்களுக்கு பெண்களின் பெயரும் வைக்கப்படத் தொடங்கியது. உலக வானிலை அமைப்பு, புயல்களுக்கான பெயர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கிறது. இந்த பட்டியல் நம்மூரில் உள்ள அ, ஆ, இ, ஈ போல அந்த ஊரில் ஏ,பி,சி, டி என வரிசைக்கிரமமாக உருவாக்கப்படுகிறது. மொத்தம் 21 பெயர்கள் இடம்பெறும். க்யூ, யூ, ஒய், இசட் ஆகிய ஆங்கில எழுத்துகள் விலக்கப்பட்டன. இந்த பெயர்கள் 2020,2021 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்டன. ஆலங்கட்டி மழை   பெய்வது வீட்டில் கல் எறிவது போல இருக்கும். இதே வகையில் நாய், பூனை, தவளை ஆகியவை புயலில் வானில் இருந்து பொழிவதுண்டு. இன்னொரு இடத்திலிருந்து

இயற்கையான காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் காலநிலை மாற்ற பாதிப்பு!

படம்
  காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகளில் வெப்ப அலைகள் உருவாகின்றன. இதன் விளைவாக, காற்றிலுள்ள ஈரப்பதம்,வெப்பமான காற்றால் உறிஞ்சிக்கொள்ளப்படுகிறது. இதனால் மழைப்பொழிவு தீவிரமாவது, வெள்ள பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. வெப்ப அலைகள் தொடர்ந்தால், நாட்டில் பஞ்சம் ஏற்படும். கடல் பரப்பில் ஏற்படும் அதிக வெப்பம் தீவிரமான புயல்களை, சூறாவளியை ஏற்படுத்துகிறது. இந்த புயல்களின் சராசரி வேகம் மணிக்கு 150க்கும் அதிகம்.   கடலில் ஈரப்பதம் மிக்க காற்று, சூடான காற்று ஆகியவற்றின் சுழற்சி காரணமாக புயல் உருவாகிறது. சூடான காற்று வளிமண்டலத்தில் உயரமாக மேலே சென்று பிறகு குளிர்ந்து குமோலோனிம்பஸ் என்ற மேகங்களாக உருவாகிறது. இந்த மேகம் மூலமே கனமழை பெய்கிறது. அமில மழை , பள்ளிப் பாடங்களிலேயே உண்டு. கரிம எரிபொருட்கள் நீரில் கரைந்து சல்பியூரிக் அமிலம், நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. இப்படி வேதிப்பொருட்கள் மழையாக மண்ணில் பொழியும்போது மண்ணின் வளம் கெடுகிறது. நன்னீர் நிலைகள் கெடுகின்றன. மரங்கள் அழியத் தொடங்குகின்றன. மின் விளக்குகளின் வெளிச்சமும் மனிதர்களின் உயிரியல் கடிகாரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மின்விளக்கு பத்தொன்

கரிம எரிபொருட்களால் அதிகரிக்கும் கார்பன் டை ஆக்சைடு அளவு!

படம்
  கார்பன் டை ஆக்சைடு வெளியீடு/ காலநிலை மாற்றம் கரிம எரிபொருட்களை எரிப்பதுதான் கார்பன் டை ஆக்சைடு உலகில் அதிகளவு பரவுவதற்கு காரணமாக உள்ளது. நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றை மின்சாரம் உற்பத்தி செய்ய ஆதாரமான பொருட்களாகப் பயன்படுத்துகின்றனர். வீடுகளில் சமைக்கவும், கதகதப்பு ஊட்டவும் கூட பயன்பாட்டில் உள்ளது. தொழில்துறை வளர்ச்சி தொடங்கிய காலம் முதற்கொண்டு, நிலக்கரி மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது. இன்று வரையும் இருந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம், அதன் விலை ஒப்பீட்டளவில் பிற பொருட்களை விட குறைவு. மலிவு. இதனால்தான், சூழல் மாநாட்டில் கார்பன் இலக்குகளை தூரமாக தள்ளிவைத்துக்கொண்டே நிலக்கரியை பயன்படுத்தி வருகின்றனர். அடுத்து, பெட்ரோல், டீசல் பயன்பாடு உள்ளது. இவற்றை பெரும்பாலும் சரக்குப் போக்குவரத்திற்காக பயன்படுத்துகின்றனர். 2015ஆம் ஆண்டு, உலகில் வெளியான கார்பன் டை ஆக்சைடு அளவு 85.5 சதவீதம். இதற்கு, கரிம எரிபொருட்களே முக்கியமான காரணம். கச்சா எண்ணெய்யை அகழ்ந்தெடுத்து அதை தூய்மை செய்து பெட்ரோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய், தார் , பிளாஸ்டிக், கனிம எண்ணெய் என பல்வேறு வகையாக பிரித்து பயன்படுத்

தினசரி இயற்கையில் நடைபெறும் பாதிப்பு, மக்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுகிறது - எழுத்தாளர் மிதுல் பருவா

படம்
  ஸ்லோ டிஸாஸ்டர்  எழுத்தாளர் மிதுல் பருவா அசாம் மாநிலத்திலுள்ள மஜூலி, உலகின் நீளமான ஆற்றுத் தீவுகளில் ஒன்று. எழுத்தாளர் மிதுல் பருவா, இங்குதான் பிறந்து வளர்ந்தார். இவர் தற்போது சமூகவியல், மானுடவியல், சூழல் ஆராய்ச்சி படிப்புகளை பயிற்றுவிக்கும் ஆசிரியராக உள்ளார். மிதுல், ஸ்லோ டிஸாஸ்டர் என்ற நூலை எழுதியிருக்கிறார். இதில் தான் வளர்ந்து வந்த ஆற்றுத்தீவு எப்படி வெள்ளம், மண் அரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு மக்கள் மறு குடியேற்றம் செய்யப்பட்டனர் என்பதை விளக்கி எழுதியுள்ளார். அவரிடம் நூல் பற்றி பேசினோம். பிரம்மபுத்திரா ஆறு, அதன் சவால்கள் பற்றி ஏற்கெனவே எழுதப்பட்டுள்ளது. நீங்கள் மஜூலி ஆற்றுத்தீவில் பிறந்து வளர்ந்திருக்கிறீர்கள். உங்கள் நூலில் முக்கிய அம்சங்களாக கூறியுள்ளவை எவை? ஸ்லோ டிஸாஸ்டர் நூலில், வெள்ளம், ஆற்றுபரப்பு அரிப்பு ஆகியவை மஜூலியை எப்படி பாதிக்கிறது என்பதை விளக்கி எழுதியுள்ளேன். இது பிரம்மபுத்திரா ஆற்றின் பகுதியில் கூடுதலாக நடைபெறும் விளைவு எனலாம். இங்கு வாழும் மக்களின் தினசரி வாழ்க்கை, இயற்கை நெருக்கடிகளால் எப்படி மாறுகிறது என்பதை நூலில் விளக்கமாக எழுதி பதிவு செய்துள்ளேன். நான் ப

காலநிலையைக் கட்டுப்படுத்தும் மனித முயற்சிகள் - மேக விதைப்பு, மேக வெளுப்பு

படம்
    காலநிலையை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியுமா?   உலக நாடுகளில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 800 கோடியை உலகம் எட்டிவிட்டது. இதில் முதலிடம் சீனா, என்றால் அடுத்தது இந்தியாதான். ஒப்பீட்டளவில் சீனாவின் மனிதவளம் பெற்ற பொருளாதார வளர்ச்சியை இரண்டாவது இடத்தில் இருந்தால் இந்தியா பெற முடியவில்லை. இதற்கு தொலைநோக்கு இல்லாத தலைவர்கள் நாட்டை வழிநடத்துவதுதான் என்பதை தனியாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மக்களுக்கான இயற்கை வளங்கள் நீர், நிலம், உணவு என அனைத்துமே குறைந்து வருகிறது. இதை சரிசெய்ய இயற்கை நிகழ்வுகளை புரிந்துகொள்வது அல்லது அதை கட்டுப்படுத்துவது என இரு வழிகள் இருக்கின்றன. அதைப்பற்றித்தான் நாம் இப்போது படிக்கப் போகிறோம். இப்போது நிறைய மாநிலங்களில் அதிகமாக மழை பெய்வது, சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருந்தும் பருவமிருந்தும் கூட மழை பெய்வதே இல்லை. இந்த பிரச்னையை க்ளவுட் சீடிங் முறையில் தீர்க்க முடியும். இதற்கான சோதனை 1946ஆம் ஆண்டே நடைபெற்றது. செயற்கையாக மழை பொழிய வைக்கும் முயற்சி தேவையா என்றால், மழை பொழிவு மட்டுமே இயற்கையாக மண்ணில் உள்ள ஆற்றலை, விதைகளை முளைக்கும் திறன

மழையால் ஏற்படும் மந்தநிலை - கடிதங்கள் - கதிரவன்

படம்
  மழையால் மந்தநிலை ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இன்று அதிகாலை முதல் மழை பெய்துகொண்டே இருக்கிறது . சூரியனைப் பார்க்கவே முடியவில்லை . டீ குடிக்க வெளியே போனால் மழை விடவில்லை . அந்த இடத்திலும் போட்டி போட்டு ர . ரக்கள் அதிமுக ஆபீசுக்கு வந்துவிட்டார்கள் . அவ்வை சண்முகம் சாலை முழுக்க ஆம்புலன்ஸ் நீளத்திற்கு வண்டிகளைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர் . போக்குவரத்து நெரிசலுக்கு வேறு என்ன காரணங்கள் வேண்டும் ? ஸ்கைலேப் என்ற தெலுங்குப்படம் பார்த்தேன் . ஆந்திராவில் உள்ள ஏழைமக்கள் வாழும் ஊர் . அந்த ஊரின்மீது விண்கல் வந்து மோதப்போவதாக செய்தி . அது மக்களை எப்படி பாதிக்கிறது என்பதே படக்கதை . இதனூடே ஜமீன்தார் மகள் கௌரி எப்படி உண்மையான பத்திரிகையாளராகிறாள் , மருத்துவ உரிமம் தடைபட்ட ஆனந்த் எப்படி தனது முதல் கிளினிக்கை கிராமத்தில் தொடங்கி வெல்கிறான் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள் . இன்று ஆபீசில் ஒரு கட்டுரை மட்டுமே எழுதினேன் . மழை பெய்தால் மனம் வேலையில் குவிய மாட்டேன்கிறது . படிக்கவேண்டிய அறிவியல் இதழ்கள் நிறைய உள்ளன . அவற்றையும் இனி படிக்க வேண்டும் . துப்பறியும் சாம்பு - 2 நூலி

மழையிலும் தொடரும் வழிகாட்டுதல் சேவை!

படம்
  அடாத மழையிலும் விடாத சேவை ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இன்று எங்கள் மயிலாப்பூர் பகுதியில் நல்ல மழை . மழை இடைவேளை விட்டு விட்டு பெய்தது . இதனால் சாலைகள் குட்டைகளாகவே மாறிவிட்டன . சாப்பிட அறைக்கு வரும்போது , பேன்ட் முழங்கால் அளவுக்கு நனைந்துவிட்டது . அடைமழை பெய்யும் நேரத்தில் கூட பெண் ஒருவர் குடை பிடித்துக்கொண்டு என்னிடம் வந்து ஏவிஎம் ராஜேஸ்வரி மண்டபம் செல்ல வழி கேட்டார் . ஆச்சரியம் ... வழி சொல்லிவிட்டுத்தான் நகர்ந்தேன் . அடாத மழையிலும் என்னுடைய தேவை உலகிற்கு இருக்கிறது என நினைத்துக்கொண்டேன் . எங்கள் நாளிதழ் இன்னும் தொடங்கப்படவில்லை . இப்போதெல்லாம் ஆபீசுக்கு வருவதே சிலசமயம் எதற்கு என மறந்துபோய்க் கொண்டிருக்கிறது . உதவி ஆசிரியர் எழுத்தாளர் பாலபாரதி டெங்குவால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கிறார் . அலுவலகத்தில் அதற்குள் இன்னொருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுமுறை எடுத்துவிட்டார் . மழைக்கால காய்ச்சல் என நினைக்கிறேன் . ஷோபாடே எழுதிய நூலை தொடர்ச்சியாகப் படித்துக் கொண்டிருக்கிறேன் . மத்திய அரசு , அரிசியில் இரும்புச்சத்து சேர்ப்பது பற்றிய கட்டுரை ஒன்றை ஃபிரன்ட்லைனில் பார்த்த

டெய்லி புஷ்பத்தின் காரியக்கார ராஜதந்திரம் - மீட்டருக்கும் மேலே ராஜதந்திரம்!

  இனவெறுப்பால் அழியும் மக்களின் வாழ்வு ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இன்று ராயப்பேட்டையில் மதியம் ஒரு மணிநேரம் மழை பெய்தது . சாப்பிடக் கிளம்பிச் சென்று மழையில் முழுமையாக நனைந்துவிட்டேன் . மாலையில் சாலையில் தேங்கிய மழைநீர் வடிந்துவிட்டது . அசாமில் வங்கமொழி பேசும் முஸ்லீம்களை பாஜக அரசு அடித்து விரட்டி வீடுகளை இடித்து வருகிறது . இதைப் பற்றிய கட்டுரையை ஃபிரன்ட்லைனில் படித்தேன் . மோசமான நிகழ்ச்சி . 40 ஆண்டுகாலமாக அங்கு வாழ்ந்து வந்த மக்களின் வாழ்க்கை இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்துவிட்டது . உள்ளூர் நிர்வாகம் வீட்டை இடிப்பது பற்றிய செய்தியை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்திருக்கிறது . வீடுகளை அரசு இடிப்பதை தடுத்த மக்களை காவல்துறை துப்பாக்கியால் சுட்டு தடுத்துள்ளது . பலருக்கு மார்பிலும் , வயிற்றிலும் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன . மோடியின் அயராத உழைப்பினால் பசி பட்டினி பட்டியலில் இந்தியாவுக்கு ,101 ஆவது இடம் கிடைத்துள்ளது . பாக் . இன் உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐ செய்யவேண்டியதை இந்தியாவில் ஆர்எஸ்எஸ் - பாஜக செய்வது ஆச்சரியமானதுதான் . பாஜகவைத் தேர்ந்தெடுத்த வட இந்திய முட்டாள்களை என்ன சொல