இடுகைகள்

புரோகிராமிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

31 வயதில் 120 பேர்கொண்ட குழுவுக்குத் தலைவர்! - ஜோஹோ பள்ளியின் சாதனைக் கதை

படம்
  ஸ்ரீதர் வேம்பு, இயக்குநர், ஜோஹோ பொதுவாக தமிழ்நாட்டில் சாதித்து பெரிய இடங்களுக்கு நகர்பவர்கள், எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். விவசாயிகள், வீட்டுவேலை செய்பவர்களாகவே இருப்பார்கள். இந்தியளவில் எடுத்துக்கொண்டால், பஞ்சாப்பின் புதிய முதல்வரின் அம்மா, பள்ளிக்கூடத்தில் கூட்டிப்பெருக்கும் வேலை செய்தவர், செய்து வருபவர்தான்.  செய்யும் வேலையை புனிதப்படுத்துவதற்காக சொல்லவில்லை. சாதிரீதியாக, திறன் ரீதியாக நிறைய வேறுபாடுகள் இங்குள்ள மனிதர்களுக்கு இடையே உள்ளது என்பதை கூறவே முந்தைய பாரா.  பார்த்திபனுக்கு வயது 31. ஜோகோ நிறுவனத்தின் மேனேஜ் எஞ்சின் என்ற நிறுவனத்தில் வேலை செய்கிறார். புரோடக்ட் மேனேஜராகப் பணி. இந்தப் பணியில்தான் 120 பேரைக் கட்டி மேய்க்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திபனுக்கு இருந்த கனவு, கட்டுமானக் கலைஞர் ஆவதுதான். ஆனால் அவரது குடும்பம் இருந்த பொருளாதார நிலையில் அது சாத்தியமில்லை என விரைவில் தெரிந்துகொண்டார். நான்கு பேர் கொண்ட குடும்பம், மாதம் அப்பா சம்பாதிக்கும் 3 ஆயிரத்தில்தான் நடந்து வந்தது. ஆங்கிலப்பள்ளியில் படித்தவர்கள், வருமானப் பற்றாக்குறையால் அங்கிருந்து வெள

கணினி புரோகிராமிங் அறிவு தேவை!

படம்
 இந்தியாவில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகிய கல்வி வாரியங்கள் கணினிபுரோகிராமிங்கை பாடமாக கல்வித்திட்டத்தில் சேர்த்துள்ளன. இன்று வீட்டு ஹாலில் உள்ள ஸ்மார்ட் டிவிகள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் கார்டூன் தொடர்களை ஒரம்கட்டியுள்ளன. வீட்டில் விளையாடும் செஸ் போன்ற விளையாட்டுகளும் கூட அந்த காலத்தில் விளையாடிய விளையாட்டுகளாகிவிட்டன. வீட்டினுள்ளே அல்லது வெளியே விளையாடும் விளையாட்டுகளை விட இணைய விளையாட்டுகள், புதிர்களையே சிறுவர்கள் இன்று விரும்புகின்றனர். எனவேதான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், 6,7, 8 ஆம் வகுப்புகளில் விசுவல் பேசிக் மற்றும் ஹெச்டிஎம்எல் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.  ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில், 9, 10ஆம் வகுப்புகளில் ஜாவா, சி மொழி ஆகிய பாடங்கள் கற்றுத்தருகின்றனர். ஆனால் இது கட்டாயமல்ல: மாணவர்களின் தேர்வாகவே இருக்கிறது. தற்போது தொடக்கப் பள்ளியில் படிக்கும் 65 சதவீத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, தற்போதுள்ளவற்றை விட மாறுபட்டதாக இருக்கும் என்று வேர்ல்டு எகனாமிக் ஃபாரம் தன் எதிர்கால வேலைவாய்ப்புகள் என்ற அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. எதிர்கால வாய்ப்புகள் கணினி புரோகிராமிங் ம