இடுகைகள்

மரபணு மாற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரபணு மாற்ற உயிர்களை பிறகோள்களில் உருவாக்க முடியுமா?

படம்
பிபிசி மிஸ்டர் ரோனி பூமியில் உருவாக்கிய மரபணு மாற்ற உயிர்களை நாம் பிறகோள்களில் காப்பாற்ற முடியுமா? இம்முறையில் யோசிப்பது நல்ல விஷயம்தான். ஆனால் டிஎன்ஏ முறையில் நாம் புதிய உயிரிகளை உருவாக்கினால் அவை வாழ்வதற்கு நீர் தேவை. வெள்ளியில்  நீரும் கிடையாது பனிக்கட்டியும் கிடையாது. வியாழனில் உள்ள யூரோபா நிலவில் நீர் உள்ளது. இதில் நாம் உயிர்களை உருவாக்க வாய்ப்புள்ளது. செவ்வாய் கோளில் பாக்டீரியா தாக்குப்பிடித்துவிட்டது. சாக்கடல், அன்டார்க் பகுதியிலும் கூட நுண்ணுயிரிகள் உள்ளன. நீர் இருந்தால் அக்கோளுக்கு ஏற்றபடி உயிர்களை நம்மால் உருவாக்க முடியும். நன்றி - பிபிசி

ஆண்களுக்கு மூன்று மார்பக காம்புகள் சாத்தியமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி ஆண்களுக்கு மூன்று மார்பக காம்புகள் இருக்குமா? ஏன் இப்படி உருவாகிறது? பெரும்பாலான பாலூட்டிகளுக்கு நிறைய மார்பக காம்புகள் உண்டு. மனிதர்கள் தங்கள் பரிணாம வளர்ச்சியில் ஒரு செட் மார்பக காம்புகளோடு நிற்கிறார்கள். இன்றும் பதினெட்டு நபர்களில் ஒருவருக்கு இதுபோல மூன்று மார்பக காம்புகள் உண்டு. இதில் சில ஜீன்கள் மீண்டும் தூண்டப்பட்டால் இப்படி காம்புகள் உருவாக வாய்ப்புண்டு. இந்த ஜீனின் பெயர்  NRG3. இது ஒரு பெரிய குறைபாடு கிடையாது. விரும்பினால் நீங்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிக்கொள்ளலாம். 

வலியறியாத பெண்!

படம்
kth வலியறியாத பெண்! ஸ்காட்லாந்து பெண், மரபணு மாற்றத்தால் வலியிலிருந்து குணமாகும் தன்மையைப் பெற்றுள்ளதோடு, காயத்திலிருந்தும் விரைவாக குணமடைந்திருக்கிறார். இதன்விளைவாக, வலி காயத்திலிருந்து விரைவாக குணமாகும் சிகிச்சைகளைப் பற்றி ஆராய்ச்சிகளை தொடங்கியுள்ளனர்.  ஜோ கேமரூன் என்ற 66 வயது பெண்மணி, ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். மேலும் இடுப்பெலும்பு மாற்று அறுவைசிகிச்சையும் அவருக்குத் தேவைப்பட்டது. இதற்கான சிகிச்சைகள் கடுமையான வலிதரும் என்பதால் கேமரூன் பயத்துடன் இருந்தார். சிகிச்சையின்போது மருத்துவர்கள் அவரது உடல்நிலை, வலி குறித்து கேட்டுக்கொண்டே இருந்தனர். மணிக்கட்டு உடைந்தபோதும், காயங்களிலும் வலி இல்லாததை உணர்ந்தார்.  கேமரூன், ஆக்ஸ்ஃபோர்டு மரபணு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்டார்.  அப்போது அவருக்கு மரபணு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் FAAH எனும் மரபணு வலியற்று இருப்பதற்கு உதவுவதாகக் கண்டறியப்பட்டது. இதில் அதே பெயரிலான என்சைமும் உதவுகிறது. அதேசமயம் இந்த மரபணு அமைதியாக்கப்படுவதால், காயம் வேகமாக குணமாகிறது. அதோடு வலி, காயம் தொடர்பான ப