இடுகைகள்

கேமரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

24/7 அந்தரங்க வாழ்க்கை விற்பனைக்கு! - டிக்டாக் லைவில் இணையும் மக்கள்!

படம்
  அடுத்தவரின் வாழ்க்கையை எட்டிப்பார்ப்பது ஒருவித கிளுகிளுப்பான உணர்வைத் தருகிறது. அதனால்தான் மக்கள் பிக் பிரதர், பிக் பாஸ், ஆகிய நிகழ்ச்சிகளைப்பார்த்துவிட்டு அதில் உள்ள பங்கேற்பாளர்களின் குணங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் இதுபற்றிய காரசார விவாதங்கள் நடைபெறுகின்றன. உண்மையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சம்பளம் உண்டு. அங்கு உருவாகும் பிரச்னைகள் அனைத்துக்குமே எழுத்துப்பூர்வ திரைக்கதை உண்டு. இதெல்லாம் அறிந்தாலுமே மக்கள் உணர்வுபூர்வமான சண்டை, கைகலப்புகளுக்கும் தங்களை மீறி ஒன்றிவிடுகிறார்கள்.  இது சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாக நடைபெறுகிறது. இந்த வகையில் ஜெட்டிஜேம்ஸ், ஆட்டும்ரேயான் என்ற இளம் தம்பதிகள் தங்களின் மூன்று வார வாழ்க்கையை அப்படியே டிக்டாக் லைவ்வில் ஒளிபரப்பினார்கள். வீட்டில் மொத்தம் ஒன்பது கேமராக்கள். படுக்கை அறை, கழிவறையில் கூட கேமரா உண்டு. ஐந்தூறு மணி நேரங்கள் இணையத்தில் தங்களுடைய அந்தரங்க வாழ்க்கையை ஒளிபரப்பி காசு சம்பாதித்தனர்.  லைவ் என்பதால் இதில் நேரடியாக கமெண்டுகளை அடிக்கலாம். பெரும்பாலானவை எதிர்மறையாக இருக்கும். சில கட்டளையிடுவது போல இருக்

பனிச்சிறுத்தையை லடாக்கில் படம் பிடித்தது சவாலான சம்பவம்! - ஆதித்ய டிக்கி சிங்

படம்
  ஆதித்ய டிக்கி சிங் காட்டுயிர் புகைப்படக்கலைஞர் புகைப்படத்துறைக்குள் எப்போது நுழைந்தீர்கள்? 1999ஆம் ஆண்டு. இந்தியாவின் ரந்தம்பூரில் பிபிசிக்கான ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அதற்கான நான்கு பேர் கொண்ட குழுவில் நானும் ஒருவன். ஒளிப்பதிவாளர்கள் தங்கள் பணியில் தீவிரமாக இருந்தனர். நான் பணியின்போது புகைப்படம் எடுக்கும் தேவை இருந்தது. அங்கிருந்தவர்களில் என்னால் மட்டும்தான் கேமராவின் கையேட்டை ஆங்கிலத்தில் படிக்க முடிந்தது. இப்படித்தான் அந்த வேலையை செய்து புகைப்படக்காரனானேன்.  கேமராவை எப்போதாவது சேதப்படுத்தி உள்ளீர்களா? நிச்சயமாக. இரண்டு லென்ஸ்கள், இரண்டு கேமராக்களை சேதப்படுத்தியுள்ளேன். அதை நினைத்து அப்போது பெரிய வருத்தம்... புதிதாக இத்துறைக்கு வருபவர்களுக்கு ஏதாவது அறிவுரை சொல்ல நினைக்கிறீர்களா? பல்லாயிரக்கணக்கான மணி நேரங்கள் நீங்கள் உழைத்தாக வேண்டும். எனவே, தயாராக இருங்கள். உழையுங்கள்.  புலிகளை புகைப்படம் எடுப்பதில் நீங்கள் புகழ்பெற்றவர். அப்படி புகைப்படம் எடுத்ததில் எது சிறந்த விஷயம்? நிலத்தில் வாழும் வேட்டையாடிகளை படம் எடுப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. ரந்தம்பூரில் உள்ள பல தலைமுறை புலிக

விலங்குகளைக் கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பங்கள்!

படம்
  pixabay விலங்குகளை பின்தொடரும்  தொழில்நுட்பம்!  இன்று நவீன வாழ்க்கையில் உருவாகி வரும் தொழில்நுட்பங்கள், இயற்கையைக் காக்கவும் உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, விலங்குகளின் உடலில் மாட்டும் சிறு ரேடியோ டேக் மூலம் அதன் நடமாட்டத்தை எளிதாக கணிக்கலாம்.  தொழில்நுட்பம் அதிகரித்த அதேயளவு, விலங்குகள், தாவரங்களின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. அதனை கவனத்துடன் பாதுகாக்கும் தேவையும் உள்ளது.  காகபோ (kakapo) இன கிளிகளின் மீது டிரான்ஸ்மிட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த முறையில் 201 கிளிகளும் தொலைவிலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  பருந்து (hawk) ஒன்றின் மீது கேமரா, அல்ட்ராசோனிக் மைக்ரோபோன் பொருத்தப்பட்டது. இதன் வழியாக வௌவால் திரள்களின் நடமாட்டத்தை விஞ்ஞானிகள் கண்காணித்தனர். வௌவால்களின் எதிரொலிப்பு திறனை உள்வாங்கி அதனை தானியங்கி கார்களுக்கு பயன்படுத்துவதே அறிவியலாளர்களின் நோக்கம்.  பருந்து, கிளி மட்டுமல்ல சிறு ஆமைக்குட்டிக்கும் கூட நவீன தொழில்நுட்ப கருவிகளை பொருத்தி அதனைக் கண்காணிக்கும் வசதி வந்துவிட்டது. தொண்ணூறுகளில் ஹவாய் மங் சீல் Hawaiian monk seal) ஒன்றுக்கு கேமரா பொருத்தப்பட்டது. இதில் சென்சார

பெருநிறுவனங்களின் போட்டாபோட்டி!

  பெருநிறுவனங்களின் போட்டாபோட்டி ! உலகம் முழுவதும் மக்களுக்கான சுதந்திரத்தன்மையை , இணையம் வழங்கியுள்ளது . இதில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள் அதன் கட்டற்ற தன்மையை தடுத்து வருகின்றன . டெக் உலகில் கூகுள் , மைக்ரோசாப்ட் , அமேசான் , ஆப்பிள் , ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் முக்கியமானவை . இந்த பெரு நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் இத்துறையில் போட்டியிடுவதை தடுத்து வருகி்ன்றன என்ற குற்றச்சாட்டு இப்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது . அமெரிக்கா , இங்கிலாந்து , ஆஸ்திரேலியா , பிரான்ஸ் ஆகிய நாடுகள் , டெக் நிறுவனங்களுக்கு எதிரான சட்டப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளனர் . கூகுளின் சர்ச் எஞ்சின் வழியாக தேடும் தகவல்களில் பெரும்பாலானவை , கூகுளின் நிறுவனங்களிலிருந்து வழங்கும் சேவையாகவே உள்ளது என புகார்கள் கூறப்படுகிறது . மக்கள் , பிற வலைத்தளங்களை விட கூகுளின் தளங்களை விட்டு வேறு தளங்களுக்கு செல்லாதபடி இந்த நிறுவனம் பார்த்துக்கொள்வதாக கூறப்படுகிறது . இதுபற்றி , தி மார்க்அப் என்ற நிறுவனம் இணையவழியில் ஆய்வை மேற்கொண்டது . இதன்படி கிடைத்த 15 ஆயிரம் முடிவுகளை சோதித்ததில்

1984 ஜார்ஜ்வெல் நூலுக்கு எழுபது வயது!

படம்
1984 ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய நாவல். எரிக் பிளேர் என்பவர் ஜார்ஜ் ஆர்வெல் என்ற பெயரில் இந்த நூலினை எழுதினார். இதில் வரும் ஸ்மித் என்பவர் அரசு அதிகாரி. நாளிதழ்களில் வரும் செய்திகளை கவனமான தணிக்கை செய்து அரசுக்கு ஆதரவாக மாற்றி எழுதி மக்களுக்கு பிரசாரம் செய்வதே பணி. இதில் டெலிஸ்க்ரீன் என்ற கருவி வரும். ஏறத்தாழ டிவி போல. ஆனால் இதனை நீங்கள் அணைக்க முடியாது. அதன் வழியாக நீங்கள் கவனிக்கப்பட்டு வருவீர்கள். இரண்டாம் உலகப்போரின் போது டிவி இருந்தாலும், அதனை அறிவியல் புனைவில் பயன்படுத்திய ஆர்வெல்,  முன்னதாகவே இதனை எழுதிவிட்டார். அப்போது ஜெர்மனியில் வீடியோ போன் சிஸ்டம்தான் உருவாக்கப்பட்டிருந்தது. நூல் எழுதிய காலகட்டத்தில் டிவி பார்க்கும் மோகம் அபரிமிதமாக இருந்தது. 2009 ஆம் ஆண்டு கூட அதிகம்தான். 2017 வாக்கில் மெல்ல டிவி செல்வாக்கிழந்து வருகிறது. இப்போது, டிவியின் இடத்தை இணையம், அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகியவை பிடித்து விட்டன. ஆனால் நூலில் வரும் அரசின் கண்காணிப்பு வேறுவகையாக மாறிவிட்டது. அமெரிக்கா, விசா கொடுப்பதற்கு முன்னே பயணிகளின் சமூக வலைத்தள கணக்குகளை ஆராய்ந்த பின்னரே நாட்டில் அனுமதிக்கும்