விலங்குகளைக் கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பங்கள்!
pixabay |
விலங்குகளை பின்தொடரும் தொழில்நுட்பம்!
இன்று நவீன வாழ்க்கையில் உருவாகி வரும் தொழில்நுட்பங்கள், இயற்கையைக் காக்கவும் உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, விலங்குகளின் உடலில் மாட்டும் சிறு ரேடியோ டேக் மூலம் அதன் நடமாட்டத்தை எளிதாக கணிக்கலாம். தொழில்நுட்பம் அதிகரித்த அதேயளவு, விலங்குகள், தாவரங்களின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. அதனை கவனத்துடன் பாதுகாக்கும் தேவையும் உள்ளது.
காகபோ (kakapo) இன கிளிகளின் மீது டிரான்ஸ்மிட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த முறையில் 201 கிளிகளும் தொலைவிலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பருந்து (hawk) ஒன்றின் மீது கேமரா, அல்ட்ராசோனிக் மைக்ரோபோன் பொருத்தப்பட்டது. இதன் வழியாக வௌவால் திரள்களின் நடமாட்டத்தை விஞ்ஞானிகள் கண்காணித்தனர். வௌவால்களின் எதிரொலிப்பு திறனை உள்வாங்கி அதனை தானியங்கி கார்களுக்கு பயன்படுத்துவதே அறிவியலாளர்களின் நோக்கம்.
பருந்து, கிளி மட்டுமல்ல சிறு ஆமைக்குட்டிக்கும் கூட நவீன தொழில்நுட்ப கருவிகளை பொருத்தி அதனைக் கண்காணிக்கும் வசதி வந்துவிட்டது. தொண்ணூறுகளில் ஹவாய் மங் சீல் Hawaiian monk seal) ஒன்றுக்கு கேமரா பொருத்தப்பட்டது. இதில் சென்சார்களும் உண்டென்பதால் நீரின் வெப்பநிலை, ஆழம் ஆகியவற்றை எளிதாக அறிய முடியும்.
ஆய்வாளர்கள், கேமராக்களில் எடுக்கும் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவுடன் இணைக்கிறார்கள். இதனால் எளிதாக தேவைப்படும் படங்களை நொடியில் தேடிப்பெறலாம். ட்ரோன்களில் தெர்மல் கேமராக்களை பொருத்தி விலங்குகளைக் கண்காணிக்கிறார்கள். இதன்மூலம், காட்டுப்பகுதியில் குறிப்பிட்ட விலங்குகள் பகல், இரவில் எங்குள்ளது என துல்லியமாக அறியலாம். எந்திர கற்றல் தொழில்நுட்பம் மூலம் விலங்கினங்களை தானியங்கி முறையில் அறியலாம்.
விலங்கினங்களை தொழில்நுட்பத்தின் வழியாக கண்காணிப்பதற்கு இத்துறையில் அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவது அவசியம். வெளிப்படையாக சூழலியலாளர்கள் தங்கள் படங்களையும் தகவல்களையும் பகிர்ந்துகொள்ளும் தகவல் களஞ்சியத்தை உருவாக்கவேண்டும் என்றார் சூழலியல் ஆராய்ச்சியாளரான தாலியா ஸ்பீக்கர்.
ஆதாரம்
how tech reveals the secret lives of animals
newyork times
கருத்துகள்
கருத்துரையிடுக