காலநிலை பற்றிய குழந்தைகளுக்கான புனைவுக் கதைகள்!

 













காலநிலை பற்றிய நூல்கள்




ரெயின்போ கிரே - ஐ ஆப் தி ஸ்டோர்ம்

லாரா எல்லன் ஆண்டர்சன்

பார்ஷோர்

சீரிசின் இரண்டாவது நூல். ரெயின்போ கிரே தனது காலநிலை பற்றி ஆற்றலை மெல்ல கற்றுக்கொள்ளத் தொடங்குகிறாள். இதன் பின் நடக்கும் சம்பவங்கள், அவளின் ஆற்றல் என்னவானது என்பதை பற்றி பேசுகிறது நூல். 






தி லைட்னிங் கேட்சர் 

கிளார் வேஸ்

ப்ளூம்ஸ்பரி

ஃபோல்டிங் ஃபோர்ட் என்ற கிராமத்தில் நடக்கும் வினோதமான நிகழ்ச்சிகளைப் பற்றி எப்படி விசாரணை செய்து பல்வேறு உண்மைகளை கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை. ஆல்ஃபி, சாம் ஆகிய இருவரும் தான் நாயகர்கள். இவர்களிடம் உள்ள ஆயுதம் பைக், நோட்பேட் அல்ல. கூர்மையான புத்திதான். அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதே நாவலின் மையம். 






எ கேதரிங் ஸ்ட்ரோம்

தம்சின் மோரி

யுகிளான் பப்ளிஷிங்

இதுவும் கூட சீரிசின் தொடர் நாவல்தான். ஸ்டெல்லா, நிம்பஸ் என இருவரும்தான் நாவலை நடத்திச் செல்கிறார்கள். இருவரும் முக்கியமான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். மந்திர தந்திர வியாபாரங்கள் நடைபெறும் நிகழ்ச்சி அது. அங்கு நேரம் சில சிக்கல்களை எப்படி எதிர்கொண்டு மீள்கிறார்கள் என்பதை நாவல் விவரிக்கிறது. 






தி ஸ்ட்ரோம் கீப்பர் பேட்டில்

கேத்தரின் டாயல்

ப்ளூம்ஸ்பரி 

எழுத்தாளர் கேத்தரின் எழுதி வரும் சீரிசின் கடைசி நூல் இது. இறந்துபோன மோரிகன் மீண்டு வந்து பிரச்னை கொடுக்க, தனை ஃபியோன் மாஸ்டர் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை. இறுதி பாக நாவல் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. 

the week junior 






கருத்துகள்