பேட்ஸ்மேன்களை பயப்படுத்துவேன்! - உம்ரான் மாலிக், பந்துவீச்சாளர்

 





உம்ரான் மாலிக், பந்துவீச்சாளர்





உம்ரான் மாலிக்

பந்துவீச்சாளர், சன்ரைஸர்ஸ் அணி


உங்களால் வேகமாக பந்துவீச முடியும் என எப்போது அடையாளம் கண்டு கொண்டீர்கள்?

2018ஆம் ஆண்டு டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடும்போதுதான் எனக்கு பந்துவீச்சு வேகமாக வருவது தெரிந்தது. எப்போது பஞ்சாப் அணி, காஷ்மீருக்கு வந்தாலும் என்னை பந்துவீச அழைப்பார்கள். நான் உள்ளூர் அணியில் விளையாடுவேன். இந்த நிலையில்தான் ஜம்மு காஷ்மீரில் 19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் சோதனை முறையில் இடம் கிடைத்தது. 

நான் அப்துல் சமாத் என்ற அண்ணாவுடன் பந்துவீசி வந்தேன். அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளார். அவர்தான் எனது பந்துவீச்சு வீடியோக்களை சன்ரைஸர் அணி நிர்வாகத்துக்கு அனுப்பிவைத்தார். இதனால் நெட் பௌலராக வேலை கிடைத்தது. அதில் சிறப்பாக செயல்பட்டதால் அணியில் இடம் கிடைத்தது. 

வேகமாக பந்து வீசுவது உங்களை ஊக்கப்படுத்துகிறதா?

நான் பந்துவீசும்போது ஒருவர் மெதுவாக பந்து வீசுகிறார் என்று  விமர்சனம் எழுந்தது. அதற்குப் பிறகுதான் நான் வேகமாக பந்துவீச முயன்றேன்.

இந்த ஐபிஎல்லில் பேட்ஸ்மேன்களை ஸ்டம்புகளை சிதறடித்து ஆட்டமிழக்கச்செய்திருக்கிறீர்கள். அந்த நொடி எப்படியிருக்கும்?

எனக்கு அப்படி பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச்செய்வது பிடித்திருக்கிறது. முடிந்தால், அவர்களது ஹெல்மெட்டையும் பந்துகளால் தாக்குவேன். இது அவர்களை பயப்படுத்தும். இதனால் அவர்களை எனது பந்துகளை எதிர்கொள்ள தடுமாறுவார்கள். பயப்படுவார்கள். 


ஸ்ரேயாஸ் ஐயர் உங்கள் பந்துகளை எதிர்கொள்ள கடுமையான தடுமாறினார். ஹர்திக் பாண்டியாவின் ஹெல்மெட்டில் பந்து பட்டது. பல பேட்ஸ்மேன்கள் உங்களது பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுகிறார்கள் என்பதை கவனித்தீர்களா?

அவர்கள் ஸ்டம்புகளை காப்பாற்ற வேண்டுமே? எனது பந்துகளை எதிர்கொள்ளும்போது அவர்கள் அவர்கள் காலை பின்னால்தான் வைக்கவேண்டும். 

உங்களுக்கு விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்?

இறைவனின் அருளால் அந்த வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். இந்திய அணிக்கு விளையாடுவதுதான் எனது லட்சியம். 

நீங்கள் காஷ்மீரில் எப்படி பயிற்சி செய்கிறீர்கள்?

நாங்கள் தொடக்கத்தில் சிமெண்ட் தரையில் தான் கிரிக்கெட் பயிற்சி செய்தோம். இப்படி பயிற்சி செய்துதான் அப்துல் ஐபிஎல் அணிக்கு தேர்வானார். முன்னர் இருந்ததை விட இன்று காஷ்மீரில் விளையாட்டு மைதானங்கள் நல்ல நிலையில் உள்ளன.

உங்கள் பந்துவீச்சுக்கு யார் ரோல்மாடல்?


எனக்கு வேறு யார் ரோல்மாடல் இருக்க முடியும்? நான்தான் எனக்கு ரோல்மாடல். ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்துவீச்சைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். 

டைம்ஸ் ஆஃப் இந்தியா
கௌரவ் குப்தா









கருத்துகள்