கடலுக்குள் உள்ளே உருவான எரிமலை
கடல் ஆய்வில் வெளியான ஒற்றை எரிமலை!
பசிபிக் கடலில் வடமேற்காக 952 கி.மீ. தொலைவில் பயணித்தால் ஹோனோலுலு என்ற இடத்தைப் பார்க்கலாம். இங்கு கடல்மட்டத்திலிருந்து 52 மீட்டர் உயரத்தில் அமைந்த மலைச்சிகரங்கள் உண்டு. கடல் பறவைகள் பாறைகளின் மீது அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இதில்தான் புகாஹோனு (Puhahonu) எனும் எரிமலை உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. புகாஹோனு என்ற பெயருக்கு, மூச்சை உள்ளிழுக்கும் ஆமை என்று பொருள்.
அண்மையில், இங்கு கடல் படுகை ஆய்வைச் செய்தனர். அப்போதுதான், ஆய்வாளர்கள் ஒற்றையாக இருக்கும் பெரிய எரிமலை ஒன்றை கண்டுபிடித்திருக்கின்றனர். ”நாம் பார்க்கும் பகுதி வெளித்தெரியும் 30 சதவீத மலை. அதற்கு கீழே இன்னும் உள்ளது ”என ஹவாய் பல்கலைக்கழக எரிமலை ஆய்வாளர் மைக்கேல் கார்சியா கூறினார். இதுபற்றிய ஆய்வு 2020ஆம் ஆண்டு எர்த் அண்ட் பிளானட்டரி சயின்ஸ் லெட்டர்ஸ் என்ற இதழில் வெளியாகியுள்ளது. கடலுக்கு கீழே உள்ள மலைகள், எரிமலைகள் என தொடர்ச்சி ஹவாயிலிருந்து ரஷ்யாவின் கிழக்குப்பகுதி வரையில் நீண்டுள்ளது.
ஹவாயிலுள்ள மௌனா லோவா (Mauna Loa,) என்ற எரிமலை, 9,170 மீட்டர் உயரம் கொண்டது. உலகில் பெரிய எரிமலை என கருதப்பட்டது. தற்போது கண்டறியப்பட்டுள்ள புகாஹோனு எரிமலை, 1,50,000 கியூபிக் கி.மீ. அளவில் பாறைகளைக் கொண்டுள்ளது. அதாவது, மௌனா லோவா விட இருமடங்கு பெரிது.
பசிபிக் கடல் பகுதியில் மட்டும் கடலுக்கு கீழே 120க்கும் அதிகமான எரிமலைகள் அமைந்துள்ளன. புகாஹோனு எரிமலையின் லாவா வெப்பம் 1,700 டிகிரி செல்சியஸாக உள்ளது. எரிமலையின் லாவாவிலிருந்து பெறப்பட்ட ஆலிவைன் என ற வேதிப்பொருளை சோதித்து மேற்கண்ட உண்மையை புவியியலாளர்கள் கண்டறிந்தனர்.
தகவல்
discover
jan feb 2022
https://www.livescience.com/puhahonu-largest-and-hottest-volcano-on-earth.html
கருத்துகள்
கருத்துரையிடுக