சூழல் பற்றிய முக்கியமான ஆங்கில வார்த்தைகள்!

 









தெரியுமா?

Net Zero

கார்பன் உமிழ்வை முற்றிலும் ஜீரோவாக்கும் திட்டத்தைப் பற்றி கூறும் வார்த்தை. கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் குறிப்பிட்ட ஆண்டை இலக்காக வைத்துள்ளன. நடைமுறையில், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம் என நிறுவனங்களும் அரசுகளும் கூறுகின்றன. 

Sustainability

எதிர்கால தலைமுறையினர் தங்களது தேவைகளை சமரசம் இல்லாமல் பெறுவது என ஐ.நா அமைப்பு, இந்த வார்த்தைக்கு விளக்கம் அளிக்கிறது. சூழலுக்கு இசைவான  முறையில் நாம் வாழும் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவேண்டியது அவசியம். 

Mitigation and adaptation

பசுமை இல்ல வாயுக்களை குறைக்கும் செயல்கள் என்பது இதற்கான பொருள்.  நிலக்கரியிலிருந்து காற்று, சூரிய ஆற்றல் புதுப்பிக்கும் வழிக்கு மாறுவதை உதாரணமாகக் கூறலாம்.  அடாப்டேஷன் என்ற வார்த்தை, வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகளை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதைக் கூறுகிறது. சூழலுக்கு ஏற்ப சாலைகளை, வீடுகளை அமைப்பதை இதற்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.  

Nature based solutions

மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கான தீர்வுகளை இயற்கையிலிருந்து பெறலாம்.  கார்பனை உறிஞ்சும் காடுகள், மாங்குரோவ் காடுகள், பவளப்பாறை ஆகியவை எப்படி புயல் பாதிப்பைக் குறைக்கின்றன என்பதை உதாரணங்களாக இதற்கு சொல்லலாம்.  

Geoengineering

வளிமண்டலத்தில் ஸ்ட்ரேடோஸ்பியர் அடுக்கில், நீர்த்திவலைகளை அனுப்பி சூரிய கதிர்களை திரும்ப வளிமண்டலத்திற்கு அனுப்பும் முறை. இது தற்காலிக முறை என்றாலும் மாசுபாட்டைக் குறைக்க உதவக்கூடும். 

Carbon pricing

கனடா, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் கார்பன் வரி நடைமுறையில் உள்ளது. கார்பனை வெளியிடும் நிறுவனத்திற்கு அதிக வரி  விதிக்கப்படுகிறது.  அரசு இப்படி வரியாகப் பெறும் தொகையை தூய ஆற்றலுக்கு மாற மக்களுக்கு மானியத் தொகையாக வழங்கும். 

தகவல்

TOI 1.1.2022

Pinterest



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்