பூஞ்சை உள்ள பகுதியை வெட்டியெடுத்துவிட்டு பிரெட் சாப்பிடலாமா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

 




Fungus bread image -TOI






உணவில் பூஞ்சை உள்ள பகுதியை வெட்டி எடுத்துவிட்டு சாப்பிடலாமா?

உணவில் பூஞ்சை உள்ள பகுதியை மட்டும் பிய்த்துவிட்டு சாப்பிடலாம் என சாமர்த்தியமாக நினைக்கிறீர்கள். ஆனால் தாக்கப்படாத பகுதியில் கூட பூஞ்சை நச்சு இருக்க வாய்ப்புண்டு. உணவைத் தாக்கும் பல்வேறு வித பூஞ்சைகள் உள்ளன. 

சீஸைத் தாக்கும் பென்சிலியம் (Penicillium), ஸ்ட்ராபெரியைத் தாக்கும் பாட்ரைடிஸ் (Botrytis) ஆகியவை வரை உள்ளன. பூஞ்சைகள் ஏற்படுத்தும் நச்சுக்கு மைக்கோடாக்சின் (Mycotoxins)  என்று பெயர். இவை தாக்கினால் உடல் நடுக்கம், வாந்தி, காய்ச்சல் ஆகியவை ஏற்படும். அஃப்லாடாக்சின் (Aflatoxins)என்ற பூஞ்சை நச்சு பாதிப்பு ஏற்பட்டால், ஒருவரின் டிஎன்ஏவே தாக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படும். முடிந்தவரை பூஞ்சை பாதிப்பு ஏற்பட்ட உணவுப்பொருளை தூக்கி எறிந்துவிடுவதே நல்லது. 

உலகிலேயே அதிக விஷம் கொண்ட மரம் உள்ளதா?

வடக்கு, மத்திய தெற்கு அமெரிக்கா, கரீபியன் பகுதிகளில் ஹிப்போமனே மன்சினெல்லா  (Hippomane mancinella) இனத்தைச் சேர்ந்த கடும் விஷம் கொண்ட மரம் உள்ளது. கடற்புரங்களில் உள்ள மாங்குரோவ் காடுகளில் 15 மீட்டர் உயரத்திற்கு இம்மரம் வளர்கிறது. மன்சினீல் (Manchineel) என்ற இந்த விஷமரத்தின் சாறு, தோலில் பட்டால் கொப்புளங்களை ஏற்படுத்துகிறது. கண்ணில்படும்போது, பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது. இந்த மரத்தை எரிக்கும் உருவாகும் புகை ஒருவருக்கு, பார்வையிழப்பு, மூச்சுத்திணறல், தோல் அரிப்பு ஆகிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. 



 தகவல்

BBC Science Focus 

feb2022


கருத்துகள்