இடுகைகள்

விளைவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செய்தியை ஆராய பத்து நொடி விதி முக்கியம்!

படம்
  செய்திகளை எழுதுவது, அதிலுள்ள அறம் பற்றி யோசிப்பது எல்லாம் சரிதான். ஆனால் செய்தியை எழுதுவது என ஒப்புக்கொண்டால் அதை குறிப்பிட்ட நேரத்தில் எழுதி க் கொடுத்தே ஆகவேண்டும்தானே? பிராந்திய மொழி நாளிதழில் குறிப்பிட்ட பகுதிகளை பார்த்து செய்தி சேகரிப்பவர் குறைந்தபட்சம் நான்கு செய்திகளையேனும் தரவேண்டிய அழுத்தம் இருக்கிறது. செய்தியை முந்தி எழுதி தருவதில் உங்கள் சக போட்டியாளர்களாக நிருபர்களும் உங்கள் கூடவே அருகில் இருக்கிறார்கள். நேரவரம்பும் இருக்கிறது. எப்படி இந்த அழுத்தங்களை சமாளிப்பது? ஒரு செய்தியை எழுதி அனுப்பலாமா, காட்சி ஊடகத்தில் வீடியோவை ஒளிபரப்பலாமா என்ற சூழ்நிலை வந்தால் பத்து நொடி சிந்தனை என்ற விதியைக் கையாளலாம். இவ்வகையில் உங்களிடம் உள்ள செய்தியை எந்த வித அழுத்தங்கள் இன்றி கவனமாக ஆராய வேண்டும். எனக்கு என்ன தெரிந்திருக்கிறது, இன்னும் என்ன தெரிந்துகொள்ளவேண்டும் என்ற இரு கேள்விகள் செய்தியில் முக்கியமானவை. அப்போதுதான் செய்தியை ஆழமாகவும் விரிவான தன்மையில் செம்மையாக்க முடியும். முழுமையில்லாத செய்தியை எப்போதும் பிரசுரிக்க கூடாது. ஒரு செய்தியை எழுதுகிறீர்கள். அதில் தனிநபரின் மதம் பற்றிய குற

பூஜை செய்வதும், மந்திரங்கள் ஓதுவதும் ஏற்படுத்தும் விளைவுகள்! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் நான் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால் கல்லூரி முதல்வர் அதற்கு மறுக்கிறார். நான் அவர் கூறியதை மறுத்தால் நிறைய பின்விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும். அதேசமயம் நான் அவர் கூறியதைப் பின்பற்றினால், எனது இதயம் உடைந்துபோகும். இப்போது நான் என்ன செய்வது? நீங்கள் உங்களின் பிரச்னையான நிலையை முதல்வரிடம் எடுத்துச் சொல்ல நம்பிக்கை இல்லாத நிலையைப்   பற்றி கூறுகிறீர்கள். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அவரிடம் உங்கள் பிரச்னை பற்றி பேசுங்கள். நீங்கள் உங்களது நிலையைப் பற்றிக் கூறியும் கூட அவர்   தனது நிலையில் பிடிவாதமாக இருந்தால், அவரிடம்தான் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் அப்படி உங்கள் கோரிக்கையை நிராகரிப்பதற்கு கூட அவரிடம் சில காரணங்கள் இருக்கலாம். அதை நீங்கள் கண்டறிய வேண்டும். இங்கு இருதரப்பிலும் நம்பிக்கை தேவைப்படுகிறது. முதல்வர், மாணவரான நீங்கள் என இருதரப்பிலும் நம்பிக்கை வேண்டும்.   வாழ்க்கை என்பது ஒரு பக்கம் சார்ந்த உறவு கிடையாது. முதல்வர், மாணவர் என நீங்கள் இருவருமே மனிதர்கள். எனவே இருவருமே தவறு செய்ய வாய்ப்புள்ளவர்கள்தான

பூமி மீது மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு!

படம்
  பூமி மீது மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கம்! உலகம் தோன்றியது முதல் பல்வேறு சூழல் மாற்றங்களை எதிர்கொண்டு வந்திருக்கிறது. வளமான நிலம் வளமிழந்து பாலையாவதும், பாலையான மண் மெல்ல வளம் பெறுவதும் இயற்கையின் சுழற்சிதான். இப்படி மாறுவதில் மனிதர்களின் பங்களிப்பு என்ன என்பதை புவியியல் வல்லுநர்கள் கண்டறிய முயன்று  வருகின்றனர். இதற்கு ஆந்த்ரோபோசீன் (Anthropocene) என்று பெயர்.  நிலத்தில் மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை அளவிடுவதன் மூலம் வெப்பமயமாதல், மாசுபாடு, வேதிப்பொருட்களின் பாதிப்பு, அணு ஆற்றல் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை அறியலாம்.  கடந்த 11,650 ஆண்டுகளாக பூமியில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு,  மனிதர்கள் காரணம் என புவியியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.  இதனை சில மானுடவியல் ஆய்வாளர்கள் மறுக்கிறார்கள். அணு ஆயுத வெடிப்பு,  நிலக்கரியை எரிப்பது, பிளாஸ்டிக் துகள்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களின் தாக்கத்தை அளவிடுவதே சரி என்கிறார்கள். இவ்வகையில்  1950ஆம் ஆண்டிலிருந்து மனிதர்களின் தாக்கத்தை அளவிடலாம் என்கிறார்கள். வாதங்களை நிரூபிக்க, மனிதர்கள் தாக்கம் கொண்ட  இடங்களைக் கண்டுபிடிப்பது அவசியம். கடந்த 2021ஆ