இடுகைகள்

நூல்விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வளம் தரும் மரங்கள் பாகம் - 1 - விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவும் மரங்களைப் பற்றிய கையேடு

 நூல் விமர்சனம் வளம் தரும் மரங்கள்  பாகம் 1 தோட்டக்கலை இயக்குநர் மணி , கமலா நடராஜன் என்சிபிஹெச் வெளியீடு விவசாயம் செய்யும் நண்பர் வளம் தரும் மரங்கள் ஐந்து பாகங்களை வாங்கி வைத்திருந்தார். என்சிஹெச் புக் இப்படியெல்லாம் நூல்களை வெளியிடுகிறதா என ஆச்சரியப்பட்டு அவர் வாசித்த முதல் பாகம் மட்டும் இரவல் வாங்கி வந்து படித்தேன். நூல் சிறப்பான கருப்பொருளைக் கொண்டுள்ளது. நூலில் முப்பது வகையான பல்வேறு தாவரங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.  நூலை தோட்டக்கலை இயக்குநராக பணிபுரிந்த மணி என்பவரும், அவருடைய மகளும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். நூலிலுள்ள தகவல்கள் ஆச்சரியப்படுத்தும் விதமாக உள்ளன. ஏராளமான அறிந்திராத தகவல்கள் உள்ளன என்பது உண்மை. அதை வாசிக்கும் யாருமே ஒப்புக் கொள்வார்கள். ஆனால் காலத்திற்கு ஏற்ப நூலில் மரங்கள் பற்றிய வண்ணப்புகைப்படம் ஏதும் இணைக்கப்படவில்லை. நூலின் விலை ரூ.230 என நினைவு. இந்த விலையில் கூட சிறிது தொகை கூடுதலாக சேர்ந்தாலும் நூலில் வண்ண புகைப்படங்களை இணைத்திருந்தால் மரங்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியுமே? கருப்பு வெள்ளையில் இலையை, மரக்கன்றுகளை வரைவது எதற்கு? அதில் எந்த...

டாடா - தேசத்தை வளர்ந்த நிறுவனத்தின் கதை - ஆர்எம் லாலா தமிழில் பிஆர் மகாதேவன்

 மறுவாசிப்பு நூல்கள் டாடா - நிலையான செல்வம்  ஆங்கிலத்தில் ஆர்எம் லாலா தமிழில் பிஆர் மகாதேவன் கிழக்கு பதிப்பகம் மூல நூல் -கிரியேஷன்ஸ் ஆப் வெல்த் வணிக நூல் டாடா குழுமம், நூறாண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் இயங்கி வருகிறது. அதாவது அதன் குழுமத்தில் உள்ள பல நிறுவனங்கள் நூற்றாண்டுகளாக இந்தியாவில் தொழிலை நடத்தி வருகின்றன. பார்சி இனத்தவர்களே டாடா குழுமத்தின் இயக்குநர்கள், தலைவர்கள்.  365 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை ஒருவர் வாசிக்கும்போது முதல்முறையிலேயே டாடா குழுமத்தினர் எந்தளவு உயரிய கொள்கை கொண்டு உழைக்கிறார்கள், வணிகம் செய்கிறார்கள் என்ற எண்ணத்திற்கு ஆட்படுவார்கள். நூலை எழுதிய நூலாசிரியர் லாலாவின் நோக்கமும் கூட அதுதான். ஆனால், அவர் டாடா நிறுவனத்தில் வேலையைப் பெற்றுள்ளதும், இந்த நூலுக்கு ரத்தன் டாடா உரை எழுதிக் கொடுத்ததும் நூலை சற்று பின்னுக்கிழுப்பது போல தோன்றுகிறது. இதை நூலை வாசிப்பவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.   ஒரு பத்திரிகையாளராக லாலா நூலை எழுதி இருந்தால் அந்த நூலில் டாடா குழுமத்தில் உள்ள பிரச்னைகள், செயல்பாட்டில் உள்ள தவறுகள், அவர்கள் மீது மக்கள் கூறிய புகார்கள், ...

திராவிட இயக்கம், கட்சி ஆகியவற்றின் போராட்டம் நிறைந்த நெடிய சமூகநீதிப் பயணம்!

படம்
      தெற்கிலிருந்து ஒரு சூரியன் இந்து தமிழ்திசை ஆசிரியர் குழு - அசோகன், கே.கே மகேஷ், சமஸ், ரங்காச்சாரி, ஏஎஸ் பன்னீர்செல்வம் இந்து தமிழ்திசை, சென்னை திராவிட இயக்கத்தின் செயல்பாடு, திமுக அரசியல் அதிகாரம் பெற்று செய்த சாதனைகள், அதன் பிரச்னைகள், பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி என மூன்று தலைவர்களின் ஆளுமை, தமிழ்நாட்டின் தனித்துவம், திராவிட ஆட்சியில் நடைபெற்ற சமூகநீதி திட்டங்கள் என ஏராளமான தகவல்களைக் கொண்டதாக நூல் உருவாகியிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படியான நூலை உருவாக்கியிருப்பது சமூகநீதிக்கு எதிராக இருந்த பார்ப்பன பத்திரிகைக் குழுமம் என்பதுதான். திராவிட இயக்கத்திற்கு ஆதரவாக நின்ற பத்திரிகைகளோ, பத்திரிகையாளர்களோ கூட இப்படியான நூலை தொகுக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது. எதிர்க்குழுவோ, ஆதரவான குழுவோ திராவிட இயக்கம் சார்ந்து கருணாநிதி அவர்களை புத்தக அட்டையாக போட்டு நூல் ஒன்று தயாராகிவிட்டது. நூல் எப்படியிருக்கிறது என்று பார்ப்போம். நூல் தொடக்கத்தில் நீதிக்கட்சி, பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என பல்வேறு கட்டுரைகள் வழியாக தம...

அகிம்சை வழியில் பிறருடன் கலந்துரையாட உதவும் நூல் - நான் வயலன்ட் கம்யூனிகேஷன்

படம்
          நான் வயலன்ட் கம்யூனிகேஷன்  ரோசன்பர்க் இந்த நூல், படிக்கும் வாசகர்களுக்கு வன்முறையில்லாத வகையில் எப்படி தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறது. ஒருவரின் பேச்சு என்பது முன்முடிவுகள், தீர்ப்புகள், புகார் இல்லாமல் சொல்ல வந்த கருத்தை கூறவேண்டும் என கூறி அதற்கான எடுத்துக்காட்டுகளை விளக்குகிறது. இதில் முக்கியமான விஷயம் தனது தேவைகளை பிறரை புகார் கூறும் வடிவில் கூறுகிறோம் என பேசுபவருக்கும் தெரியாது. கேட்பவருக்கும் தெரியாது. இப்படியான சூழலில் நிறைய கருத்து முரண்பாடுகள், வன்முறை உருவாகிறது. அதை எப்படி தவிர்க்கலாம் என நூல் பல்வேறு எடுத்துக்காட்டுகளை வைத்து விளக்குகிறது. பரிசு, தண்டனை என்ற வகையில் ஒருவரை வேலையை செய்ய வைப்பது எப்படி தவறாக முடியும் என்பதை நூல் விளக்கியுள்ளது முக்கியமான அம்சம். உளவியல் ரீதியாக பரிசு, தண்டனை விலங்குகளை பழக்கப்படுத்துவதற்கு உதவக்கூடும். ஆனால்  மனிதர்களுக்கு பெரிய பலன் அளிக்காது. சாதாரண பேச்சு, ஓரிடத்தில் சிறுபான்மையினரை படுகொலை செய்யத் தூண்டுகிறது. இன்னொரு இடத்தில் அனைவருக்குமான வளர்ச்சி என்ற கருத்தை வித்திடு...

சீனாவின் சிந்தனைகளை எண்ணவோட்டங்களை அறிய உதவும் கட்டுரை நூல்!

படம்
           கிழக்கும் மேற்கும்: பன்னாட்டு அரசியல் கட்டுரைகள் கட்டுரை நூல் ஆசிரியர்: மு.இராமனாதன் ♦ ♦ முதல் பதிப்பு: டிசம்பர் 2022 ♦ வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001 இந்த கட்டுரை நூல் மொத்தம் 34 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இதன் வழியாக சீனா, ஹாங்காங், மியான்மர், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகள், அதன் பின்னணி ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக சீனாவில் தணிக்கை முறை அமலில் உள்ளதால், அதைப்பற்றிய கட்டுரைகள் அங்குள்ள சமூக சூழல், அரசியல் அமைப்பு, கட்டுப்பாடுகள், விதிகள், கலாசாரம் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இந்த நூலில் அமெரிக்கா, மியான்மர், ஹாங்காங்கை விட சீனாவைப் பற்றிய கட்டுரைகள் கவனம் ஈர்த்தவையாக இருந்தன. இந்தியாவும் சீனாவும் ஒரே ஆண்டில்தான் சுதந்திரம் பெற்றன என்றாலும் சீனா இன்று வல்லரசு நாடுகளில் ஒன்றாக உயர்ந்துவிட்டது இதை அமெரிக்கா ஏற்கிறது ஏற்காமல் போகிறது என்பது விஷயமல்ல. பல்வேறு தடைகள் இருந்தாலும் உள்நாட்டிலேயே அனைத்து பொருட்களையும் தயாரித்து அதை வெளி...

மென்மையான வளைந்து செல்லும் நீரைப் போல இருங்கள்! - தாவோ தே ஜிங் - சந்தியா நடராஜன்

படம்
 தாவோ தே ஜிங் லாவோட்சு தமிழில் சந்தியா நடராஜன்  159 பக்கங்கள் இந்த நூல் லாவோட்சு எழுதிய பாடல்களை அடிப்படையாக கொண்டது. ஆனால் அதுமட்டும் போதாது என மொழிபெயர்ப்பாளர் பட்டினத்தார், தாயுமானவர், இளங்கோவடிகள், பாரதி, திருவள்ளூவர் என நிறையப்பேர்களை உள்ளே சேர்த்துக்கொண்டிருக்கிறார். இதன் காரணமாக நூல் தாவோ பற்றியதா அல்லது தமிழ்நாட்டு இலக்கிய நூல்களில் உள்ள மெய்யியல் பற்றியதா என குழப்பமே மேலோங்குகிறது.  தாவோ வழியில் பயணித்த துறவி லாவோட்சு. அவர் தனது நாட்டில் ஏற்பட்ட மோசமான சீரழிவுகளைப் பார்த்து பொறுக்கமுடியாமல் அங்கிருந்து வெளியேறுகிறார். அப்போது எல்லையில் உள்ள காவலர் அவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார். தங்களது அறிவை போதனையாக்கி நூல் ஒன்றை எழுதிக் கொடுங்கள் என்கிறார். அந்த அடிப்படையில் தாவோ தே ஜிங் உருவாகிறது.  சீனாவின் மெய்யியல் நூல். தமிழில் மொழிபெயர்த்தாலும் அந்த தன்மையை விளக்கவேண்டும். ஆனால் இந்த நூல், லாவோட்சுவின் அனுபவ தரிசனத்தை தருவதை விட, அவரைப் போலவே தமிழ்நாட்டிலும் சிந்தித்திருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள் என ஒப்பீடுகளில் இறங்கிவிடுகிறது. எனவே, லாவோட்சுவின் மொழிப...

நூலின் மீது காதல் கொண்டவர்களைப் பற்றிய நூல் - பைபிலியோஹாலிசம் - டாம் ராபே

படம்
  பைபிலியோஹாலிசம் நூல் அட்டை டாம் ராபே பைபிலியோஹாலிசம் டாம் ராபே பாரதி புத்தகாலயத்தின் புதிய புத்தகம் பேசுது இதழில் ச.சுப்பாராவ் என்பவர் புத்தக காதல் என தொடரை எழுதி வருகிறார். மாதம்தோறும் நூல்களைப் பற்றிய நூல்களை அறிமுகம் செய்கிறார். அதில்தான் பைபிலியோஹாலிசம் என்ற நூல் கிடைத்தது. அதற்காக அவருக்கு நன்றி. பைபிலியோஹாலிசம் என்றால் நூல்களை வாங்கி சேகரித்து வைக்கும் பழக்கம் கொண்டவர் என்று அர்த்தம். இந்த வகை குறைபாடு கொண்ட ஆட்கள் உலகில் நிறையப் பேர் உண்டு. இவர்கள் நூல்களை வாசிக்கிறார்களா என்றால் அதில் கவனம் இருக்காது. செம்பதிப்பு, மலிவுவிலைப்பதிப்பு, கெட்டி அட்டை, பளிச்சிடும் தாள் என ஒரே நூலை பல்வேறு தரத்தில் வாங்கி வீடு முழுக்க அடுக்கி வைத்திருப்பார்கள். நூல்களை வாங்கி வீட்டில் கொண்டு வந்து அடுக்குவதே இவர்களது வேலை. இப்படி நூல்களை வாங்குபவர்கள், வாசிப்பவர்கள், அரிய நூல்களை வாங்குபவர்கள், நூல்களை வாசிப்பதே வாழ்க்கை என இருப்பவர்கள என ஏராளமானவர்கள் பற்றி பகடியான முறையில் டாம் ராபே   விவரித்து எழுதியிருக்கிறார். ஏனெனில் அவரே பைபிலியோஹாலிக்தான். நூல்களை வாசிக்கும் வேட்கை கொண்டவ...

பிராமணர்களை நிராகரித்து வேதங்களை புறக்கணித்து புத்தர் காட்டும் தம்ம நெறி - புத்தரும் அவர் தம்மமும் - அம்பேத்கர்

படம்
 புத்தரும் அவர் தம்மமும் - அம்பேத்கர்  தமிழில் பெரியார் தாசன் வெளியீடு பெரியார் தாசன்  புத்தரின் வாழ்க்கை, அவரது கொள்கைகள் பற்றிய நூல். இதை அம்பேத்கரே ஆராய்ந்து எழுதியிருக்கிறார். அம்பேத்கர் எழுதிய நூல்களில் புத்தரும் அவர் தம்மமும் நூல் முக்கியமானது. இந்தியாவில் உள்ள மதங்களில் பௌத்தம் முக்கியமானது. நிர்வாக ரீதியாக இந்து மதத்தில் பௌத்தம் சீக்கியம் உள்ளடங்கியது என தேசியவாதிகள் கூறுகின்றனர்.  பௌத்தம் எவ்வாறு வேதங்களிலிருந்த மாறுபட்டுள்ளது என்பதை உயர்வெய்திய புத்தர் விளக்குகிறார். நூலின் பக்கங்கள் ஐநூறுக்கும் அதிகமானவை. அவை அனைத்திலும் கூறப்படும் விஷயங்களைப் படித்தால் மதம் என்பது என்ன, அது மனிதர்களுக்கு பயன்படும் விதம் ஆகியவற்றை தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.  பௌத்தத்திலுள்ள பல்வேறு கொள்கைகளை திருடி தன்னை சற்றே மாற்றிக்கொண்டாலும் பிராமணத்துவம் மனிதர்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையவில்லை. ஒட்டுமொத்த சமூக அமைப்பும் சுரண்டலுக்கானதாகவே இருக்கிறது. மனிதகுல முன்னேற்றத்திற்கானதாகவே மதம் அமையவேண்டும். அவ்வாறு அமையாதபோது, அதன் தேவையே இல்லை என புத்தர் பிராமணத்துவத்தை, வேத ...

சொத்தைக் கைப்பற்ற குடும்பத்திற்குள் நடக்கும் ரத்தக்களறி! - கணேஷ், வசந்த் துப்பறியும் கொலை அரங்கம்

படம்
                    கொலை அரங்கம் சுஜாதா கணேஷ் துப்பறியும் , வசந்த் ஏராளமான எசகுபிசகு நையாண்டி செய்யும் கதை . மௌபரி ரோடில் தொடக்கவிழா காணும் காம்ப்ளக்ஸ்தான் உத்தம்பீனா முத்தமிழ் மன்றம் . தொடங்கிய முதல்நாளே இலங்கை அமைப்புகள் பாம் வைக்கின்றன . அடுத்தடுத்த தாக்குதல்கள் பீனா , உத்தம்மை குறிவைத்து நடக்கின்றன . கட்டட தொடக்க விழாவிற்கு போன கணேஷ் - வசந்த் இந்த விவகாரங்களை அவர்களே சுயமாக எடுத்து விசாரிக்கின்றனர் . ஏராளமாக கிடைக்கும் சொத்துக்காக உத்தம் அல்லது பீனாதான் கொலைகளை செய்ய முயல்கிறார்கள் என நினைக்கிறார்கள் . ஆனால் அப்போது அமெரிக்காவிலிருந்து வரும் உத்தம் பீனாவின் உறவினர் ராஜேந்திரன் மீதும் சந்தேக நிழல் விழுகிறது . அவரை பின்தொடர்ந்து போகும்போது , ராஜேந்திரன் கொலையாகி லிப்டில் கிடக்கிறார் . உண்மையில் யார் கொலைகாரன் கணேஷ் அடிபட்டும் வசந்த் முதுகில் குத்துப்பட்டு கண்டுபிடிப்பதுதான் இறுதிக்காட்சி . கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை சுஜாதாவின் நையாண்டி ரசிக்கவைக்கிறது . அதேநேரம் கொலையை யார் செய்திருப்பார்கள் என்று கணேஷை...

அபூர்வ வெள்ளாட்டின் கதை - பூனாச்சி - பெருமாள் முருகன்

படம்
அன்ஸ்ப்லாஸ் பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை  பெருமாள் முருகன்  காலச்சுவடு  சமூகம் சார்ந்த பிரச்னைகளைச் சொல்லி படாதபாடு பட்ட பெருமாள் முருகனின் கதை. எளிமையாக மேய்ச்சல் நிலத்தில் மேயும் வெள்ளாட்டை வைத்தை கதையை எழுதிவிட்டார்.  இவர்களுக்கு அதிசயம் போல கிடைக்கும் கருப்பு மூடு ஆடுதான் பூனாச்சி, உருவ அளவில் பொசுக்கென இருக்கும் ஆட்டுக்குட்டியை வழிப்போக்கர் கிழவனுக்கு இலவசமாக கொடுத்துவிட்டு போகிறார். வீட்டுக்கு கொண்டு போனால் அது பூனைக்குட்டியா என்று கேட்கிறாள் கிழவி. அளவில் மிகச்சிறியதாக இருப்பதால் ஏதோ புழு போலத்தான் அவர்களுக்கு தெரிகிறது. முழு கருப்பு நிறம் என்பதால் இருக்கும் ஆடுகளிலும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.  இந்த ஆட்டுக்குட்டி எப்படி அவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது, அதன் சிறப்பு என்ன என்பதை பின்னாளில் கிழவனும் கிழவியும் அறிகிறார்களா என்பதுதான் கதை.  நாவல் மொத்தம் 169 பக்கங்கள்தான். வேகமாக வாசிக்க முடியும் எளிமையான கதையும் கூட.  கதையின் முடிவு தொன்மைக் கதை போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. மேய்ச்சல் நிலத்தில் வானம் பார்த்த பூமியில் ஆடு மேய்ப்பவர...

லைட்டாக பிரச்னைகளை அணுகினால் - மேக்கிங் இந்தியா ஆசம்!

படம்
மேக்கிங் இந்தியா ஆசம் சேட்டன் பகத் ரூபா ரூ.160 இந்தியாவில் இல்லாத பிரச்னைகளே இல்லை. சாதி, மதம், இருக்கிறவன், இல்லாதவன், ரூபாய் சரிவு, விலைவாசி உயர்வு, சாலைவசதி, பெண்களின் கல்வியின்மை, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமை, ஊர்களுக்கு இடையே தீண்டாமைச்சுவர் என பேசிக்கொண்டே போகலாம். சேட்டன் பகத் இந்த நூலில் எடுத்துக்கொண்டு பேசுவது அனைத்துமே ஆங்கில ஊடகங்களில் டேபிளைச் சுற்றி உட்கார்ந்து விவாதிப்பார்களே அந்த ரக மேட்டர்கள்தான். அதனால் மனம் பதறி பிபி எகிறி, வாசிக்க வேண்டியதில்லை. லைட்டாக வாசியுங்கள். அவ்வளவுதான். இதில் எப்போதும்போல அவர் இளைஞர்களுக்கு முக்கிய பிரச்னைகளாக முன்வைக்கும் ஊழல், லஞ்சம், வாக்குரிமை, அரசியல்வாதிகளின் போலி முகமூடித்தனம் ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறார். இதில் இஸ்லாமியர்கள், மத அடிப்படை வாதம் பற்றி சேட்டன் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேநேரம் பாஜகவை புகழ்பாடும் கட்டுரைகளும் உண்டு. அதில் ஒன்றுதான், மோடி எப்படி தேர்தலில் வென்றார் என்ற கட்டுரை. அனைத்து கட்சிக்காரர்களுக்கும் உதவும்படி பாஜக, காங்கிரஸ் என பாரபட்சமின்றி சில கட்டுரைகளை எழுதியுள்ளார். மொ...

"தேசபக்திக்கு அர்த்தம் மனிதர்களை வெறுப்பதல்ல"

படம்
பீகாரிலிருந்து திகார் வரை - எனது அரசியல் பயணம் கன்னையாகுமார் தமிழில்: வெ.ஜீவானந்தம். என்சிபிஹெச் வெளியீடு விலை ரூ.110 (4வது சென்னை புத்தகத்திருவிழா, ராயப்பேட்டை YMCA) பீகாரின் மஸ்னத்யூரில் பிறந்த கன்னையாகுமார் பாட்னாவில் கல்லூரிப்படிப்பை நிறைவு செய்து ஜவகர்லால்நேரு  பல்கலையில் மாணவர் தலைவனாக  மாறி அரசின் வெறுப்புக்கு இலக்காகி சிறை சென்று மீளும் கதை.  எளிய கல்விச்செலவுகளை சமாளிக்க முடியாத பீகார் குடும்பத்து சிறுவன், இந்தியாவிலுள்ள பல்வேறு சமூக ஏற்றத்தாழ்வுகளை முரண்பாடுகளை எப்படி கவனித்து வளர்கிறான் என்பதை படிக்கும்போது ஆச்சரியமாக உள்ளது. பள்ளியில் கற்பிக்கும் சமத்துவம், சகோதரத்துவத்தை பள்ளி வளாகத்தை விட்டு வெளிவந்தவுடன் அதேவிஷயங்களை சுற்றியுள்ள சமூகம் எப்படி உடைக்கிறது என்றும் தன் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்கள் வழியாக சொல்லும்போது அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒருங்கே ஏற்படுகிறது.  வெ.ஜீவானந்தம் மொழிபெயர்ப்பில்  தேர்தல் சமயத்தில் அவர் ஆதரித்த கட்சி குறித்து எழுதும் இடங்களில் சில காப்பி பேஸ்ட் பிழைகள் தவிர்த்திருக்கலாம். மற்றபடி சுயவரலாறு நாவலி...