இடுகைகள்

நேரலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

24/7 அந்தரங்க வாழ்க்கை விற்பனைக்கு! - டிக்டாக் லைவில் இணையும் மக்கள்!

படம்
  அடுத்தவரின் வாழ்க்கையை எட்டிப்பார்ப்பது ஒருவித கிளுகிளுப்பான உணர்வைத் தருகிறது. அதனால்தான் மக்கள் பிக் பிரதர், பிக் பாஸ், ஆகிய நிகழ்ச்சிகளைப்பார்த்துவிட்டு அதில் உள்ள பங்கேற்பாளர்களின் குணங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் இதுபற்றிய காரசார விவாதங்கள் நடைபெறுகின்றன. உண்மையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சம்பளம் உண்டு. அங்கு உருவாகும் பிரச்னைகள் அனைத்துக்குமே எழுத்துப்பூர்வ திரைக்கதை உண்டு. இதெல்லாம் அறிந்தாலுமே மக்கள் உணர்வுபூர்வமான சண்டை, கைகலப்புகளுக்கும் தங்களை மீறி ஒன்றிவிடுகிறார்கள்.  இது சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாக நடைபெறுகிறது. இந்த வகையில் ஜெட்டிஜேம்ஸ், ஆட்டும்ரேயான் என்ற இளம் தம்பதிகள் தங்களின் மூன்று வார வாழ்க்கையை அப்படியே டிக்டாக் லைவ்வில் ஒளிபரப்பினார்கள். வீட்டில் மொத்தம் ஒன்பது கேமராக்கள். படுக்கை அறை, கழிவறையில் கூட கேமரா உண்டு. ஐந்தூறு மணி நேரங்கள் இணையத்தில் தங்களுடைய அந்தரங்க வாழ்க்கையை ஒளிபரப்பி காசு சம்பாதித்தனர்.  லைவ் என்பதால் இதில் நேரடியாக கமெண்டுகளை அடிக்கலாம். பெரும்பாலானவை எதிர்மறையாக இருக்கும். சில கட்டளையிடுவது போல இருக்