இடுகைகள்

மாணவிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவிகள் மதிப்பெண் பெறுவது தொடர்பான மூடநம்பிக்கைகளை தகர்த்த ஆய்வாளர்!

படம்
  மாணவிகள் அதிக மதிப்பெண் பெறுவது முயற்சியாலும் உழைப்பாலும்தான்! மாணவிகள் பத்தாவது, பனிரெண்டாவது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது நாளிதழ்களில் ஆண்டுதோறும் பார்க்கும் செய்தி. இதை சமூகம் எப்படி பார்க்கிறது? காதலை ஆயுதமாக பயன்படுத்தி மாணவர்களை வீழ்த்தி மாணவிகள் வெற்றி பெறுகிறார்கள் என்று திரைப்பட பாடல்கள் வெளிவந்துள்ளன.  முயற்சியும், உழைப்பும் கைகோக்க வெற்றி என்பது எவருக்கும் கிடைப்பதுதான். இதில் ஆண், பெண் என வேறுபாடு ஏதும் கிடையாது. ஆனால், ஆண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் சமூகத்தில் பெண்களின் வெற்றி இழிவு, அவதூறுகளுக்கு உள்ளாகிறது. பள்ளியில் மட்டுமல்ல பெண்கள் சாதிக்கும் அனைத்து இடங்களிலும் அவர்களின் திறமையை பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உடல் என பலதையும் இழிவுபடுத்தி வெளியேற்ற முயல்வதும் சமூக வழக்கமாகிவிட்டது. உண்மையில் பெண்கள் மதிப்பெண்களைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் இல்லையா? அவர்களின் வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் கிடைத்ததுதானா என்பதை அமெரிக்க உளவியலாளர் எலினார் மெக்கோபை ஆராய்ந்தார். இவரது ஆராய்ச்சியே ஆண், பெண் பாகுபாடு சார்ந்த மூடநம்பிக்கைகளை வேரோடு களைந்தெற