இடுகைகள்

கருந்துளை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்டீபன் ஹாக்கிங் தினம்! - ஜனவரி 8

படம்
அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கை யாரும் அறியாமல் இருக்க முடியாது. இயற்பியல், வானியல் சார்ந்த துறைகளில் பல்வேறு கண்டுபிடிப்புகளை தனது ஆய்வின் வழியாக சொன்னவர். முழு உடலும் செயலிழந்துபோனாலும் வீல்சேரில் உட்கார்ந்து பல்வேறு அறிவியல் சாதனைகளை உருவாக்கியவர். ஜனவரி 8, 1942ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் பிறந்தவர் ஸ்டீபன். இவரது பெற்றோர் மருத்துவர்கள். குடும்பமே படிப்பாளிகளைக் கொண்டது. படிப்பை முக்கியமானதாக எடுத்துக்கொண்டவர்கள். ஆக்ஸ்போர்ட் பல்கலையில் இயற்பியல் படிப்பில் பட்டம் பெற்றவர். 1962 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலையில் சேர்ந்தும் படித்தார். 1963ஆம் ஆண்டு ஸ்டீபனின் உடலில் மோட்டார் நியூரான் தொடர்பான நோய் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதற்குப்பிறகு, அவரது முழு உடலும் செயலிழந்துபோனது. பின்னர்தான், அவரது முக தசைகளின் இயக்கத்திற்கு ஏற்ப அதனை பேச்சாக மாற்றும் கருவியை உருவாக்கினர். இதன் வழியாக அவர் பிறருடன் தொடர்புகொள்ள முடிந்தது. உடல் இத்தனை பிரச்னைகளைக் கொண்டிருந்தாலும் கூட இயற்பியலில் பல்வேறு அறிவியல் கருத்துகளைக் கண்டுபிடிக்கவும், அதனை உலகிற்கு சொல்லவும் உழைத்தார். கருந்துளை பற்றிய கருத்

கருந்துளையின் உருவாக்கம், செயல்பாடு!

படம்
  கருந்துளை எப்படி உருவாகிறது? அண்மையில் வானியல் ஆராய்ச்சியாளர்கள் தொலைநோக்கிகளை ஒருங்கிணைத்து கருந்துளையைக் கண்டுபிடித்து புகைப்படமும் எடுத்தனர்.  இரண்டு கருந்துளைகளில் ஒன்று, 26 ஆயிரம் ஒளி ஆண்டுகளும், மற்றொன்று 50 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலும் உள்ளன.  ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு முதல்  ஹவாய், மெக்சிகோ, ஸ்பெயின்  ஆகிய நாடுகளில் அமைக்கப்பட்ட தொலைநோக்கிகளை இணைத்து கருந்துளையை அடையாளம் கண்டு புகைப்படம் எடுத்துள்ளனர்.  இறந்த நட்சத்திரம்! நட்சத்திரங்கள் ஒளிருவதற்கான எரிபொருட்கள் தீர்ந்துவிட்டால், அவை மெல்ல இறக்கத் தொடங்கும். சூரியன் அளவிலுள்ள நட்சத்திரங்கள் மெல்ல சிறுசிறு வெடிப்புகள் தோன்ற உடையும். இதற்கடுத்த நிலையாக சூப்பர் நோவா நிலை தோன்றும்.   வெடிப்பு எரிபொருட்கள் தீர்ந்துபோன நிலையில் நட்சத்திரத்தின் சுய ஈர்ப்புவிசை செயலிழந்து போகும். காரணம், வெளிப்புறம் நடந்த அணுக்கதிர் செயல்பாடு நின்றுபோவதே. மெல்ல நட்சத்திரம் உடைந்து விண்வெளியில் பரவும்.  நொறுங்கியது நட்சத்திரம்! ஈர்ப்புவிசை  தானாகவே நட்சத்திரத்தை உட்புறமாக நொறுக்குகிறது. இதன்விளைவாக நட்சத்திரம் முழுமையாக உடைந்து தன் வடிவத்தை இழக்கிறது