இடுகைகள்

விசாரணை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செம்மரக்கடத்தலில் கொல்லப்படும் நபர்களை தேடிப்போகும் உதவி கலெக்டர்!

படம்
  ராமாராவ் ஆன் டூட்டி 2022 தெலுங்கு ராமாராவ் ஆன் டூட்டி தெலுங்கு ரவிதேஜா, நாசர்,திவ்யான்சா கௌசிக்   படத்தின் தொடக்க காட்சியில் வயதான முதியவர் இறந்துபோன ஆளை யாருக்கும் தெரியாமல் மண்ணைத் தோண்டிப் போட்டு புதைக்கிறார். இதற்கடுத்து, உதவி கலெக்டரான ராமாராவின் அதிரிபுதிரி அறிமுக காட்சி. படம் முழுக்க குற்றச்சம்பவங்கள், அதை எப்படி செய்கிறார்கள், அதில் காவல்துறையின் ஈடுபாடு என ஆழமாக சென்று பேசுகிறது. படத்தில் ராமாராவின் மனைவி, அவரது முன்னாள் காதலி என இரண்டுபேர் இருந்தாலும் நடிப்பதற்கான வாய்ப்பு முன்னாள் காதலியான மாலினிக்கே உள்ளது. சற்று உள்ளடங்கிய உணர்ச்சிகளை கட்டுப்படுத்திய நடிப்பு என்றாலும் அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். ராமாராவ் பாத்திரம், மாலினியின் கட்டாய திருமணத்தை புரிந்துகொள்ளும் விதம் முதிர்ச்சியானது. பின்னணி இசை என்றாலே ஒருவர் கர்ண கடூரமாக அலறுவது என சாம் சிஎஸ் புரிந்துகொண்டிருக்கிறாரா என்ன? இசைக்கருவிகளை சிறப்பாக பயன்படுத்தினாலே போதுமானது என தோன்றுகிறது. காதில் அந்தளவு இரைச்சல் கேட்கிறது. சமகால இசைக்கலைஞர்கள் எல்லோருமே இசைக்கலைஞர் அனிருத்தைப் பின்பற்றுகிறார்க...

அதிகரிக்கும் கொலைக்குற்றங்கள் - தடுமாறும் அமெரிக்க காவல்துறை

படம்
  கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர் ஹாக்கின்ஸ். இவர் 2019 ஆம் ஆண்டு தொடங்கி மாகாணமெங்கும் புகைப்படங்களைக் கொண்ட பில்போர்டுகளை வைத்து வருகிறார். அதில், படுகொலையாகி குற்றவாளி கண்டுபிடிக்கப்படாத மனிதர்களின் முகங்கள் உள்ளன. எங்களை கொன்றவர்கள் யார்? என தலைப்பிட்டு புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தகவல் கொடுக்க காவல்துறையின் தொடர்புஎண் உள்ளது. ஹாக்கின்ஸ் எதற்கு இப்படி செய்கிறார்? ஏனெனில் 1995ஆம் ஆண்டு டிசம்பர் ஆறு   அன்று, அவரது மகன் ரெகி பத்தொன்பது வயதில் தெருவில் சுடப்பட்டு படுகொலையாகி கிடந்தார் 27 ஆண்டுகளாகியும் காவல்துறையால் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை. முயற்சிக்காமல் இல்லை ஆனால் குற்றவாளி கிடைக்கவில்லை.   அந்த ஆண்டில் நடைபெற்ற 838 கொலைகளில ரெகியும் ஒருவராக பட்டியலில் ஆவணப்படுத்தப்பட்டார். மகன்தான் வாழ்க்கை என நினைத்து வாழ்ந்த   ஹாக்கின்ஸ் மனதளவில் நொறுங்கிப்போனார். அவர் கணக்காளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஹிப் ஹாப் இசைக்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த இளைஞன், அங்குள்ள உள்ளூர் குழுக்களில் சேர்ந்து சிறுசிறு கடத்தல்களுக்கு குருவியாக செயல்பட்டு பின்னாளில் உயிர் இழந்துள்ளான்...

சீரியல் கொலைகாரனால் கொல்லப்பட்ட சகோதரியின் உடலைத் தேடி அலையும் காவல்துறை அதிகாரி! பியாண்ட் ஈவில்

படம்
  பியாண்ட் ஈவில் - கே டிராமா பியாண்ட் ஈவில் கொரிய டிவி தொடர் பதினாறு எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   2020ஆம் ஆண்டு லீ டாங் சிக் என்பவரின் சகோதரி, காணாமல் போகிறார். அவரது வெட்டப்பட்ட கைவிரல்கள் மட்டும் வீட்டின் முன் கிடைக்கின்றன. சம்பவ இடத்தில் லீ டாங் சிக்கின் கிடார் மீட்டும் கருவி கிடைக்க, அவரை வழக்கில் குற்றவாளியாக சந்தேகப்படுகிறார்கள். அதனால், அவர் வாழும் ஊர் அவரை அக்காவைக் கொன்ற தம்பி என முன்முடிவு செய்துவிடுகிறது. ஊடகங்கள் அதை சிறப்பு செய்தியாக்குகின்றன. ஆனால் அக்காவின் உடல் கிடைக்காத காரணத்தால் தம்பி குற்றவாளி அல்ல என விடுவிக்கப்படுகிறார். அவரை கைது செய்த காவல்நிலைய தலைவர், லீ டாங் சிக் விரும்பியபடி காவல்துறை செர்ஜென்ட் ஆக உதவுகிறார். பெண் பிள்ளை இறந்த துக்கத்தால் லீ டாங் சிக்கின் அப்பா, பனியில் பிள்ளைக்காக காத்திருந்து மனம் சிதைந்து போய் உறைந்து இறக்கிறார். அதைப்பார்த்த அவரது மனைவிக்கு புத்தி பேதலித்துவிடுகிறது. லீ டாங் சிக்கை ஊர் முழுக்க தூற்றுகிறது. ஏறத்தாழ அவரது நெருங்கிய நண்பர்களே ஒருவேளை கொலை செய்திருப்பானோ, சைக்கோ பயலோ என சந்தேகப்படுகிறார்கள். ஆனால...

கோடாரியால் மண்டையை பிளந்து கொலை.. கொலைக்கு முன்னரே குறியீட்டுச் செய்தி - கோடாரி மனிதன்

படம்
  கோடாரி மனிதன்   தெலுங்கு படங்களில் அதிகம் பயன்படுத்தும் பொருள் என்ன? பன்ச் டயலாக்குகள் அல்ல. கோடாரி. சிங்கமுகம், சூரியன் என விதவிதமான உருவங்கள் பொறித்த கோடாரிகளை பயன்படுத்தி நல்நோக்கமில்லார்களை நாயகன் வெட்டுவார். அவரும் வெட்டப்படுவார். அதேபோல ஒரு கோடாரி கிரைம் கதைதான் இது. ஆனால் இறுதியாக யார் அந்த கோடாரி மனிதன் என்பதை கண்டறிய முடியவில்லை. 1918ஆம் ஆண்டு மே மாதம், அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தவரான ஜோசப் மேகியோ கொலை செய்யப்பட்டார். மேகியோ மட்டுமல்ல, கூடவே அவரது மனைவியும் தலையில் கோடாரியால் வெட்டப்பட்டிருந்தனர். இருவரின் குரல்வளைகளும் அறுக்கப்பட்டிருந்தது மேகியோவின் சகோதரர்கள் கொலைக்கு காரணம் என்று காவல்துறை சந்தேகப்பட்டாலும் பின்னாளில் அவர்கள் விசாரணைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். மேகியோ வீட்டைவிட்டு சில மீட்டர் தூரத்தில் நடைபாதையில் ஒரு செய்தி எழுதப்பட்டிருந்தது. அதில் ‘’திருமதி மேகியோ, இன்று திருமதி டோனி போலவே அமர்ந்திருக்கப் போகிறார்’’ என எழுதியிருந்தது.    1911ஆம் ஆண்டு கோடாரியால் வெட்டப்பட்டு மேகியோ கொல்லப்பட்...

தங்க கடத்தல்காரர் எப்படி இறந்தார் என்று கண்டறியும் காவல்துறை! தங்கம் - வினீத் சீனிவாசன், அபர்ணா

படம்
  தங்கம் மலையாளம்  தங்கம்  தங்கம் மலையாளம் வினீத் சீனிவாசன், அபர்ணா, கலையரசன் கேரளத்தில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து மும்பையில் விற்று சம்பாதிக்கிறார்கள் என்பதே கதை. ஒன்லைனாக கதை நன்றாக இருந்தாலும் சொன்ன விதம் முழுக்க விசாரணை சமாச்சாரமாக இருப்பதால் ஒருகட்டத்தில் படம் எப்போது முடியும் என்று எண்ணம் தோன்றுகிறது. தவிர்க்கமுடியவில்லை. தங்கத்தை நில மார்க்கமாக மும்பைக்கு கடத்தி சென்று விற்று வருவதுதான் வினீத் சீனிவாசன் குழுவின் திட்டம். ஆனால் ஒருமுறை இப்படி செல்லும்போது தமிழகத்தில் முத்துப்பேட்டை அருகே மாட்டிக்கொள்கிறார் சீனிவாசன். அதிலிருந்து மீண்டவர் மும்பைக்கு செல்கிறார். ஆனால் சில நாட்களிலேயே அவரிடமிருந்து எந்த தகவலும் வருவதில்லை. என்ன ஆனது என விசாரிக்கும் வினீத் சீனிவாசனின் நண்பர் குழு மும்பைக்கு செல்கிறது. பார்த்தால் வினீத் அறையில் தூக்கில் தொங்கி இறந்திருக்கிறார். ஆனால் அறையில் போராட்டம் நடந்திருப்பது போல தெரிகிறது. எனவே, மகாராஷ்டிரா போலீசார், வினீத்தின் நண்பரிடம், நீங்கள் உண்மையை அறிய நினைத்தால் நாங்கள் உதவுகிறோம். ஆனால் நாங்கள் கேரளத்திற்கு வந்தால் அந்த செலவ...

கொலைகார ஆண் துணைக்கு பெண்கள் உதவி செய்வதற்கான காரணங்கள்!

படம்
  உணர்வு ரீதியான உறவுகள் என்று சில உண்டு. ஒருவரின் காதலுக்காக, அவர் தன்னை விட்டுப்போக கூடாது என்பதற்காக.. நிறைய குற்றச்செயல்களை அறியாமலேயே செய்வார்கள். ஆஸ்திரேலியாவில் அப்படி நடந்த சம்பவம் ஒன்றைப் பார்ப்போம். இதில், வோரல் என்பவர்தான் குற்றவாளி. இவர், தன்னைக் காதலிக்கும் மில்லர் கொண்டு வரும் இளம்பெண்களை வல்லுறவு செய்து கொல்வார். சவங்களை புதைக்கும் பாக்கியம் வேறு யாருக்கு, மில்லருக்குத்தான். இப்படி ஏழு பெண்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். இதை சரி, தவறு என எப்படியும் மில்லருக்கு கூறத் தெரியவில்லை. அவருக்கு வோரலின் காதல் தேவைப்பட்டது. ஆனால் வோரல் ஒருநாள் சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவரை த் தொடர்ந்து வந்த காவல்துறையினர் மில்லரைப் பிடித்தனர். வோரல் மீது கொண்ட காதலுக்காகத்தான் குற்றங்களை செய்தேன். கொலை செய்யவில்லை. உடல்களைப் புதைத்தேன் என்று சொல்லி புதைத்த இடங்களை அடையாளம் காட்டினார். இதுபோன்ற கொலைஜோடிகளில் ஆதிக்கம் செலுத்துபவர், எளிதாக குற்றங்களை தான் செய்துவிட்டு அதற்கான பல்வேறு செயல்களை பிறரை செய்யவைப்பவராக இருப்பார்..இப்படி ஆணைகளைக் கேட்டு நடப்பவர், மனதளவில் சமநிலை இல்லாதவராக எளிதில்...

இயங்க முடியாத என்னை உன் கண்களால் பார்க்காதே- சிகாட்டில்லோவின் கொலை அட்டூழியங்கள்!

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 ஓநாயின் வாரிசு   ஒருவர் தன்னை ஓநாயாக உணர்ந்து அப்படியே நடந்துகொண்டால் எப்படியிருக்கும்? பதற்றமாக இருக்குமா இல்லையா? அப்படியான மனநிலை பிரச்னைகள் உலகில் நடந்துள்ளன. அப்படி ஒன்றுதான் இப்போது நீங்கள் படிக்கப் போவதும் கூட. பிரான்ஸ் நாட்டில் ஜீன் கிரேனியர் என்ற பதிமூன்று வயது சிறுவன்தான் கதையின் கதை நாயகன். பாதிரியாரின் மகன் என்று தன்னைக் கூறியவன், தனது ஆன்மாவை சாத்தானுக்கு விற்றுவிட்டதாக அர்ப்பணித்துவிட்டதாக சொல்லி சிறுமிகளை பிடித்து ரத்தம் உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கினான். ஓநாயின் தோலாடையை அணிந்தால் ஒருமணி நேரத்தில் ஓநாயாக மாறிவிடுவேன் என்று கதை கட்டியவன், ஊர் முழுக்க வதந்தியைப் பரப்பி வந்தான். அவன் சொன்னதையும் நம்பி ஒன்பது பேர் அவனிடம் செட்டு சேர்ந்து நண்பர்களாக மாறினார்கள். பிறகு குற்றச்செயல்கள் அதிகரிக்க அங்குள்ள உள்ளூர் நிர்வாகம் இதுபற்றி ஆராய்ச்சி செய்து ஜீனைக் கண்டுபிடித்து விசாரித்தது. அவன், அலட்டிக்கொள்ளாமல் எம் என்ற பெயருடைய கருப்பு நிற மனிதன் தனக்கு ஓநாய் உடையைக் கொடுத்து விரைவில் ஓநாயாக மாறிவிடுவாய் என்று கூறியதாக கூறினான். பிறகுதான், தான் குழ...

சிறப்பு ஆயுதப்படை சட்டம் - நடைமுறைக்கு வந்த தகவல்கள் அறிவோம்

படம்
  சிறப்பு ஆயுதப்படை சட்டம் 1958ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரிட்டிஷ் கால சிறப்பு சலுகைகள் கொண்ட ஆயுதப்படை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார். நாகலாந்தில் ஏற்பட்ட ராணுவ சிக்கல்களை சமாளிக்க நாடாளுமன்றம் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை உருவாகி மக்களவையில் அனுமதி பெற்றது. நான்கு மாதங்களில் அதனை அமல்படுத்தியது.  எப்படி அமல்படுத்துகிறார்கள்? மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் தீவிரவாத செயல்பாடுகள் அதிகமாக இருந்தால், அதை சமாளிக்க சிறப்பு ஆயுதப்படை சட்டம் உதவுகிறது. இதற்காக அதனை எப்படி குறிப்பிடுகிறார்கள் தெரியுமா? டிஸ்டர்ப்டு ஏரியாஸ் என்று. இந்திய அரசின் உள்துறை அமைச்சர்தான் ஆயுதப்படை சட்டத்தை அமல்படுத்துகிறார். சில சமயங்களில் இதுபற்றிய முடிவை மாநில அரசும் எடுக்கலாம்.  என்ன அதிகாரங்கள் ராணுவத்தினருக்கு கிடைக்கும்? மக்களில் யாராவது ஆயுதங்களை கையில் எடுத்தால், சட்டத்தை மீறினால் உடனே துப்பாக்கியை எடுத்து அவர்களை சுட ராணுவத்தினருக்கு அனுமதி உண்டு. ஐந்து பேருக்கு மேல் பொது இடத்தில் கூடியிருந்தால் அதை கலைக்க ராணுவத்தினருக்கு அதிகாரம் உண்டு. யாராவது மேல் சந்தேகம் இருந்...

தனது தோழியைக் கொன்ற குற்றச்சாட்டிற்காக விசாரணையைச் சந்திக்கும் டீனேஜ் பெண்! - தி கேர்ள் வித் எ பிரேஸ்லெட்

படம்
  தி கேர்ள் வித் எ பிரேஸ்லெட் தி கேர்ள் வித் எ பிரேஸ்லெட் எ கேர்ள் வித் பிரேஸ்லெட் மூலப்படம் தி அக்யூஸ்டு குற்றமும், குற்றவிசாரணையும், அதில் பார்வையாளர்களுக்கு மெல்ல விரியும் விஷயங்களும்தான் படம்.  காட்சி தொடங்கும்போது, கடற்கரை காட்டப்படுகிறது. அங்கு ஒரு குடும்பம் விளையாடிக் கொண்டிருக்கிறது. பெற்றோர், டீனேஜ் பெண், சிறுவன் ஆகியோர் அங்கு இருக்கிறார்கள். அப்போது அங்கு போலீஸ் குழு மூவர் வந்து டீனேஜ் பெண்ணை விசாரிக்க கூட்டிச்செல்கிறார்கள். இப்படித்தான் படம் தொடங்குகிறது.  அப்பாவுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அதனை உள்ளே அடக்கிக்கொண்டு வழக்குரைஞரை பார்த்து பேசுவதாக சொல்லுகிறார். பிறகு தான் படம் தொடங்குகிறது.  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என படம் தொடங்கும்போது, படத்தின் நாயகி லைஸ் படுக்கையில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கிறாள். அவர்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல் வழியாகவே நாம் அவள் பிணையில் இருக்கிறாள். அவளது காலில் எலக்ட்ரானிக் விலங்கு பூட்டப்பட்டிருப்பதை அறிகிறோம்.  ஆறு மாத சிறை தண்டனைக்குப் பிறகு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள்.  ...