இடுகைகள்

கேரக்டர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனித்துவமான பாத்திரங்களின் இயல்பை பேசும் மின்னூல்! - What an idea sirji

படம்
  பொதுவாக மசாலா படங்களில் பரிசோதனை முயற்சிகளை நிறைய இயக்குநர்கள் செய்ய மாட்டார்கள். ஆனால் இன்று வரும் புதிய இயக்குநர்கள் அதையும் ஒரு கை பார்க்கிறார்கள். இன்று தியேட்டரில் வெளியாகும் படம் கடந்து ஓடிடி என்பது தனி ஒரு வணிகமாக மாறிவருகிறது.  வணிகப் படங்களில் தனித்துவமான பாத்திரங்களை நெருக்கடிகளுக்கு பணியாமல் உருவாக்கி வெற்றி பெற வைப்பது கடினம். அப்படியான சில பாத்திரங்களை மட்டுமே இந்த நூல் பேசுகிறது.  படம் வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் கூட சில பாத்திரங்களை நாம் மறக்கவே முடியாது. சினிமா என்பது நம் ரத்தத்தோடு கலந்த ஒன்றாக மாறி வெகு காலமாகிறது. அப்படியான சில மசாலா படங்களில் பாத்திரங்களைப் பற்றி பேசி அதன் உளவியலை ஆராய்வதே நூலின் நோக்கம். நூலின் அனைத்து படங்களும், பாத்திரங்களும் மகத்தானவை என்று கூறமுடியாது. எனது மனதிற்கு வித்தியாசமான பாத்திரங்கள் என்று தோன்றியவற்றை எழுதியிருக்கிறேன். உங்களுக்குப் பிடித்தால் நூலை தரவிறக்கி வாசியுங்கள். நன்றி! லாய்ட்டர் லூன் நூலைப் பெற... https://www.amazon.in/dp/B0C8MQP59X

யாரும் புரிந்துகொள்ள முடியாத வினோதமான அடியாள் - ஊசரவல்லி - டோனி

படம்
  ஊசரவல்லி - டோனி ஊசரவல்லி - டோனி  ஊசரவல்லி (தெலுங்கு) டோனி (ஜூனியர் என்டிஆர் ) இயக்குநர் - சுரேந்தர்ரெட்டி   ஊசரவல்லி படத்தில் வரும் டோனி பாத்திரத்தை யாருமே புரிந்துகொள்ள முடியாது. இதற்காகவே முரளி சர்மா, பிரபாஸ் சீனுவின் தொடக்க காட்சியை வைத்திருக்கிறார்கள். இதில் டோனி என்பவன் எறும்புக்கும் தீங்கு நினைக்காதவன். அதேசமயம் தனக்கு தேவைப்படும் விஷயம் கிடைக்க என்னவேண்டுமானாலும் செய்யக்கூடிய, அதற்கு தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளக்கூடியவனாக அறிமுகப்படுத்தி பேசுவார். படத்தின் தெலுங்கு தலைப்பின் பொருள் பச்சோந்தி. ஜூனியர் என்டிஆரின் சிறந்த அறிமுக காட்சிகளில் ஊசரவல்லியும் ஒன்று. டோனியைப் பொறுத்தவரை தனக்கு காரியம் ஆகுமென்றால் எப்படியென்றாலும் மாறக் கூடியவன். விதிகளை அழித்து மீண்டும் எழுதினாலும் அதையும் அழித்துவிட்டு தனக்கு பிடித்ததுபோல காரியங்களைச் செய்பவன். யாராலும் புரிந்துகொள்ள முடியாத   குணம் கொண்டவன். டோனி, கூலிக்கு பிறரை அடித்து மண்டையைப் பிளக்கும் அடியாள். மும்பையில் வாழ்ந்து வந்தவரின் தந்தையும் டான் அந்தஸ்தில் இருந்தவர