இடுகைகள்

சாணி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசுவைக் காக்க படாதபாடு படும் இந்தியா அரசு! - அமலுக்கு வரும் அவசியமான விதிகள்!

படம்
      cc     கால்நடைகள் விரைவில் முறைப்படுத்தப்படவிருக்கின்றன. வாயில்லாத ஆனால் பாலை பாக்கெட் நிறைய கொடுக்கும் ஜீவன்களை காப்பதுதானே இந்திய ஜனநாயகத்தின் மகத்துவம். கால்நடைகளைப் பற்றிய சிறிய டேட்டா இதோ! 13.6 கோடி கால்நடைகள் இந்தியாவில் உள்ளன. இதில் 2.4 லட்சம் கால்நடைகள் தலைநகர் டில்லியில் வாழ்கின்றன. பசுக்கள் தினசரி தலா 15-30 கிலோ அளவில் சாணியையும் சிறுநீரையும் வெளித்தள்ளுகின்றன. இவை பெரும்பாலும் குப்பையில் வீசப்படுகின்றன. இல்லையெனில் பாவம் தீர்க்கும் கங்கையின் பாகமாக இவையும் மாறுகின்றன. இக்கழிவிலிருந்து அம்மோனியா, சல்பைடு, ஹைட்ரஜன், மீத்தேன் ஆகிய வாயுக்கள் வெளியாகின்றன. புதிய விதிகள் பசுவின் சாணி, சிறுநீரை சாக்கடையில் அள்ளி வீசக்கூடாது. நகராட்சி மாநகராட்சி இதற்கென தனி இடங்களை உருவாக்கி அதில் அவற்றை கொட்டுவார்கள். இதிலிருந்து வறட்டி, எரிவாயு தயாரிக்கும் புதிய ஐடியாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு கால்நடைக்கு 150 லிட்டர் நீர் மட்டுமே என ரேஷனில் அரிசி நிறுப்பது போல அளவிட்டு வழங்கப்படும். கழிவுகள் நிலத்தடி நீரில் கலப்பதை தடுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். கோசாலைகள் குடியிருப்புகளிலிருந்து 200