வாரம் முழுக்க காவல்துறை அதிகாரி, வார இறுதியில் கொலையாளி! விஜிலாண்டே
விஜிலாண்டே மாங்கா காமிக்ஸ் கொரியா இந்தக்கதையில் நாயகன், ரௌடி ஒருவனால் பாதிக்கப்பட்டு தாயை இழந்தவன்.அதாவது, அம்மாவை ரௌடி அடித்து உதைத்து படுகொலை செய்துவிடுகிறான். நீதிமன்றம் குற்றவாளிக்கு மெலிதான தண்டனை கொடுத்துவிட்டு விட்டுவிடுகிறது. இது நாயகனை பாதிக்கிறது. சிறுவனாக இருப்பவன், பெரியவனாகி குற்றவாளிகளை அடியோடு அழிப்பதாக உறுதி எடுக்கிறான். அதற்கு காவல்துறையே சரியான வழி என அங்கு வேலைக்கு சேர்கிறான். அவனது வயதில் உள்ளவர்களில் கராத்தே, ஜூடோ, ஜிஜூட்சு ஆகியவற்றை சிறப்பாக கற்றவர்கள் யாருமில்லை என்று பெயரும் புகழும் எடுக்கிறான். உங்களுக்கு இப்போதே புரிந்திருக்கும். யார் விஜிலாண்டே என்று. நாயகன்தான் குற்றவாளிகளை ஹூடி அணிந்துகொண்டு சென்று கை முஷ்டிகளால் தாடையை பெயர்த்து குத்து குத்தென குத்தியே கொல்கிறான். வேறு எந்த ஆயுதங்களும் கிடையாது. ஒருவகையில் அப்படி கொல்வது நாயகனுக்கு ஆத்ம திருப்தியை தருகிறது. கொரியாவில் நீதித்துறை கறைபடிந்த ஊழல் புரையோடியது. இதன் காரணமாக பள்ளியில் கேலி சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல், அடித்து உதைத்தல், குடும்ப வன்முறை என எவற்றுக்கும் நீதித்துறை கடுமையான த...