இடுகைகள்

வேணு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டு மனைவிகள் தேவை என்ற லட்சியத்தை நோக்கி நடக்கும் நாயகன் எதிர்கொள்ளும் சிக்கல்கள்!

படம்
           ஶ்ரீகிருஷ்ணா வேணு, கௌரி முஞ்சால், ஶ்ரீகாந்த் மேகா, ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு இயக்கம் விஜயேந்திர பிரசாத் நாயகனின் பாட்டி, அவர்களது குடும்பத்தில் ஆண்களுக்கு ஆயுள்காலம் குறைந்துகொண்டே வருகிறது என்பதால், பேரனாகிய நாயகன் இரு பெண்களை மணக்கவேண்டும் என்று கூறுகிறாள். அதை சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்துபோகிறாள். இதனால், நாயகன் அவனது மாமாவோடு இரு மணப்பெண்களை மணமுடிக்க பெண் பார்க்கச் செல்கிறான். அவனது வினோதமான லட்சியம் நிறைவேறியதா இல்லையா என்பதே கதை. படத்தின் கதையில் உள்ள முரண் நன்றாக இருந்தாலும், எடுக்கப்பட்ட விதம் டிவி சீரியல் ரகம். அந்த தரத்தை பெரிதாக தாண்டி வரவில்லை. நாயகனுக்கு பெற்றோர் கிடையாது. டீன் ஏஜில் ஆதரவாக இருந்த பாட்டியும் இறந்துவிடுகிறாள். அவன் வீட்டில், அவனும் வேலைக்காரனும் மட்டுமே இருக்கிறார்கள். வேலைக்காரன்தான ஒரே நண்பனும் கூட இதைக்கடந்த அவனது மாமா மண்டேலா பிரம்மானந்தம், வழிகாட்டுபவராக இருக்கிறார். மண்டேலா, வேலைக்கு செல்வதில்லை. மனைவி செல்வத்தைக் கொண்டவள் என்பதால், தின்று படுத்து தூங்கி எழுந்து நிம்மதியாக இருக்கிறார். அவரது காட்சிகளில் காமெடி...

ராயலசீமா காரப்பொடியை லெக்பீஸில் தடவி சாப்பிட்டால்... அல்லரே அல்லரி - வேணு, நரேஷ், பார்வதி மெல்டன், மல்லிகா கபூர்

படம்
  அல்லரே அல்லரி  வேணு தொட்டம்பள்ளி, அல்லரி நரேஷ், மல்லிகா கபூர், பார்வதி ஷெல்டன் வேணு சிறுவயதில் இருக்கும்போது அவரது அத்தை. தனது கணவரைக் கொன்ற இருவரைக் கொன்றுவிட்டு சிறைக்கு செல்கிறார். கொலை செய்யவேண்டிய ஆட்களில் ஒருவர் மட்டுமே மிச்சமிருக்கிறார். அவரை தனது தம்பி மகனை வைத்து கொன்றுவிட்டு, அதற்கு பிரதியுபகாரமாக தனது மகளை திருமணம் செய்து கொடுப்பது அவரது திட்டம். அது நிறைவேறியதா இல்லையா என்பதே கதை.  இப்படி கேட்டாலே நிறைவேறாது என்பதுதான் விஷயம். அதேதான். வேணு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார். அங்கு வரும் இளம்பெண் வயிற்றில் கருவோடு இருக்கிறாள். தற்கொலைக்கு முயன்றவளை அரும்பாடுபட்டு காப்பாற்றுகிறார். அவளது கர்ப்பத்திற்கு காரணம் யார் என தெரிந்துகொண்டு அவனைக் கூட்டிவந்து கல்யாணம் செய்து வைக்கிறார். இவரது தலையீட்டால் இன்னொரு பெண்ணின் திருமணம் நின்றுபோகிறது. அந்த பெண் தன் கல்யாணம் நின்றதால் செலவு செய்த ஏழு லட்ச ரூபாயைக் கேட்கிறார். நாயகன் மாதசம்பளம் வாங்கும் மருத்துவர் என்பதால், தான் கல்யாணம் செய்து வைத்த ஆட்களிடமே போய் காசு கேட்கிறார். ஆனால் அவர்களோ காசு தர முடியாது எ...