இடுகைகள்

தவறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாரசிட்டமால் சிரப்பால் கல்லீரல் பாதிப்பு - தவறு எங்கே நடக்கிறது?

படம்
  பாரசிட்டமால் சிரப் ஓவர்டோஸால் கல்லீரல் பாதிக்கப்படும்  குழந்தைகள்- தவறு எங்கே நடக்கிறது? ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் உடனே மருந்துக்கடையில் பார்மாசிட்டமால் வாங்கி சாப்பிட்டுவிட்டு, வேலைக்கு போகும் பலருக்கும் உண்டு. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாரசிட்டமால் சிரப்பை காய்ச்சலுக்கு எடுத்துக்கொண்டு நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்லீரல் செயலிழந்து கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். பெற்றோர் பலரும் பாரசிட்டமாலை   எந்த ஆபத்தும் இல்லாத மருந் து என நினைக்கின்றனர். உண்மையில் அது தவறானது. குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சிரப், அவர்களின் உடல் எடை அடிப்படையிலானது. ஆனால், பாரசிட்டமால் மருந்து இந்தியாவில் நான்கு   விதமாக தன்மையில் விற்கப்படுகிறது. இதனால் சிரப் ஓவர்டோஸாக கொடுக்கப்பட்டு குழந்தைகள் ஆண்டுக்கு ஒருவரேனும் இறந்து போகிறார்கள். மீதியுள்ளவர்கள் அவசர சிகிச்சையில் வைக்கப்படுகிறார்கள்.   இதை எதிர்கொள்வது எப்படி? பாரசிட்டமால் சிரப்பைக் குடித்த குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுவலி, வாந்தியில் ரத்தம் இருந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். இல்லையெனில் கல்லீரல் பாதிக்கப்ப

எமர்ஜென்சி -இஎம் மருத்துவத்தில் கவனிக்க வேண்டியவை என்னென்ன?

படம்
  அவசரநிலை மருத்துவம் அடிப்படை அறிவோம் அனைத்து நாடுகளிலும் அவசரநிலை மருத்துவம் உண்டு. இதற்கென தனி தொலைபேசி எண்ணைக் கூட கொடுத்திருப்பார்கள். அமெரிக்காவில் 911 என்றால் சீனாவில் 119, தமிழ்நாட்டில் 108, பிற மாநிலங்களிலும் இப்படி ஏதோ ஒரு எண் வரிசை இருக்கும்.   எமர்ஜென்சி என்பது அவசரமாக நோயாளியைப் பார்த்து அவரது உயிரைப் பாதுகாக்கும் நிலை என புரிந்துகொண்டால் போதும். பிற நாடுகள் எப்படியோ இந்தியாவைப் பொறுத்தவரை கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தொடக்க சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் வேலை அதிகம். ஆனால் ஆட்கள் குறைவு. எமர்ஜென்சி என்று வரும் நோயாளிகளை முதலுதவி செய்துவிட்டு உடனே அருகில் உள்ள   அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பிவிடுவதே வழக்கம்.   இதனால் நோயாளி பிழைப்பாரா என்றால் ஆம்புலன்ஸை ஓட்டுபவரின் திறனைப் பொறுத்தது. நோயாளியும் பிரச்னையை சமாளிக்கத்தான் வேண்டும். எமர்ஜென்சி துறை என்றே தனியார் மருத்துவமனைகள் இப்போது திறக்கத் தொடங்கிவிட்டன. அரசு மருத்துவமனைகளிலும் இத்தகைய பிரிவுகள் உண்டு. எப்படி வேலை செய்கிறார்கள் என நீங்களே சென்று பார்ப்பது உடலுக்கும் மனதுக்கும் கேடு.

விண்ணைத்தாண்டி சொந்த கிரகத்திற்கு பறக்க முயலும் பஸ் லைட் இயர்! - லைட்இயர் - டிஸ்னி பிக்ஸார்

படம்
  லைட் இயர் பிக்சார் -டிஸ்னி வேற்று கிரகத்திலிருந்து பூமியை ஒத்த கிரகம் ஒன்றுக்கு ஆராய்ச்சி செய்ய ஸ்பேஸ் ரேஞ்சர்கள் வருகிறார்கள். அப்படி வந்து ஆராய்ச்சி செய்யும்போது, அங்கு உயிருள்ள ஜந்துகளை பிடித்து உண்ணும் மர விழுதுகள் இருப்பதைப் பார்க்கிறார்கள். அவற்றிடமிருந்து தப்பிக்கும்போது விண்கலம் பாறையில் மோத அங்குள்ள பீடபூமி அமைப்பு ஒன்றில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து தங்கள் கோளுக்கு மீண்டு சென்றார்களா இல்லையா என்பதே கதை.  பஸ் லைட் இயர் (செல்லப்பெயர் பஸ்) என்பவர்தான் இதில் ஸ்பேஸ் ரேஞ்சர்களில் ஒருவர். இவருக்கு ஆணைகளை வழங்கும் கமாண்டர் பெண்மணி ஒருவர் உண்டு. அவர் பெயர் அலிஷா. பஸ் செய்யும் தவறு காரணமாகவே விண்கலம் பீடபூமி அமைப்பில் மாட்டிக்கொள்கிறது. கூடவே விண்கலத்திற்கு ஆற்றல் தரும் கிரிஸ்டலும் உடைந்துபோய் விடுகிறது. இந்த எரிபொருள் இருந்தால்தான் அவர்களின் சொந்த கிரகத்திற்கு செல்ல முடியும்.  இதை அதே கிரகம் ஒன்றிலிருந்து அகழ்ந்து எடுத்து சோதித்து பிறகுதான் பயன்படுத்த முடியும்.  தங்களது சொந்த கிரகத்திற்கு செல்வதே பஸ் காலகட்ட வீரர்களுக்கு லட்சியம்.  பஸ் இப்படி சோதனை செய்ய செய்ய அவரது

கோவை ஆராய்ச்சியாளரும், அவரது நம்பிக்கைக்குரிய குருதேவரும்! - மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
 மயிலாப்பூர் டைம்ஸ்  ஆராய்ச்சியாளரின் அவதி... நான் வேலை செய்யும் இதழில் எனது பணிக்காலம் முடிவுக்கு வரவிருக்கிறது. ஆனால், இப்போதுதான் இதுவரை எதிர்கொள்ளாத சிக்கல்களை அந்த மாதவப் பெருமாள் எனக்கு கொடுத்து வருகிறார். அவர் நல்லவை, அல்லவை என எது கொடுத்தாலும் மறுக்கவா முடியும். அப்படித்தான், காலை பதினொரு மணிக்கு போனில் அழைப்பு ஒன்று வந்தது. அதில், ஆராய்ச்சியாளர் பற்றி தவறாக எழுதியிருக்கிறீர்கள்.  பெயர் தவறு, தவறாக அவரை காட்டியிருக்கிறீர்கள் என ஒருவர் கொச்சையான தமிழில் பேசினார். எனக்கு அதிர்ச்சி என்னவென்றால், அவர் கூறும் கோவை ஆராய்ச்சியாளர் ****************** பற்றி இரண்டே பத்திகள்தான் எழுதப்பட்டன. அதுவும் அவர் யார், என்ன ஆராய்ச்சி செய்கிறார் என்பது மட்டுமே.  போனில் பேசிய பிரகஸ்பதி, நேபாள நாட்டு குகை ஆராய்ச்சியாளர் பற்றிய செய்தியை எதற்கு பிரசுரம் செய்தீர்கள்? டெய்லி புஷ்பம் எல்லோருடைய வீட்டுக்கும் வருகிறது. தவறாகிவிடுமே என நான் செய்த குற்றங்களின் பட்டியலை எக்ஸ்டென்ஷன் செய்துகொண்டே போனார்.  ஸாரி சார் இனி அவர் பற்றி எதுவும் எழுதவில்லை. எழுதியதற்கு சாரி என சொல்லி அழைப்பை துண்டித்தேன்.  இதற்குப் பிற

தவறுகளை தட்டிக்கேட்போம்! -ரான்பாக்சி முதல் இன்போசிஸ் வரை

படம்
இன்போசிஸ் நிறுவனம் அண்மையில் தவறான வணிக நடவடிக்கைகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதன் விளைவாக நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன. இக்குற்றச்சாட்டை முனவைத்தவர் பற்றி பலரும் மறந்திருப்பார்கள். இவர்கள் மீதும் இவர்களின் குடும்பத்தினர் மீதும் கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து மீண்டிருப்பதோடு பல்வேறு நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளை இவர்கள் வெளிக்கொண்டு வந்துகொண்டே இருக்கிறார்கள். தற்போது பங்குச்சந்தையை முறைப்படுத்தும் செபி, நிறுவனங்களின் தவறான நடவடிக்கையைத் தெரியப்படுத்தினால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அளிலான பரிசை வழங்குகிறது. தவறுகளை வெளிப்படுத்துவர்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. அவர்களின் புகைப்படம், முகவரி ஆகியற்றை ரகசியமாக பாதுகாக்கின்றனர். 2014ஆம் ஆண்டு இதுபோல தவறுகளை கண்டுபிடித்து கூறுகிறவர்களை பாதுகாக்க அரசு சட்டம் இயற்றியுள்ளது. நிறுவனங்களின் விதிமீறல்களை அரசுக்கு சொல்வது, அமெரிக்காவில் பராக் ஒபாமாவின் ஆட்சியில் 2008ஆம்ஆண்டுதான் தொடங்கியது.அப்போது பொருளாதார சிக்கல்கள் தொடங்கியிருந்தன. எனவே பங்குச்சந்தையைக் காப்பாற்றவே அரசு, வ