இடுகைகள்

சீஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீஸ் டேட்டா!

படம்
target ஃபிரான்ஸ் நாடு, உலகிலேயே சீஸ் தயாரிப்புக்கு புகழ் பெற்றது. தோராயமாக 300 வகை சீஸ்களை தயாரித்து வருகிறது. பர்கருக்கு பயன்படுத்துகிறார்களே அவ்வகை சீஸின் பெயர் ஃபிரோமேஜ் ஃபிரான்காய்ஸ். இதில் ஆரஞ்சு சுளை போன்று வசீகரிக்கும் அமெரிக்க சீஸ் என்பது தனிப்பட்டது. பீட்ஸா, பர்கர் சாப்பிட்டுப் பழகியதால் இன்று இந்தியர்களே எக்ஸ்ட்ரா சீஸ் டாப்பிங்க்ஸ் கேட்டுவாங்கி சாப்பிட்டு பில் கொடுக்கிறார்கள். அப்போது அமெரிக்கர்கள் மட்டும் சும்மாயிருப்பார்களா?  ஜூன் 2018 இல் மட்டும் 840 பவுண்டுகள் அளவிலான சீஸை காலி செய்திருக்கின்றனர். இந்த ஆண்டின் ஜனவரியில் அதன் அளவு 805 பவுண்டுகளாக உள்ளன. ஒரு அமெரிக்கர் நான்கு பவுண்டுகள் சீஸ்களை லபக்குகிறார். கடந்த ஆண்டின் அமெரிக்க சீஸ் மார்க்கெட் மதிப்பு, 2.77 பில்லியன் டாலர்கள்.  கிராஃப்ட் சிங்கிள் எனும் சீஸ் பிராண்டை அமெரிக்கர்களில் 40 சதவீதம் பேர் விரும்பி வாங்குகின்றனர். கடந்த ஆண்டு பதப்படுத்தப்பட்ட சீஸ் விற்பனை 1.6% அளவுக்கு குறைந்தது. அரைமணிநேரத்திற்கு குறைவான நேரத்தில் 65.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சீஸை வெப்பப்படுத்தினால், அது பதப்படுத்த