இடுகைகள்

காஷ்மீர். சுப்பிரமணியன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மேற்கு வங்க தேர்தலில் மோடி தோற்றுப்போனது தேசிய அளவில் அவருக்கு பின்னடைவுதான்! - முன்னாள் பிரதமர் தேவேகௌடா

படம்
              முன்னாள் பிரதமர் தேவகௌடா இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டணி மூலம் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் . இவருக்கு இப்போது 88 வயதாகிறது . மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு இப்போது உழைத்து வருகிறார் . அவரிடம் அரசியல் நிலவரங்களைப் பற்றி பேசினோம் . அன்றைய நிலைக்கும் இன்றைய நிலைக்கும் அரசில் எப்படி மாறியிருக்கிறது என்று நினைக்கிறீர்கள் ? அன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிறைய கட்சிகள் விலகின . இன்று மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறார் . சிவசேனா கட்சி அவர்களின் கூட்டணியில் இல்லை . காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் பலவீனமாக உள்ளது . ஐக்கிய முற்போக்கு கூட்டணி 27 கூட்டணிக் கட்சிகளை ஒன்றாக இணைத்து ஆட்சி நடத்தியது . இனிமேல் அதுபோல இணைப்பு சாத்தியப்படுமா என்று தெரியவில்லை . நான் தேசிய அரசியலில் இருந்து விலகிவிட்டேன் . இப்போது கர்நாடகாவை மட்டுமே கவனித்து வருகிறேன் . நீங்கள் பிரதமராக கூட்டணிக்கட்சிகள் மூலம் பதவியேற்று 25 ஆண்டுகள் ஆகிவிட்டன . உங்களது பதவிக்காலத்தை எப்படி பார்க்கிறீர்கள் ? இதுபற்றி முன்னாள் கேபினட் செயலாளர் டிஎஸ்ஆர் சு