இடுகைகள்

டெக்உலகம்- அடிக்‌ஷன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூளையை கட்டிப்போடும் பைனரி சங்கிலி!

படம்
இளைஞர்களை அடிமையாக்கும் டெக்னாலஜி நிறுவனங்கள் !  மீள்வது எப்படி ? - ச . அன்பரசு பஸ்ஸில் பக்கத்திலிருக்கிறவருக்கு அழைப்போ , குறுஞ்செய்தியோ வந்தால் உங்கள் கை செல்போனை தேடுகிறதா ? காலையில் எழுந்தவுடன் சோஷியல் தளங்களில் உங்கள் செல்ஃபிக்கு லைக்ஸ்களை பரபரப்பாக கண்கள் தேடுகிறதா ?   முப்பது நிமிட டீபிரேக்குகளில் வாட்ஸ்அப் வீடியோக்களையும் , இன்ஸ்டாகிராம் படங்களையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என தோன்றுகிறதா ? அப்படியானால் டெக்னாலஜி நிறுவனங்கள் உங்களை டிஜிட்டல் பைனரி சங்கிலியால் பிணைத்து அடிமையாக்கிவிட்டன என கற்பூரம் அணைத்து சத்தியம் செய்து சொல்லலாம் . மனிதர்கள் விற்பனைக்கு !   யாரோ ஒருவர் மட்டுமல்ல ; ஜென் இசட் தலைமுறை முழுக்கவே இன்று ஸ்மார்ட்போனின் ஒளிர்திரையில் கவனம் குவித்து குனிந்த தலை நிமிராமல் வாழ்ந்துகொண்டிருக்கிறது . ஃபேஸ்புக் , கூகுள் , அமேஸான் ஆகியோரின் டேட்டா கொள்ளை பற்றி பேசுகிறோம் . உண்மையில் மனிதர்களின் தகவல் மட்டுமல்ல ; மனிதர்களே இணையச்சந்தையில் விற்கப்படும் விளைபொருட்கள்த