இடுகைகள்

ஈக்வடார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காடே எங்கள் வாழ்வு - வனமே எங்கள் வீடு

படம்
  காடே எங்கள் வாழ்வு - வனமே எங்கள் வீடு ஐரோப்பிய நாட்டினர், அமேசான் காட்டுக்குள் நுழைந்ததற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று தங்கம், மற்றொன்று அதிகாரம். வெளியே இருந்து வந்த அந்நியர்கள், காட்டில் வாழ்ந்த பழங்குடி மக்களுக்கு நோய்களைக் கொண்டு வந்தனர். அதையும் தாங்கி நின்று எதிர்த்தவர்களை நவீன ஆயுதங்களால் படுகொலை செய்தனர்.  இதன் காரணமாகவே, ஆங்கிலேயர்களின் அனைத்து புனைகதைகளிலும் காடுகள் ஆபத்து நிறைந்தவையாகவே உள்ளன. அவர்களைப் பற்றிய உண்மையை அறிந்தபோது அதில் எனக்கு ஆச்சரியம் ஏதும் தோன்றவில்லை.  கட்டற்ற தொழில்மயமாக்கல் சூழலை மாசுபடுத்தி மக்கள் வாழ முடியாத வகையில் நச்சாக்குகிறது. அமேசான் காடுகளை எரிப்பது, திரும்ப பெற முடியாத இழப்பை ஏற்படுத்துகிறது. கட்டுப்படுத்த முடியாத வகையில் வெப்பம் அதிகரித்து வருவது, பூமியின் இயல்பான வாழ்வை அழிக்கிறது.  தாய்மண்ணை யாராலும் காப்பாற்ற முடியாது. அவளைக் காப்பாற்ற நானோ, நீங்களோ கூட தேவையில்லைதான். அவளுக்கு வேண்டியது மரியாதை. அதைத் தராத மனிதகுலத்தை அவளால் பழிதீர்த்துக்கொள்ள முடியும். காலம்தோறும் அரசு, தொழில்துறையினர் தாய்மண்ணுக்கு குறைந்தபட்ச மரியாதையைக் கூட அழிக்கா