இடுகைகள்

ஜாதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கையை குலைக்கிறதா டேட்டிங் ஆப்கள்?

படம்
பம்பிள், ஓகே க்யூபிட், குவாக் குவாக் ஆகிய டேட்டிங் ஆப்கள் பெருந்தொற்று காலத்தில் புகழ்பெற்றன. நீண்டகால உறவை வளர்த்துக்கொள்ள பலரும் இதனை பயன்படுத்தினார். ஆனால் அதேசமயம், இதன் பக்கவிளைவுகளும் பலரையும் பாதித்துள்ளன. இதில் தங்களது பயோவை பதிவு செய்து காதல் உறவை எதிர்பார்த்தவர்களுக்கு நிறைய ஏமாற்றங்களும் கிடைத்துள்ளன. ஒருவரின் விருப்பங்கள் அடிப்படையில் அல்காரித முறையில் ஆட்களை தேடி தருவதை டேட்டிங் ஆப்கள் செய்கின்றன. எனவே, இவற்றைப் பயன்படுத்துபவர்கள் பலரும் நேரடியாகவே நாம் பார்க்கும் ஒருவரைப் பிடித்திருந்தால் பேசிப் பழகலாம். ஆப்பில் யாரையும் பார்த்துப் பழகவேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். புத்தாண்டு நேரம். இனிமேல் நான் குடிக்கிறதை விட்டுட்டேன் மாப்ள என நண்பர் போன் செய்து சொன்னால் நமக்கு மனதில் என்ன தோன்றும். குடிச்சிருக்கான் போல என நினைத்துக்கொண்டு சரிடா என்று சொல்லி போனை அணைப்போமே அதேதான். டேட்டிங் ஆப்களை பயன்படுத்துபவர்கள் வெளிநாடுகளைப் போல அதனை சீரியசாக நினைப்பதில்லை. போரடிக்கிறது ஏதாவது செய்வோமே என்று டேட்டிங் ஆப்பை நோண்டுகிறார்கள். செய்தி அனுப்புகிறார்கள். சந்

தமிழ் பிராமணர்களுக்கு வட இந்தியாவின் மணப்பெண்! - என்ன பிரச்னை?

படம்
  தமிழ்நாட்டிலுள்ள பிராமணர்கள் சங்கத்தினர், தமிழ்நாட்டில்  பெண்கள் கிடைக்காததால், பீகார். உ.பியில் பெண்களை தேடிவருகின்றனர். இந்த வகையில் 40 ஆயிரம் ஆண்களுக்கு பெண்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த தகவல்கள் சங்கம் வெளியிடும் இதழ் கூறியுள்ளது. இந்த நிலை இப்போது செய்தியானாலும் கூட பத்தாண்டுகளாக நிலை இப்படித்தான் போகிறதாம்.  முப்பது முதல் நாற்பது வரையிலான மாப்பிள்ளைகள் தங்களுக்கு ஏற்ற பிராமண பெண் கிடைக்காமல் திருமணம் நடக்காமல் உள்ளனர் என்று பிராமணர் சங்க தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.  இதற்கு என்ன காரணம் , பெண், ஆண்களின் பாலின விகிதம்தான் காரணம் என அறியவந்துள்ளது. பத்து பிராமண ஆண்களுக்கு, ஆறு பெண்கள்தான் உள்ளனர்.  குடும்பக்கட்டுப்பாட்டை பிராமணர்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டு கடைபிடித்துள்ளனர். இதனை அவர்களின் ஆச்சாரியர்கள் எதிர்த்தாலும் கூட அவர்கள் கேட்கவில்லை. இதனால்தான் பெண்கள், ஆண்களின் விகிதம் மாற்றம் பெற்றுள்ளது.வட இந்திய மாநிலங்களில் இந்தி பேச தெரிந்த ஒருங்கிணைப்பாளர்களை பிராமண சங்கங்கள் உருவாக்கியுள்ளன. இப்படி நிலைமை மாறுவதற்கு ஆண்மைய கருத்தாக்கம் பிராமணர்களின் ஜாதியில் இருப்பதுதான் கார

தலித் மாணவர்களுக்கான வசதிகளை செய்துகொடுக்காமல் அவர்களை அலைகழித்தனர்! - தீபா மோகனன், முனைவர் படிப்பு மாணவி

படம்
  தீபா மோகனன்   1035 × 1180     தீபா மோகனன் கேரளாவின் கோட்டயத்திலுள்ளது , காந்தி பல்கலைக்கழகம் . இங்கு பத்தாண்டுகளாக சாதி ரீதியான புற்க்கணிப்பு நடைபெற்றுள்ளது என உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் தீபா மோகனன் . இவர் அங்கு பிஹெச்டி படிக்கும் மாணவி . பதினொரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அதில் பல்கலைக்கழக நிர்வாகத்தை பணிய வைத்திருக்கிறார் . தீபா மோகனன் 1600 × 961 பல்கலைக்கழகங்களில் உள்ள ஜாதி பிரச்னைகளை எப்படி தீர்ப்பது ? ஜாதி ரீதியான பிரச்னைகள் அனைவரும் வெளிப்படையாக பேச முன்வரவேண்டும் . நான் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இதுவரை எட்டு புகார்களை அளித்துள்ளேன் . விசாரணையை தாமதம் செய்ய விசாரணைக் குழுக்களை அமைப்பார்கள் . அப்புறம் அது அப்படியே நின்றுவிடும் . இதில் சில புகார்களின் தாமதத்திற்கு நீதிமன்றமும் காரணமாக உள்ளது . பத்தாண்டுகளாக பல்கலைக்கழகத்தில் ஜாதி ரீதியான பிரச்னைகளை எதிர்த்து போராடி வருகிறேன் . அதனை நீர்த்துப்போகும் விஷயங்களை நிர்வாகத்தினர் செய்து கொண்டே இருந்தனர் . தீபா மோகனன் 1280 × 720 பாலியல் ரீதியான துன்புறுத்தல் பற்றிய புகார்களை எப்படி பார்க்கிறீர்கள்

ஆதி திராவிடர்களை எப்படிபார்ப்பனியம் அடிமைப்படுத்தியது? - ஜாதியத்தின் தோற்றம் - கொளத்தூர் மணி

படம்
  கொளத்தூர் மணி ஜாதியத்தின் தோற்றம் கொளத்தூர் மணி திராவிடப் பள்ளி கோடம்பாக்கம் ஜாதி என்பது எப்படி வந்தது, அதனை நாம் சாதி என மாற்றி எழுதுவது சரியா, பார்ப்பனர்களுக்கும், ஆதி திராவிடர்களுக்குமான வேறுபாடு, வர்க்க, ஜாதி வேறுபாடுகள் எப்படி உருவாயின, மனு தர்மம் ஜாதி உருவாக்கத்திற்கு என்ன ஊக்கத்தை கொடுத்தது என்பதை அறிந்துகொள்ள இந்த நூலை வாசிக்கலாம்.  கொளத்தூர் மணி எளிமையாக ஜாதியத்தின் தோற்றம் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை பல்வேறு ஆதாரங்களின் மூலம் விளக்கியுள்ளார்.  மனு தர்மம் முழுக்க ஆணாதிக்கத்தின் உச்சத்தில் அன்று நிலவிய தன்மையில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கும் சான்றுகள் உள்ளன. பார்ப்பன பெண்கள் பற்றிய ஒழுக்கத்தை மனுதர்ம விதிகள் குறிப்பிடுகின்றன. பார்ப்பன ஆண், சூத்திரப் பெண் இணைந்து பெறும் பிள்ளைகள், பார்ப்பன பெண் சூத்திர ஆண் இணைந்து பெறும் பிள்ளைகள் என இரண்டுக்கும் ஏராளமான வேறுபாட்டை மனு வகுத்து வைத்திருக்கிறார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவான மனு, அன்றைய நிலையில் இருந்த ஜாதி விவகாரங்களை ஊக்கப்படுத்தி உறுதிப்படுத்தி குறிப்பிட்ட கட்டுமானத்தில் கொண்டு வந்திருக்கிறார்.  ஆரியர்கள் பல்வேற