இடுகைகள்

கசப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராயல்டியை ஏமாற்றும் பதிப்பு நிறுவனங்களை நினைத்தாலே கசப்பாக உள்ளது!

படம்
6/5/2023 அன்பரசு சாருக்கு அன்பு வணக்கம். நலமா? தோல் பிரச்னை எப்படி இருக்கு? சிகிச்சை மேற்கொள்ள பொருளாதாரம் உள்ளதா? கடிதம் எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அடிக்கடி டெலிகிராமில் பேசுவதால் முறையாக கடிதம் எழுதவில்லை. தீராநதியில் பேட்டி கொடுத்த இந்திரா சௌந்தர்ராஜனைப் பற்றி நீங்கள் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. பல எழுத்தாளர்களும் ராயல்டி விஷயத்தில் ஏமாற்றப்படுவது கசப்பாக உள்ளது.  நேற்று (5/5/2023) எடிட்டரிடம் பேசினேன். திங்கட்கிழமை தாய் நாளிதழுக்கு எழுதும் ஒரு பக்க கணக்குப் புதிர்களை புத்தகமாக போடுவது சம்பந்தமாக. ‘’நிறுவனப் பதிப்பகத்தில் போடலாம்’’ என்றார். நான்,’’ வேண்டாம் சார். வேறு பதிப்பகத்தை நண்பர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்’’ என்று சொன்னேன். எடிட்டரும் நான் கூறிய பதிப்பகத்தில் இலக்கிய நூலொன்றை எழுதியிருப்பதாக கூறினார். மேலும், அங்கு இலக்கியம் சார்ந்த புத்தகங்களே அதிகம் விற்கும் என்றும், கணக்கு புத்தகங்களை கமர்ஷியல் பதிப்பகத்தில் போட்டால்தான் சரியாக இருக்கும் என்றார். உண்மையா சார்? சமீபத்தில், மாணவர் இதழுக்கு இன்டர்ன்ஷிப் வந்த இளம்பெண், இதழில் உதவி ஆசிரியராக இணைந்தார். கூடுதலாக 23

ஏன்?எதற்கு?எப்படி? - ஐந்து கேள்விகள் - மிஸ்டர் ரோனி

படம்
ஏன்?எதற்கு?எப்படி?  மிஸ்டர் ரோனி ஒளியை  விட வேகமாக பயணிக்கும் பொருள் உண்டா? ஒளியின் வேகம் நொடிக்கு 3 லட்சம் கி.மீ. இதைவிட வேகமான பொருள் இதுவரை இல்லை. நாளை கண்டுபிடிக்கப்படலாம். காரணம், விண்வெளி தொடர்ந்து விரிவாகி வருகிறது. அப்படி விரிவாகும்போது, ஒளியின் வேகம் என்பது மிகச்சிறியதாகவே இருக்கும். அனைத்து பருவகாலங்களிலும் சில செடிகள் பசுமையாக இருப்பது எப்படி? அதற்கு காரணம், அவற்றின் ஒளிச்சேர்க்கை முறையும், பருவகாலங்களுக்கு ஏற்றபடி மாறிக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மைதான் காரணம். பொதுவாக செடிகள், மரங்கள் பனிக்காலத்தில் தம் இலைகளை உதிர்த்து விடும். தேவையில்லாமல் ஆற்றல் வெளியேறும் என்றுதான் இந்த ஏற்பாடு. பின்னர் வசந்தகாலத்தில் புதிய இலைகள் முளைக்கும். ஆண்டு முழுவதும் பசுமையாக இருக்கும் செடிகள், ஒளிச்சேர்க்கையை குறைந்த வெப்பநிலையைப் பயன்படுத்தியும் செய்யும் தன்மை கொண்டவை. கசப்பான உணவுகளை குழந்தைகள் புறக்கணிப்பது ஏன்? குழந்தைகள் கீரைகள், பழங்கள் போன்றவற்றைத் தவிர்க்க முக்கியக் காரணம் மரபணுக்களிலேயே உள்ளது. முன்னோர்கள் அப்படித்தான் இருந்தனர். கண்டது, கடியது என சாப்பிட்டால் அ

பல்துலக்கியவுடன் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் கசப்பது ஏன்?

படம்
ஏன்? எதற்கு ?எப்படி? மிஸ்டர் ரோனி பல் துலக்கியதும் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் ஏன் கசக்கிறது? பற்பசையில் உள்ள சோடியம் லாரல் சல்பேட்தான், பிரஷ்ஷில் தேய்த்து பற்களிலுள்ள மாவுப்பொருட்களை அகற்ற உதவுகிறது. அதேசமயம், இந்த வேதிப்பொருட்கள் வாயில் நுரையை உருவாக்குகிறது. அதேசமயம் சுவை உணர்வு மொட்டுகளை மெல்ல உணர்விழக்க செய்கிறது. பாஸ்பாலிபிட்ஸ் எனும் வேதிப்பொருளை செயலிழக்க வைப்பதால், ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும்போது உங்களுக்கு அதன் சுவை தெரிவதில்லை. இது ஆரஞ்சின் இனிப்பை மட்டுமே கட்டுப்படுத்தும், அதன் துவர்ப்பு கசப்பை அப்படியே உங்களுக்கு வழங்கி விடும். நன்றி: பிபிசி