இடுகைகள்

அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவதாரம் 2 - குற்றமூலம் மின்னூல் வெளியீடு

படம்
    உளவியல் சார்ந்த சிறு மின்னூல்தான். இந்த நூலில் உளவியலாளர்கள், அவர்களின் கோட்பாடுகள் பற்றி சுருக்கமாக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. உளவியல் சார்ந்து அறிந்துகொள்ள முயல்பவர்களுக்கு நூல் ஆர்வமூட்டும்படியாக இருக்கும். நூலை அமேஸான் தளத்தில் வாசியுங்கள்.  நூலை வாங்க..... https://www.amazon.in/dp/B0CM33G8QT

தகவல்களை ஜனநாயகப்படுத்துகிறது ஏஐ - கூகுள் இயக்குநர் சுந்தர் பிச்சை

படம்
               சுந்தர் பிச்சை நேர்காணல் - பகுதி 2   என்விடியா நிறுவனத்தோடு சேர்ந்து ஏஐ சிப்களை தயாரித்து வருகிறீர்கள். இப்படி செய்வது ஒரே நிறுவனத்திற்கு அதிக அதிகாரத்தை தருவது போல இருக்கிறதே? நாங்கள் அந்த நிறுவனத்தோடு பத்தாண்டுகளுக்கு மேலாக தொழில் உறவைக் கொண்டிருக்கிறோம். ஆண்ட்ராய்ட் சார்ந்து ஒன்றாக வேலை செய்து வருகிறோம். ஏஐயைப் பொறுத்தவரை அவர்கள் நிறய கண்டுபிடிப்புகளை செய்திருக்கிறார்கள். எங்கள் க்ளவுட் வாடிக்கையாளர்கள் பலரும் என்விடியா வாடிக்கையாளர்கள்தான். செமிகண்டக்டர் துறை கடுமையான போட்டிகளைக் கொண்டது. இத்துறையில் முதலீடும் அதிகம் தேவை. நாங்கள் என்விடியா நிறுவனத்தோடு நல்ல உறவில் இருக்கிறோம். ஏஐ தொடர்பாக முறைப்படுத்தல் சட்டங்கள் வேண்டும் என கூறியிருக்கிறீர்கள். அந்த தொழில்நுட்பத்திற்கு பயன் அளிக்கும்படியான என்ன விஷயங்கள் கிடைக்கும் என நினைக்கிறீர்கள்? மருத்துவ காப்பீடை ஒருவர் பரிந்துரைக்கிறார், காபி ஷாப்பிற்கு செல்வதற்கான பரிந்துரை என வரும்போது பாகுபாடு இல்லாமல் ஏஐ இயங்க வேண்டும். சட்டங்கள் உருவாகும்போது ஏஐயின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. அமெரிக்க அரசு இதுதொடர்பாக சட்டங

2053ஆம் ஆண்டில் புதிய தொழில்நுட்பங்கள்! - போன், கார், உயிர் பிழைக்கும் தொழில்நுட்பம், டிவி

படம்
  2053ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள் போன் உங்கள் கையில் உள்ள போனைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது? இதில் செய்யவேண்டிய அனைத்தையும் 99 சதவீதம் செய்துவிட்டோம் என்றுதானே? இதுபற்றி ஆராய்ச்சியாளர் நீல் ஷா, எதிர்காலத்தில் போன் என்பது ஹெட்செட்டாக காதில் அல்லது மூளையில் பொருத்தப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார். வீடு, அலுவலகம், சாலை என பல்வேறு டிஜிட்டல் கருவிகளோடு இணைந்திருக்கும். இதனால் அடுத்தடுத்து நாம் என்ன செய்வோம் என்பதை போன் அறிந்து இருக்கும். போன் என்பது குறிப்பிட்ட நீள அகலத்தில் திரை கொண்டதாக இருக்காது. போனுக்கான சர்க்கியூட் போர்ட்டைக் கூட நீரில் கரையும் தன்மை கொண்டதாக தயாரிக்க வாய்ப்புள்ளது. சோபி சராரா டிவி இன்று டிவி சேனலின் இடத்தை இணையம் எடுத்துக்கொண்டுவிட்டது. ஆனால் டிவி என்பது வீட்டில் ஹாலில் வைத்திருப்பது என்பதைக் கடந்ததாக மாறிவிட்டது. உள்ளங்கை அளவு கொண்டதாக போனை மடித்துவைத்துக்கொள்ளலாம். நீங்கள் செல்லும் காரில் உள்ள திரைகளை டிவியாக கருதலாம். எலன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவை, ஜெஃப் பெஜோசிஸின் ப்ளூஒரிஜினல்ஸ் டிவி சேவை ஆகியவை எதிர்காலத்தில் மக்

ஒற்றை மனிதராக சென்று காஷ்மீர் பிரிவினைவாத தீவிரவாதிகளுடன் மோதி பணயக்கைதிகளை மீட்கும் நாயகன்!

படம்
                தாயகம் விஜயகாந்த், ரஞ்சிதா இயக்கம் ஏ ஆர் ரமேஷ் இசை தேவா பாடல்கள் பிறைசூடன் காயமானால் வெளிவரும் ரத்தம் நொடியில் நின்றுபோகும் வகையில் மருந்து ஒன்றை இந்திய ஆராய்ச்சியாளர் கண்டுபிடிக்கிறார். இதைப்பற்றி அவரிடம் உள்ள உதவியாளர் தகவலை பாக். தீவிரவாதிக்கு கசியவிடுகிறார். இதனால் விஞ்ஞானி செல்லும் விமானம் கடத்தப்படுகிறது. காஷ்மீரில் தனி காஷ்மீர் கேட்கும் சிறு தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள் பயணிகள். அவர்களை சக்திவேல் என்ற மீனவர், விஞ்ஞானியின் மகளோடு சென்று தனிமனிதராக மீட்டு வருவதுதான் படத்தின் கதை. படத்தில் முப்பது நிமிடம் கழித்துத்தான் விஜயகாந்த் வருகிறார். அதுவரைக்குமான படத்தின் காட்சிகளை அருண் பாண்டியன் பார்த்துக்கொள்கிறார். அவருக்கு பக்க துணையாக விமான பைலட் பாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருக்கிறார். இன்று ஜாக்கி ஷெராஃபின் மகன் டைகர் நடித்து வரும் ஒன்மேன் ஆர்மி பாத்திரத்தில் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் வருகிறார். இது சண்டைப்படம் என்பதால் லாஜிக் பார்க்காதீர்கள். மேஜிக் மிஸ் ஆகிவிடும். படத்தில் வரும் எம்ஏ படித்த பெண் பாத்திரத்தில் வரும் ரஞ்சிதா, ஒன்பதாம் கிளாஸ் படித்த மீனவ

அவதாரம் 2 - குற்றமூலம் - புதிய மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
  சமர்ப்பணம் திரு. கணியம் சீனிவாசன் அவர்களுக்கு.... அட்டை வடிவமைப்பிற்கு உதவி  ஜிம்ப் மென்பொருள் அட்டைப்படம்  பின்டிரெஸ்ட்

சிறையில் கிடைக்கும் கைதிகளைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தும் தொழில் நிறுவனங்கள்!

படம்
              உலகமெங்கும் உள்ள ஏஐ நிறுவனங்கள், தங்கள் எல்எல்எம் மென்பொருளுக்கு பல்வேறு தகவல்களை உள்ளீடு செய்ய, தகவல்களை அளிக்க பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்கள். இதை செய்வதற்கு ஒருவருக்கு வழங்கப்படும் சம்பளத்தை மிகவும் குறைவு. பொதுவாக பெரிய நிறுவனங்களை வைத்து தகவல் பயிற்சிகளை செய்தால் அதற்கு ஏராளமான தொகையை செலவிட வேண்டியிருக்கும். இதே பணிக்கு சிறைக்கைதிகளைப் பயன்படுத்தினால் எப்படி? சிறைக் கைதிகளுக்கு வேலைவாய்ப்பு என அரசுக்கு உதவியது போலவும், சம்பளத்தை குறைவாக கொடுத்து எளிதாக வேலையை முடிக்கலாமே? இப்படித்தான் ஃபின்லாந்து கம்பெனி மெட்ராக் நினைத்தது. தனது யோசனையை சிறைத்துறை மறுவாழ்வு திட்ட தலைவரிடம் கூறியது. அவருக்கு பெரிய சந்தோஷம். கைதிகளுக்கு ஏஐ தொடர்பாக வேலை என நினைத்து மகிழ்ந்திருக்கிறார். மெட்ராக்கின் லட்சியம், குறைந்த கூலி. அதேசமயம் ஃபின்னிஷ் மொழியில் எந்திரவழி கற்றலை அமைப்பது. இதற்காகவே கைதிகளைப் பயன்படுத்துகிறது குறைவான கூலியை வழங்குகிறது. ஒரு மணிநேரத்திற்கு 1.54 யூரோக்களை கூலியாக கைதிகளுக்கு வழங்குகிறது. இப்படி இருபது கைதிகளை தனது வேலைக்கு பயன்படுத்துகிறது. ஃபின்லாந்து நாட்டில

ஏஐயை கூகுளின் சேவையில் கொண்டு வர பொறுப்புணர்வோடு செயல்படுகிறோம்! - சுந்தர் பிச்சை

படம்
          சுந்தர் பிச்சை , கூகுளின் இயக்குநர் . பொதுவாகவே நல்ல மனிதர் என்று புகழ் பெற்றவர் . ஏஐ உலகில் கூகுள் தடுமாறுகிற நேரத்தில் அவர்தான் ஏராளமான சுமைகளை சுமக்கிறார் . கூகுளின் மீது அமெரிக்காவில் கூட தேடல் எந்திரம் தொடர்பாக ஏகபோகத்துவம் என்று சொல்லி வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் . 2015 ஆம் ஆண்டில் கூகுளுக்கு வந்தவர் எட்டே ஆண்டுகளில் அதன் இயக்குநராக முன்னேறினார் . சமகாலத்தில் பணியாளர்கள் நீக்கம் . கூகுள் நிறுவனங்கள் ஒன்றாக இணைப்பு , ஏஐ தொழில்நுட்பத்தை தேடலில் இணைப்பது , சாட்ஜிபிடியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடன் இணைத்துக்கொண்டதில் இருந்து கூகுள் தடுமாறி வருகிறது . அதுபற்றி அதன் இயக்குநர் சுந்தர் பிச்சையுடன் உரையாடினோம் . கூகுள் இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக ஊழியர்களுடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறீர்கள் . அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறீர்கள் . உலகின் நன்மைக்காக கூகுள் தொழில்நுட்பங்களை மேம்படுத்துகிறது என்று கூறப்படுவதை இன்று பலரும் எதிர்த்து விமர்சனங்களை எழுப்புகிறார்களே ? தொழில்நுட்ப உலகில் இருபத்தைந்து

தன்னியல்பாக நடைபெறும் மக்கள் போராட்டம் எந்த இடத்தில் தவறாக செல்கிறது? 2010-2020 மக்கள் போராட்டக்கதை!

படம்
                போராட்டத்தின் வீழ்ச்சி எங்கு தவறு நடைபெற்றது ? 2010 -2020 வரையிலான காலகட்டத்தில் ஏராளமான போராட்டங்கள் சமூக வலைத்தளத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டு இளைஞர்கள் தெருவுக்கு வந்து போராடினார்கள் . இதில் எந்த தலைவர்களும் இல்லை . தன்னியல்பாக கோபம் கொண்ட இளைஞர்கள் , பெண்கள் பங்கேற்று போராட்டத்தை நடத்தினார்கள் . இப்படி போராட்டம் நடைபெறுவதற்கு அரசியல் வெற்றிடம் காரணம் என சிலர் கருத்து கூறுகிறார்கள் . ஆனால் அதற்கு எந்த அடிப்படையும் கிடையாது . எகிப்தில் ராணுவம் , பஹ்ரைனில் சவுதி அரேபியாவும் வளைகுடா கூட்டுறவு கௌன்சிலும் , துருக்கியில் எர்டோகன் , ஹாங்காங்கில் சீன அரசு , பிரேசில் நாட்டில் வலதுசாரி சக்திகள் என வெற்றிடம் நிரம்பப்பட்டது . எனவே இந்த எடுத்துக்காட்டுகளின் வழியாக வெற்றிடம் என்று கூறப்படும் இடத்தை நிரப்ப யாரோ ஒருவர் தயாராக இருப்பது உங்களுக்கு புரிந்திருக்கும் . பிரேசில் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது இடதுசாரி ஆட்சி நடைபெற்று வந்தது . எம்பிஎல் என்ற இடதுசாரி குழு , பேருந்து விலை குறைப்பிற்கான போராட்டத்தை தொடங்கியது . அதற்கு நாடெங்கும் வரவேற்பு

விடுதலைப்புலிகளை கோரமான கொலையாளிகளாக காட்டும் பிரசாரப் படம்!

படம்
  குற்றப்பத்திரிக்கை இயக்கம் ஆர் கே செல்வமணி ராம்கி , ரகுமான் , ரோஜா , ரம்யா கிருஷ்ணன் ஶ்ரீபெரும்புதூரில் நடந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையும் , அதற்கு காரணமான விடுதலைப்புலிகள் பற்றிய விசாரணையும்தான் கதை . படம் அரசாங்க பிரசாரப்படம் போலவே எடுக்கப்பட்டிருக்கிறது . அதாவது , படத்தில் ஒரே கோணமே காட்டப்பட்டிருக்கிறது . இந்தியப் பிரதமர் படுகொலை செய்யப்படுகிறார் . அதற்கான திட்டத்தை எப்படி விடுதலைப்புலிகள் தீட்டினர் , செயல்படுத்தினர் . அதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரை எப்படி பயன்படுத்திக்கொண்டனர் என்பதைக் காட்டுகிறார்கள் . கூடவே , அரசியல் படுகொலையோடு நிற்காமல் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளையும் கூட கொல்ல நினைக்கும் கொலைவெறி கொண்டவர்களாக சித்திரிக்கிறார்கள் . அங்குதான் மொத்த படத்தின் நோக்கமே வீழ்ந்துபோகிறது . பார்வையாளர்களை விரக்திக்கு உள்ளாக்குகிறது . படம் பனிரெண்டு ஆண்டுகளுக்கு மேல் வழக்குகளை சந்தித்து வெளியாகியிருப்பதை டைட்டில் கார்டில் காட்டுகிறார்கள் . ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை புகைப்படமாக எடுத்து அதை படத்தில்

மாஃபியா கூட்ட கொலையாளிக்கு கிடைக்கும் காதலும், அதை தக்க வைக்க செய்யும் போராட்டமும்! அந்தம் - ஆர்ஜிவி

படம்
                  அந்தம்  telugu இயக்கம் ஆர்ஜிவி நாகார்ஜூனா, ஊர்மிளா மடோன்கர் ஷெட்டி என்ற மாஃபியா தலைவரின் குழுவில் முக்கியமான ஆள், ராகவ். தலைவர் சொல்லும் ஆட்களை போட்டுத்தள்ளுவதோடு கடத்தல் வேலைகளை செய்து வருகிறான். எதிர்தரப்பில் உள்ள சங்கர் நாராயணன் என்பவரின் கூட்டத்தையே தனியாளாக நின்று அழிக்கிறான் ராகவ். இதனால் காவல்துறையில் உள்ள கிருஷ்ணா என்ற கிரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர், ராகவை கைதுசெய்ய முயல்கிறார். இந்த நேரத்தில் ராகவிற்கு கிருஷ்ணாவின் தங்கை பாவனா மீது காதல் உருவாகிறது. இதன் விளைவுகள் என்னவாயின என்பதே கதை. இதே டெம்பிளேட்டை வைத்து பவன் கல்யாண் நடித்த பஞ்சா என்ற படத்தை விஷ்ணுவர்தன் என்ற இயக்குநர் இயக்கியிருக்கிறார். அந்த படத்தில் பவன் சற்று ஸ்டைலாக காட்டப்பட்டிருப்பார். மற்றபடிமூலக்கதை அந்தம் என்ற படத்தைப் போலவே இருக்கும். சில விஷயங்கள் மாற்றப்பட்டிருக்கும். நகலை விட்டுவிடுவோம். அசலைப் பார்ப்போம். ராகவ், ஒரு குடும்பத்தால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறான். ஆனால் ஒருமுறை நகை காணாமல் போக அவனது குடும்பமே காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து சித்திரவதை செய்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்க

ஒளிச்சேர்க்கை மூலம் கார்பன் டை ஆக்சைடை காற்றில் இருந்து அகற்றும் தொழில்நுட்பம் - அசத்தும் லிவ்விங் கார்பன் நிறுவனம்

            காடுகளை வளர்த்து அதாவது அதை செயற்கையாக கூட வளர்க்கலாம் . ஆனால் அதன் மூலம் மாசுபாடுகளை குறைக்கவேண்டும் என எண்ணும் காலம் வந்துவிட்டது . காடு , இயற்கை சூழல் என எதற்காகவும் மக்கள் தங்கள் சுகங்களை தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாது . நாளிதழ்கள் , வார இதழ்கள் எல்லாம் ஏழைகளிடம் , சாதாரண மக்களிடம் சிவப்பு இறைச்சியை சாப்பிடாதீர்கள் , மீத்தேன் அதிகரித்துவிடும் என பிரசாரம் செய்து வருகின்றன . ஆனால் இந்த பிரசாரத்தை அவர்கள் தொழிலதிபர்களிடம் செய்தால் நெஞ்சுக்கு நேர்மையாக இருக்கும் . ஆனால் அவர்கள்தான் ஊடகங்களை நடத்துகிறார்கள் . அல்லது விளம்பரங்கள் மூலம் படியளக்கிறார்கள் . அவர்களை எதிர்க்க த் துணிவார்களா கடினம் தான் . குறிப்பிட்ட மண் சார்ந்த மர வகைகளை கண்டறிந்து அதை மண்ணில் ஊன்றிவைத்து கார்பனை உறிஞ்சுகிறதா என பார்த்துவந்தது கடந்த காலம் . இப்போது காற்றிலுள்ள கார்பனை உறிஞ்சுவதற்காகவே நூறுக்கும் மேற்பட்ட மர வகைகளை ஆய்வகத்தில் உருவாக்கி அதை மண்ணில் ஊன்றி வருகிறார்கள் . இதை வணிகமாகவே சில நிறுவனங்கள் செய்து வருகின்றன . 2019 ஆம் ஆண்டு லிவ்விங் கார்பன் என்ற நிறுவனம் தொடங்கப்பட