இடுகைகள்

மந்திரச்சந்திப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் மனநிலையைச் சொன்ன நாவல்! - கடிதங்கள்

படம்
  ஒன்றிய அரசு விருது பெற்ற எழுத்தாளர் பாலபாரதி மதிப்பிற்குரிய ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, வணக்கம்.  நலமா? தேர்தல் முடிந்தபிறகு ஊரில் சென்று வேலை செய்வேன் என்று நினைக்கிறேன். வங்கியில் சில வேலைகள் பாக்கி உள்ளன. நேருவின் நூலில் மக்கள் உரிமைகள், பண்பாடு, மதம் என இருபகுதிகளைப் படித்து முடித்துள்ளேன். மொழிபெயர்ப்பு நா.தர்மராஜன். வாசிக்க தட்டாமல் சரளமாக உள்ளது. நான் எழுதுவதிலும் இந்த ஒழுங்கைக் கொண்டு வரவேண்டும்.  பாலபாரதி சார் மயிலாப்பூர் வந்தபோது என்னை அழைத்தார். பஜார் தெருவில் மோர் மார்க்கெட் அருகே சந்தித்தோம். அவரோடு கனியும் வந்திருந்தான். ஃபேஸ்புக்கில் தினமொரு அத்தியாயம் என்று எழுதிய மந்திரச்சந்திப்பை நூலாக்கிவிட்டார். அவர் அதனை நூலாக தொகுத்தபோதே படித்துவிட்டேன். நூலைக் கொடுத்தவர், அதற்கு பணம் கொடுத்தபோது வேண்டாம் என மறுத்துவிட்டார். அவரே வேண்டாம் என்ற போது கட்டாயப்படுத்தவேண்டாம் என நானும் விட்டுவிட்டேன். மார்வெல் யுனிவர்ஸ் போல அவர் இதுவரை எழுதிய நாவல்களிலுள்ள பாத்திரங்கள் மந்திரச்சந்திப்பு நாவலில் சந்தித்து உரையாடுகின்றன. இதுதான் இந்த நாவலின் முக்கியமான அம்சம். வாசிக்க நன்றாக