இடுகைகள்

படுகொலை! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மலம் கழிப்பவர்களைக் கொன்றால் மாற்றம் வந்துவிடாது! - பெசவாடா வில்சன்!

படம்
நேர்காணல் பெசவாடா வில்சன் பிரதமர் சுத்தம் தொடர்பான கோல்கீப்பர் ஆப் குளோபல் கோல்ஸ் விருது வென்றிருக்கிறார். அதைப்பற்றிச் சொல்லுங்கள்.  விருது பற்றி சொல்ல ஏதுமில்லை. திறந்தவெளியில் மலம் கழிப்பது மிகப்பெரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. அது தவறு என்பதில் எனக்கும் உடன்பாடுதான்.  2011 சென்சஸ் படி  1.8 மில்லியன் பேர் வீடற்று தெருக்களில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு அரசு வாழ்வதற்கான என்ன வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறது. திறந்தவெளி கழிவறை என்று நாட்டு மக்களை அடித்துக்கொல்லலாம். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? தண்ணீர் மற்றும் சுகாதாரத்துறைக்கான செயலர் பரமேஸ்வரன் ஐயர், ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கழிவறை மூலம் நூறு சதவீத சுத்தம் என்கிறாரே? அவர் கூறும் கழிவறைகளை அத்திட்டத்தின்படி அமைப்பதில்லை. மேலும் அவர் டெல்லியிலுள்ள பாதாள சாக்கடையில் இறங்கிப் பார்க்கட்டும். அந்த இடம் எப்படி இருக்கிறது என்று அப்போதுதான் தெரியும். வெளிப்புறத்தில் மலம் கழிப்பவர்களை எச்சரித்தார்கள், விசிலடித்து பயம் கொள்ளச் செய்தார்கள் என்ற வேகத்தில் இன்று கொலையும் செய்கிறார்கள். இத்திட்டத்தின்