இடுகைகள்

சுற்றுலா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியர் என்ற இனவெறி பாகுபாட்டால், இசைக்கலைஞர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை!

படம்
    இசைக்கலைஞர் பார்வதி பால் கடந்த இருபது ஆண்டுகளாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பால் இசைக்கலைஞர்களின் பாரம்பரிய இசையை உலக நாடுகளுக்கு பயணித்து கொண்டுசென்றிருக்கிறார். சனாதன் தாஸ் பால் என்பவரின் மாணவர் என்று கூறுகிறார். தான் இசைக்கலைஞர் அல்ல பால் பாரம்பரியத்தை பிரசாரம் செய்பவள் என்று கூறிக்கொள்கிறார். முதன்முதலில் எப்போது சர்வதேச மேடையில் நிகழ்ச்சி செய்தீர்கள்? 1999ஆம் ஆண்டு, எனக்கு அப்போது இருபத்தி மூன்று வயதிருக்கும். மனதில் அப்போது சோகமும், பயமும் இருந்தது. லெபனான் சென்று பிறகு பெய்ரூட் சென்றடைந்தேன். விமானநிலையத்தில் இறங்கி நகருக்குள் சென்றபோது, குண்டுவீச்சால் நொறுங்கிய ஏராளமான கட்டடங்களைக் கண்டேன். மக்கள் திரளான எண்ணிக்கையில் தெருவில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலைமையைப் பார்த்தும் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. சால்வடோர் டாலியின் ஓவியம் போல வினோதமான சர்ரியலிச நிலையை அ்ங்கு பார்த்தேன். இப்படியொரு நாடு இருக்கமுடியுமா என்று அன்றுதான் யோசித்தேன். கைகால்களை இழந்த குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என பலரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சாலையெங்கும் பிச்சையெடுத்தபடி மக்கள் அலைந்தனர். ராணு...

உலகளவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் ஷியாவோஹாங்சு ஆப்(ரெட்நோட்)

படம்
            உலகளவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் ஷியாவோஹாங்சு ஆப்(ரெட்நோட்) 2013ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்காய் நகரில் ஷியாவோஹாங்சு என்ற ஆப்பை மிராண்டா க்யுவும் அவரது நண்பரும் சேர்ந்து தொடங்கினர். இந்த ஆப், இன்று முன்னூறு மில்லியன் பயனர்களுக்கு மேல் கொண்டுள்ள சமூக வலைத்தள ஆப்பாக மாறியுள்ளது. மிராண்டா க்யூ, பார்ச்சூன் ஆசியாவின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் கூட இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். ஷியாவோஹாங்சூ என்ற வார்த்தைக்கு சிறிய சிவப்பு புத்தகம் என்று அர்த்தம். சீனாவை, மக்கள் சீன குடியரசாக போராடி உருவாக்கிய மாவோசேதுங்கின் மேற்கோளைத்தான் நிறுவனத்திற்கு பெயராக வைத்திருக்கிறார்கள். பெயர் மட்டும்தான் இப்படி. மற்ற விஷயங்கள் எல்லாமே நவீனமாக உள்ளது. குறிப்பாக, பொருட்களை வாங்குவது, சுற்றுலா தளங்களை பிரபலப்படுத்துவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீன ஆப் இயங்குகிறது. சீனாவில் உள்ளவர்கள், ஷியாவோஹாங்சு ஆப் மூலமாக உள்நாடு, தெற்காசியா முழுக்க பல்வேறு நாடுகளுக்கு பயணித்து சுற்றுலாவை மேற்கொண்டு வருகிறார்கள். அண்மையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் கூட அங்குள்ள உணவகங்கள் இந்த சீன ஆப்பின் லோ...

விடுமுறையில் கேம்ப் அடித்து உற்சாகம் கொள்ளும் சீனர்கள்!

படம்
        விடுமுறையைக் கொண்டாட கேம்ப் அடிப்போம்! காட்டுக்குள், மலைப்பகுதிக்குள், பாலைவனத்திற்குள் வேலையாக செல்பவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு டெண்ட் கொட்டாய்களை அமைப்பார்கள். இதை அனைவரும் பார்த்திருப்போம். சில இடங்களில் கேம்ப்புகளில் தங்கியும் இருப்பீர்கள். சீனாவில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டால், மக்கள் உடனே மலைப்பகுதி, காடுகளின் அருகில் சென்று கேம்புகளை அமைத்து தங்கி ஓய்வெடுக்கிறார்கள். இதற்காகவே சீனாவில் கேம்புகளை அமைத்துக்கொடுக்க ஏராளமான தனியார் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இந்த நிறுவனங்கள், டெண்ட்கொட்டாய் துணிகளை மட்டும் வழங்குவதில்லை. பிறந்தநாள் விருந்து, காதலைச் சொல்லப் போகும் தம்பதிகளுக்கான முன் ஏற்பாடுகள் என காலத்திற்கேற்ப மாறியிருக்கிறார்கள். கேம்பில் தங்குபவர்களுக்கான உணவுகளையும், அந்த இடத்திலேயே புதுமையாக அமைத்துக் கொடுத்து காசு வாங்கி கல்லா கட்டி வருகிறார்கள். கேம்புகளை அமைக்கும் தனியார் நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் போட்டியும் கூடி வருகிறது. குடும்பங்களாக சென்றால் குழந்தைகளை சமாளிக்கவேண்டுமே அவர்களுக்கென மண்பானை செய்வது, தோல் பொருட்களை செய்வது என பல...

நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு திரும்பி வந்து சுற்றுலாவை வளர்க்கும் இளைஞர்கள்!

படம்
            கிராமங்களில் வளரும் சுற்றுலா சீனாவில் ஆறு லட்சத்திற்கும் அதிகமாக தனித்துவ கலாசார, உணவு, பண்பாட்டு தன்மை கொண்ட கிராமங்கள் உள்ளன. அவற்றைப் பார்க்க உலகமெங்கும் உள்ள பயணிகள் ஆர்வமாக வந்து குவிகின்றனர். இதை சீனாவில் வளர்ந்து வரும் இளம் தொழில்முனைவோரும், இளைஞர்களும் ஊக்கப்படுத்தி வருகிறார்கள். சுற்றுலாவை மேம்படுத்த சீன அரசும், உள்ளூர் நிர்வாகமும் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவில் உள்ள எட்டு கிராமங்களை சிறந்த சுற்றுலா கிராமங்கள் என சர்வதேச சுற்றுலா அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது. இந்த அமைப்பு, ஐ.நாவுடையது. எடுத்துக்காட்டாக ஷிதி கிராமத்தைப் பார்ப்போம். இந்த கிராமத்தில் பட்டுப்புழு வளர்ப்பு, தேயிலைப் பயிர் ஆகியவை முக்கியமான தொழில்கள். 1986ஆம் ஆண்டு, சுற்றுலா துறை மேம்பட்டது. கிராமத்தில் உள்ள வரலாற்று கட்டுமானங்கள், ஹூய்சூ கலாசாரம் ஆகியவை பிரசாரம் செய்யப்பட, உலக நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் சீனாவுக்கு வருகை தரத் தொடங்கினர். தொடக்கத்தில் உள்ளூர் மக்கள் சுற்றுலா வணிகத்தை கையாண்டாலும் பின்னாளில் 2013க்குப் பிறகு சுற்றுலாவுக்கென தனி ந...

சீனாவில் உள்ள சிறந்த சுற்றுலா கிராமங்கள்!

படம்
      சிறந்த சுற்றுலா கிராமங்கள் - சீனா ஷிதி அன்ஹூய் என்ற பகுதியில் ஹூவாங்சன் என்ற இடத்தில் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் 970 ஆண்டுகள் பழமையானது. 2000ஆவது ஆண்டில் யுனெஸ்கோ பாரம்பரிய இடம் என்ற பட்டியலில் இடம்பிடித்தது. ஹூய்சு கலாசார அடையாளம் கொண்ட கோவில்கள், கட்டுமானங்கள் கிராமத்தில் காணப்படுகின்றன. இவை வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் கொண்டவை. யுகுன் கிராமம் ஸெஜாங் என்ற மாகாணத்தில் அன்ஜி என்ற இடத்தில் கிராமம் அமைந்துள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றதால் மாசுபாடு அடைந்து உள்ளூர் நிர்வாகத்தால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அழகிய நீர்நிலைகள், மலைத்தொடர்களைக் கொண்ட இடம். ஹூவாங்லிங் கிராமம் வூயுவான் என்ற இடத்தில், ஜியாங்ஸி மாகாணத்தில் அமைந்துள்ளது. சமவெளியில் இருந்து 1,260 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதி கிராமம். இங்குள்ள மக்கள் மூங்கில்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். தினசரி பயன்பாட்டுப் பொருட்களை மூங்கிலில் உருவாக்கி வருகிறார்கள். வரலாற்று ரீதியாக அறுநூறு ஆண்டுகள் பழமையானது. இங்கு செய்யப்படும் வேளாண்மை முறையும் தனித்துவமானது. ஸக்கானா கிராமம் கல் பெட்டி என தி...

சுற்றுலா செல்லும் பயணிகள் கொடுக்கும் வருமானம்!

படம்
          சுற்றுலாப் பயணிகளுக்கான நாடுகள் சுற்றுலா செல்பவருக்கு மகிழ்ச்சியைத்தருகிறது. போகும் நாடுகளில் செலவழித்தால், அந்த நாடுகளுக்கு வருமானம் கூடுகிறது. பதிலாக சுற்றுச்சூழல் பிரச்னைகள், உள்ளூர் மக்களுக்கு தொந்தரவு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இதை ஓவர் டூரிசம் என ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். ஸ்பெயின் நாட்டில் தலைநகரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தருவதை எதிர்த்து சுவரின் கிராபிட்டி வரையப்பட்டு வருகிறது. நாடுகளைப் பொறுத்தவரை மக்களுக்கு கவனம் கொடுத்து வேலைகளை செய்பவர்கள் குறைவு. எனவே, வரும் ஏராளமான சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப நகரங்களில் வசதிகளை செய்து கொடுத்து வருகிறார்கள். உள்ளூர் மக்களுக்கு குறைந்த தொந்தரவு கொடுத்து, அதிக காசை வீசியெறிந்துவிட்டு செல்கிற சுற்றுலா பயணிகளே அதிகம் தேவை. 2023ஆம் ஆண்டு சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை வந்த நாடு என்ற வகையில் லண்டன், டோக்கியோ நகரங்கள் பந்தயத்தில் முந்துகின்றன. இவை தலா 20 மில்லியன் பேர்களை ஈர்த்திருக்கிறது. ஹோட்டல் வாடகை, வரி, கப்பல் பயணம் ஆகியவற்றை அதிக செலவினம் காரணமாக சுற்றுலா பயணிகள் தவிர்க்கத் த...

மனதிற்கு தேவையான விடுமுறை!

படம்
  நிறையபேருக்கு வேலை கைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. லிங்க்டு இன் தளத்தில் கூட புலம்பல்கள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் வேலை செய்வதிலும் அதில் உண்டாகும் மன அழுத்தத்தை போக்கிக்கொள்வதும் பெரும் பிரச்னையாகத்தான் இருக்கிறது.   சில நிறுவனங்களில் உலகின் சூழல்களை புரிந்துகொள்ளாமல் ஆறுநாட்கள் வேலை நாட்களாக வைத்திருப்பார்கள். ஞாயிறு என்ற ஒருநாளில் ஒருவர் எங்கு போய்விட்டு வந்து திங்கட்கிழமை வேலைக்கு உற்சாகமாக வர முடியும் என்ற பொது அறிவு கூட இல்லை.   ஞாயிறு நிறைய கடைகள் இயங்காது. அவர்களுக்கும் ஓய்வெடுக்க ஒரு நாள் வேண்டுமே? இதில் அவர்களையும் குறை சொல்ல முடியாது. இந்த லட்சணத்தில் மனதை விடுமுறைக்கு ஏற்றபடியாக மாற்றிக்கொண்டால் என்ன என்பதை அமெரிக்க அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். ஆய்வில், 441 அமெரிக்க பணியாளர்கள் பங்கு பெற்றனர். ஆய்வை கேஸி மோகில்னர் ஹோம்ஸ் என்ற யுசிஎல்ஏ பல்கலைக்கழக பேராசிரியர் நடத்தினார். அதாவது வெளியில் எங்கும் செல்லாமலேயே மனநிலையை விடுமுறையில் இருப்பது போல மாற்றிக்கொள்வதுதான் மையப்பொருள். இப்படி மாற்றிக்கொள்ளும் மனிதர்கள் வேலையில் மன அழுத்தம் கொள்வதில்லை.   ...

டைம் 2023 செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் - லெக்ஸி ஹியரிங், மாவென் கிளினிக், சர்க்கிள்

படம்
  மாவன் கிளினிக் லெக்ஸி ஹியரிங் சர்க்கிள கிரிப்டோகாயின் இன்டிரிபிட் டிராவல் மாசு இல்லாத சுற்றுலா அறிவியல் ரீதியாக மாசுபாடு ஏற்படுத்தாத சுற்றுலா நிறுவனம். பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு விமானம் இல்லாத பயணத்தின் மூலம் மக்களை கூட்டிச் செல்கிறார்கள். சுற்றுலா செல்லும் பயணிகள், போகுமிடமெல்லாம் மதுபான புட்டிகளை உடைப்பது, உணவு கொண்டு செல்லும் பிளாஸ்டிக் கவர், பெட்டிகளை அங்கேயே தூக்கிபோட்டுவிட்டு வருவது இயல்பானது. ஆனால், இந்த நிறுவனம் இதுபோல மக்கள் சுற்றுலா செல்வதை மாற்றியிருக்கிறது. இதன் இயக்குநர், ஜேம்ஸ் தோர்ன்டன். இன்டிரிபிட் டிராவல் நிறுவனம் தொடங்கி 34 ஆண்டுகள் ஆகிறது. #intrepid travel     வார்ட்சிலா தூய ஆற்றலுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை நிறுவனங்கள் செலவழித்து வருகின்றன. சோலார், காற்றாலை என ஏகத்துக்கும் செயல்பாடுகள் தொடங்கி நடந்து வருகின்றன. காலநிலை மாற்றம் தீவிரமாக உள்ள காலத்தில் சூரிய வெளிச்சம் கிடைக்காதபோது, காற்று தீவிரமாக வீசாதபோது என்ன செய்வது? அப்போது கிடைத்த சேகரித்த மின்னாற்றலை சேமிக்கும் வழிவகைகளை வார்ட்சிலா நிறுவனம் வழங்குகிறது. மின்சாரத்தை சேமிப்பதற...

உலகம் சுற்றிவர தனியாக கிளம்பும் பெண்கள் - சாகச பயணத்தின் மேல் உருவாகும் புதிய மோகம்

படம்
  இன்று உலகம் தொழில்நுட்பம் சார்ந்து நிறைய மாறியிருக்கிறது. அதேசமயம், ஆண், பெண் என பாலின வேறுபாடுகளும் அதிகரித்திருக்கின்றன. பொருளாதார வலிமையில் பெண்கள், ஆண்களுக்கு நிகர் இணையாக ஏன் அவர்களையும் கடந்து சென்றுவிட்டார்கள். வீடு, அலுவலகம் கடந்து புதிய இடங்களுக்குச் செல்ல பெண்கள் விரும்புகிறார்கள். அதற்கு   பொருளாதார வலிமையும் கைகொடுக்கிறது. லீவு போட்டுவிட்டு அல்லது வேலையை விட்டு விலகிச் செல்ல துணிச்சலான மனமும் இருக்கிறது. அப்புறம் என்ன? உடனே பையை எடுத்துக்கொண்டு கிளம்பவேண்டியதுதானே? பெங்களூருவில் எஃப்5 எஸ்கேப்ஸ் என்ற நிறுவனம், பெண்களுக்கு மட்டுமேயான பயணங்களை திட்டமிட்டு ஏற்பாடு செய்துகொடுக்கிறது. தங்கும் இடம், சாப்பாடு என அவசிய விஷயங்களை, இந்த நிறுவனமே பார்த்துக்கொள்கிறது. பெண்கள் முடிவு செய்யவேண்டியது ஒன்றுதான். குழுவாக செல்வதா அல்லது தனியாக செல்வதா என்பதை முடிவு செய்வது மட்டும்தான். இந்த நிறுவனம் 300க்கும் மேலான சுற்றுலாக்களை ஏற்பாடு செய்துள்ளது. 30க்கும் அதிகமான முறை, பெண்களின் குழுக்களை   சுற்றுலா அனுப்பி வைத்துள்ளது. இந்த நிறுவனத்தில் 7 ஆயிரம் பெண்கள் பயணித்துள்ளனர்....

க்ரீசிலுள்ள ஆன்மிகத் தலங்கள்

படம்
  மன வலிமையை சோதித்துப் பார்க்கும் ஆன்மிகத் தலங்கள் – க்ரீஸ்   ஆசிய அளவிலும் கூட கோவில்களை எளிதாக சமதளத்தில் கட்ட மாட்டார்கள். சாதாரணமாகிவிடுகிறதே… அதனால் அதை மலைப்பாங்கான சற்று தொலைவு பயணித்துச் சென்று களைப்போடு அண்ணாந்து பார்த்தால் கண்களில் பட்டாம்பூச்சி பறக்கும் தெய்வீக அனுபவத்தோடு இணைத்து இருப்பார்கள். க்ரீசும் இதேபோல கோக்குமாக்காக யோசிக்கும் ஆட்களின் கைகளில் இருந்திருக்கிறது. எனவே, அங்கு மெட்டோரா எனும் நகரில் ஏராளமான ஆன்மிக புனித தலங்கள் உண்டு. அங்கு செல்வதே உடலுக்கும் மனதுக்குமான சிறந்த சோதனைதான். தொலைதூர நிலங்களில்தான் முதலில் ஆன்மிகத் தலங்கள் இருந்தன. ஆனால் கிறிஸ்துவ மத வெறியர்களின் போர்களால் ஆன்மிகத் தலங்கள் அழிந்தன. பிறகு ஆன்மிகத் தலங்களை எளிதில் அணுக முடியாத மலைப்பாங்கான இடத்தில் அமைத்தனர். இந்த வகையில் மெட்டோராவில் 24 ஆன்மிகத் தலங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் இப்போது செயல்பாட்டில் உள்ளவை ஆறு மட்டுமே. தலா மூன்று யூரோக்களை செலவிட்டால் இங்கு சென்று ஆன்மிக அனுபவத்தை, துறவிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என அறியலாம். ஆண்கள், பெண்கள் தங்கள் உடல் பாகங்களை முகம், கை, க...

ஐஸ்லாந்தில் அமையப்பெற்ற அழகிய தேசியப்பூங்கா!

படம்
  திங்வெல்லிர் அமைந்துள்ள இடம் – ஐஸ்லாந்து கலாசார அங்கீகாரம் பெற்ற ஆண்டு – 2004 ஐஸ்லாந்து நாட்டில் அமைந்துள்ள பழமையான தேசியப் பூங்காவின் பெயர் திங்வெலிர். 930ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு மாற்றங்களைக் கண்டு வந்துள்ள இடம் இது. இரண்டு மலைச்சிகரங்களுக்கு நடுவில் அமைந்துள்ள அல்மனாக்ஜாவில் தேசியப் பூங்கா உள்ளது. நாட்டின் முதல் ஜனநாயக நாடாளுமன்றமும் இங்குதான்   முதன்முதலில் உருவாகி இயங்கி வந்தது. வடக்கு அட்லாண்டிக் நடுவில் உள்ள தீவை நார்ஸ் என்பவர் கண்டுபிடித்தார். இதற்கான காலம் அறுபது ஆண்டுகள்.   1262ஆம் ஆண்டு நார்வே ஐஸ்லாந்தை கட்டுப்படுத்தி ஆண்டது. திங்வெல்லிர் என்ற இடமானது கிறிஸ்துவ மக்களுக்கான புனித இடம். இங்குள்ள மக்கள் எந்த வன்முறையும் இல்லாமல் தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டனர். இங்கு செல்பவர்கள் வட அமெரிக்க கண்டத்தட்டு, ஐரோப்பிய கண்டத்தட்டு என இரண்டிலும் பயணிக்க முடியும்.அட்லாண்டிக்கின் நடுப்பகுதியில் நீளமான மலைத்தொடர்களைக் கொண்ட நாடு ஐஸ்லாந்து. ஆக்சாரா என்ற ஆறு இங்கே ஓடுகிறது. அல்மனாக்ஜாவிலிருந்து திங்வல்லவட்டன் எனும் இடத்திற்கு அருவியாக மாறி செல்கிறது. திங்வல்லவட்டான...

தொன்மையான இடங்களைக் கொண்ட கோட்டார்!

படம்
  கோட்டார் அமைந்துள்ள இடம் மான்டெனெக்ரோ குடியரசு கலாசார இடமாக அறியப்பட்ட ஆண்டு 1979 என்ன செய்யலாம் கடல் பகுதியில் படகு ஒன்றை வாடகைக்கு பிடித்து ஜாலியாக டூர் செல்லலாம்   கோட்டார், அட்ரியாடிக் கடல்பகுதியில் அமைந்துள்ளது. துறைமுகம் அமைந்துள்ள பகுதி நீங்கள் கனவில் காணும் காட்சி போல அழகாக அமைந்துள்ளதுதான் சிறப்பானது. நீர்பரப்பு அதற்கு அருகில் உயர்ந்துள்ள மலைப்பகுதிகள் என பார்க்க பிரமிக்க வைக்கும் காட்சிகளை இங்கு காணலாம். ரோமன் கால கட்டிடங்கள், அகலமான சாலைகள், மத்திய காலகட்டத்தில் கட்டப்பட்ட சுவர்கள், தேவாலயங்கள் என பார்த்து வியப்பு கொள்ள மகிழ நிறைய இடங்கள் உள்ளன. கோட்டார் பகுதி, பதினைந்தாம், பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இப்பகுதியின் பரப்பு, 14,600 சதுர கிலோமீட்டராகும். இந்தியாவில் தொன்மையான இடங்களை பாதுகாக்கிறோம் என சங்கர் சிமெண்டை குலைத்து பூசுவார்கள் அல்லவா, அந்த மாதிரி இல்லாமல் உண்மையாகவே தங்களது பாரம்பரிய இடங்களை பாதுகாக்க மெனக்கெடுகிறது அரசு. நகரத்தின் முக்கியமான கட்டிடங்களை சிறப்பாக மறு புனரமைப்பு செய்து பாதுகாக்கிறார்கள். கோட்டார் கடற்புறம் மட்டுமல்...

பார்க்க வேண்டிய இடம் - மான்ட் செயின்ட் மிச்செல் , பசிபிக் கடலில் ஏற்படும் மாசுபாடு

படம்
  மான்ட் செயின்ட் மிச்செல் பிரான்ஸ் நாட்டில் நார்மாண்டியில் அமைந்துள்ள தீவு. மத்திய காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் தீவுக்கு அழகு சேர்க்கின்றன. பெரும்பாலான கட்டிடங்கள் எல்லாமே கிரானைட்டில் உருவாக்கப்பட்டவை. அனைத்தும் மலைமீது அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஜாலி சுற்றுலா செல்ல நினைத்தால் காலையில் நேரமே எழுந்தால் சூரியக் கதிர்கள் உங்கள் மீது படும்போது புகைப்படம் எடுக்கலாம். அதை இன்ஸ்டாகிராமில் பதியலாம். நேரம் ஆனால் நீங்கள் மட்டுமல்ல, பிறருக்கும் தூக்கம் கலைந்துவிடும். எனவே நிறைய பேர் வந்துவிடுவார்கள். நெரிசலில் புகைப்படம் எடுத்து நமது வரலாற்றை நிரப்பவேண்டியிருக்கும். கார்களை இரண்டு கி.மீ. தூரத்தில் நிறுத்திவிடவேண்டிய நிபந்தனை உண்டு. தொன்மை கட்டுமானங்களை மக்களின் புகைப்பட பரவசத்திலிருந்து காப்பாற்றவே இந்த ஏற்பாடு. ஆண்டுக்கு 3 மில்லியன் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து போகிறார்கள். மான்ச் செயின்ட் மிச்செலில் அற்புதமாக கட்டப்பட்ட தேவாலயம் உண்டு. அடுத்து, இங்கு பாறைகளை பிளந்து உருவாக்கப்பட்ட இடம், போர்க்காலத்தில் மக்கள் ஒளிந்துகொள்ள பயன்பட்டது. பிறகு மக்களை சிறை வைக்கும் சிறையாகவும் பய...

இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிரான கல்தூண்கள் - ஸ்டோன்ஹென்ச்

படம்
  ஸ்டோன்ஹென்ச் அமைந்துள்ள இடம் வில்ட்ஷையர், இங்கிலாந்து சிறப்பு கலாசார இடம் நிலவுக்கே சென்றாலும் தேயாத செருப்பெல்லாம் வேண்டாம். கொஞ்சம் நல்ல பிராண்ட் செருப்பை வாங்கிப் போட்டுக்கொண்டு செல்லுங்கள். மழை பெய்தால் வழுக்கிவிடும் ஜாக்கிரதை. பார்க்க தமிழ்நாட்டின் கிராமங்களில் அமைந்துள்ள சுமைதாங்கிக் கற்கள் போலவே இருக்கும். சுமைதாங்கி கற்களை யார் அமைத்தார்கள் என்பது ஊர்காரர்களுக்குத் தெரியும். ஏனெனில் கர்ப்பிணியாக இருந்து குழந்தை பெறும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக இறக்கும் பெண்ணின் நினைவுக்காக சுமைதாங்கிக் கற்கள் அமைக்கப்பட்டன. இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன்ஹென்ச் என்னும் இவ்வகை கற்கள் யாரால், எதற்காக அமைக்கப்பட்டன என்று தெரியாது. கேள்விகளுக்கு பதில் தெரியாது என்று நிறைய இருந்தாலும் கூட இந்த கல் தூண்களுக்கு பெருமைக்கு குறைவில்லை. புதிரான கல் தூண்கள் அமைக்கப்பட்ட காலம் 3,500 ஆக இருக்கலாம். ஆண்டுதோறும் இதை பார்க்கவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இதில் உள்ள சில கற்களுக்கு பெயர்கள் கூட வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து கற்களின் பெயர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆல்டர், சினி...

குகைளை ஒளிர வைக்கும் புழுக்கள்!

படம்
புழுக்களால் ஒளிரும் குகை!  நியூசிலாந்தின் வடக்கு தீவுப்பகுதியில் வெயிட்டோமோ (Waitomo) என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள சுண்ணாம்புக்கல் குகைகளைப் பார்க்கும்போது, சாதாரணமாகவே தோன்றும். ஆனால் இவைதான், உலகிலுள்ள சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்கின்றன.  வெயிட்டோமோ குகைகளின் சிறப்பு அம்சம், அதன் சுவர்களும் மேற்புறங்களும்தான். இவை குளோவார்ம் (Glowworms) எனும் ஒளிரும் புழுக்களால் நீலநிறத்தில் ஒளிர்கின்றன. இக்காட்சியைப்  பார்க்கவே உலக நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குகைகளைப் பாதுகாக்க அதன் வெப்பநிலையும் அதிலுள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவும் அரசால் சோதிக்கப்பட்டு வருகிறது. வெயிட்டோமோ குகையின் மேற்புர கூரையிலிருந்து வளரும் பாறைகளுக்கு விழுதுப்பாறை (Stalactites) என்று பெயர். கீழ்ப்புறத்திலிருந்து செங்குத்தாக வளருபவைக்கு புற்றுப்பாறை (Stalagmites) என்று பெயர். மழைநீர் மற்றும் பாறைகளிலுள்ள கனிமங்களின் சேர்க்கையால், வினோதமான பாறை அமைப்புகள் உருவாகின்றன.  ஒளிரும் புழுக்கள் முழு வளர்ச்சி பெற்றால், ஃபங்கஸ் நாட் (Fungus gnat) இன வகை பூச்சியாக ...

இமாலயப்பகுதிகளைப் பாதுகாக்கும் வேஸ்ட் வாரியர்ஸ் அமைப்பு!

படம்
  கழிவு மேலாண்மையில் தடுமாறும் இமாலய மாநிலங்கள்! இந்தியாவில் இமாலயப் பகுதிகளை உள்ளடக்கி பத்து மாநிலங்கள் உள்ளன. இதில் முக்கியமானவை, உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம்.  இங்குள்ள மலைப்பகுதிகளைக்  காண லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். இதனால் கிடைக்கும் வருவாய், மாநிலங்களுக்கு முக்கியமான பொருளாதார ஆதாரமாகும்.  இமாலயப் பகுதிகளில், தோராயமாக ஆண்டுக்கு 80 லட்சம்  டன் கழிவுகள் தேங்கிவருகின்றன. நகரத்தில் தேங்கும் குப்பைகளைச் சேர்த்தால் அளவு இன்னும் கூடும். இதே வேகத்தில் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை வந்தால் 2025ஆம் ஆண்டில், 24 கோடி சுற்றுலாப் பயணிகள் வருவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 கோடியாக இருந்தது.  இமாலய மாநிலங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைவு. இமாச்சலப் பிரதேசத்தின் கங்க்ரா (Kangra), குலு (Kullu) ஆகிய மாவட்டங்களின் பள்ளத்தாக்கு பகுதிகளில் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலும் இங்கு வருகை தருபவர்களில் சுற்றுலாப் பயணிகள், ஆன்மிக பயணிகள், மலையேற்ற வீரர்கள் ஆகியோர்தான் அதிகம். வெளியிலிருந்து வருபவர்கள் கொண்ட...