இடுகைகள்

க்ளவுட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லினக்ஸை இயக்குவதற்கு ஓரளவேனும் அறிவு தேவை! - மனம் தளராத விக்கிரமாதித்தன்

படம்
  லினக்ஸ் இயக்கமுறைமையைக் கொண்ட அரசு வழங்கிய மடிக்கணியை ஓராண்டாக பயன்படுத்தி வருகிறேன். டெக் நணபர் ஒருவரிடம் பணம் கொடுத்து ஒரு 8,500க்கு வாங்கினேன்.முதலில் விண்டோஸ் இயக்கமுறைமை மட்டும் பயன்படுத்திினேன். வெகு சில மாதங்களிலேயே அதுவும் மென்பொருள் பிரச்னைகளால் பழுதானது. அப்போது எனக்கு இருந்த ஒரே வழி லினக்ஸ் இயக்கமுறைக்கு மாறுவதுதான். அந்த கணினியில் அந்த இயக்கமுறையும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. லினக்ஸ் இயக்கமுறை பற்றி அடிப்படையான சில விஷயங்களே தெரியுமே தவிர, அதில் கோப்புகளை எப்படி தேடுவது, புரோகிராம்களை இன்ஸ்டால் செய்வது பற்றி முதலில் ஏதுமே தெரியாது. பிறகு இதனை டெக் நண்பரே சொல்லிக்கொடுத்தார். எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. விண்டோசை விட சில புரோகிராம்களே மாறியிருந்தன. நிறைய அம்சங்கள் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் இருந்தன. ஆனால், அதனை புரிந்துகொண்டு செயல்படுவதுதான் கடினமாக இருந்தது.  விண்டோசில் பிரச்னை என்றால் சிபியூவை ஒரு எத்து எத்தி, ரீஸ்டார்ட்  செய்தால் போதும். ஆனால் இந்த பார்முலா லினக்ஸில் செல்லுபடி ஆகாது.  லாக்டௌன் காலத்தில் முழுக்க அலுவலகப் பணிகளுக்கு ஈடுகொடுத்து உழைத்தது லினக்ஸ் இ

வாட்ஸ்அப்பில் ரகசியம் பறிபோகிறதா? - வாட்ஸ்அப் பயனர் ரகசியங்கள்

படம்
        வாட்ஸ்அப் பாதுகாப்பானதா? வாட்ஸ்அப்பில் ஒருவர் பிறருக்கு அனுப்பும் செய்திகள் போன் மெமரியில் இடம்பெற்றிருக்கும். எனவே, செய்திகளை ஆப்பில் அழித்துவிட்டாலும், ஹேக்கர்கள் மூலம் போனிலுள்ள செய்திகளை மீட்டு எடுக்கலாம். தொலைதூரத்தில் கூட இருந்து கூட ஆப்பை இயங்க வைக்கமுடியும். செய்திகளை மீட்டெடுக்க முடியும். போன், நிரந்தரமாக அழிக்கப்பட்டால் தகவல்களைப் பெற முடியாது. வாட்ஸ்அப்பை க்ளவுட் முறையில் ஒருவர் இணைத்து வைத்திருந்தால், அதிலுள்ள தகவல்களை காவல்துறை பெறமுடியும். இம்முறையில் கூகுள் டிரைவ், ஐக்ளவுட் ஆகியவை செயல்படுகின்றன. இந்த வசதியை ஒருவர் பயன்படுத்தினால், சிம்மை புதிய போனில் செயல்படுத்தும்போது, அவர் பதிவு செய்த அனைத்து தொடர்புகளும் அப்படியே புதிய போனில், இன்ஸ்டால் செய்யப்படும் ஆப் மூலம் வந்துவிடும். வாட்ஸ்அப் வழியே அனுப்பப்படும் செய்திகள் ஒருவருக்கு சென்று சேர்ந்தவுடன் அவை வாட்ஸ்அப் நிறுவன சர்வர்களிலிருந்து அழிக்கப்பட்டுவிடுகிறது. செய்தி ஒருவருக்கு சென்று சேராத சூழலில் என்கிரிப்ட் செய்யப்பட்டு 30 நாட்கள் சர்வரில் இருக்கும். வாட்ஸ்அப் வழியாக ஒருவர் செய்யும் அழைப்பு, செய்தி, இணைய முகவரி,

க்ளவுட் கம்ப்யூட்டிங்கின் சாதனை என்ன?

படம்
மேக கணிணி கடந்த ஆண்டு அக்டோபரில் ஐபிஎம் நிறுவனம், லினக்ஸ் நிறுவனமான ரெட்ஹேட்டுகு 33 பில்லியன் டாலர்களை கொடுத்து தன் மேக கணினி சேவை மேம்படுத்தியுள்ளது. இந்த மார்க்கெட்டில் ஐபிஎம்மின் சந்தை ரேங்க்: 4 அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை பத்து பில்லியன் டாலர்கள் செலவில் மேக கணியகத்தை அமைக்கவிருக்கிறது. கடந்தாண்டில் மட்டும் மேக கணியகத்திற்கான அடிப்படை கட்டமைப்புக்காக செலவிடப்பட்ட தொகை 80 பில்லியன். அலிபாபா நிறுவனம் மேக கணியக கட்டமைப்புச் சேவையை வழங்கி சம்பாதித்த தொகை ஒரு பில்லியன் டாலர்கள். ஆண்டுதோறும் அலிபாவின் வளர்ச்சி 84 சதவீதம். உலக கார்பன் வெளியீடாக தகவல் மையங்கள் கூறிய அளவு 0.3% அரிசோனாவிலுள்ள ஆப்பிளின் தகவல் மையத்திற்கு தேவைப்படும் மின்சார அளவு - பனிரெண்டாயிரம் வீடுகளில் சேமிக்கும் சோலார் மின்சாரம் . நன்றி: க்வார்ட்ஸ்