இடுகைகள்

எழுத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உங்களது படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நூல் - டெய்லி ரிச்சுவல்

படம்
 டெய்லி ரிச்சுவல்  மாசன் குரே சுயமுன்னேற்ற நூல் 171 பக்கம் தினசரி சடங்கு என கலைஞர்களுக்கு என்ன இருக்கும்? கட்டுரை, நாவல், ஓவியம், திரைப்படம் இதுதானே? அதை எப்படி உருவாக்குகிறார்கள், அதற்கு என்னென்ன விஷயங்களை செய்கிறார்கள் என்பதுதான் நூலின் மையப்பொருள்.  நூலில் ஏராளமான திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், கட்டுமான கலைஞர்கள், ஓவியர்கள், இசை அமைப்பாளர்கள் தங்களின் பழக்க வழக்கம் பற்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களே தங்களைப் பற்றி கூறுகிறார்கள் அல்லது அவர்களைப் பற்றி சுயசரிதை எழுதும் பத்திரிகையாளர்கள் விளக்கமாக எழுதியிருக்கிறார்கள். நூலை வாசிப்பவர்களுக்கு தேவையான குறிப்புகளும் கூட நூலின் பின்பக்கத்தில் உள்ளது. நூல்களை தேடி எடுத்து பார்த்துக்கொள்ளலாம்.  சில எழுத்தாளர்கள் திருமணம் செய்தாலும் கூட எழுத்தாளராக சாதிக்கும் இயல்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதற்காகவே ஒருவர் வேலைக்கு செல்வது இன்னொருவர் எழுதுவது என திட்டமிடுகிறார்கள். அதில் ஒருவர் வெற்றி பெறுகிறார், இன்னொருவர் தோல்வியுறுகிறார். இந்தவகையில் எழுத்தாளர் கார்சன், ரீவ்ஸ் ஜோடியில் கார்சன் வெற்றிபெறுகிறார். அதாவத...

உங்களது கிரியேட்டிவிட்டியை வளர்க்க உதவும் அற்புத நூல்!

படம்
        ஸ்டீல் லைக் என் ஆர்டிஸ்ட் ஆஸ்டின் கிளியோன் வொர்க்மேன் பதிப்பகம் இது ஒரு சுயமுன்னேற்ற நூல்தான். ஆனால், கார்ட்டூன் கலைஞர் எழுதியிருக்கிறார். அதனால் நூலை வாசிக்கும்போது, படங்கள் அதிகமாகவும் எழுத்து குறைவாகவும் உள்ளது. வாசிக்க அதுவே ஆர்வம் தருவதாகவும் அமைவது ஆச்சரியம்தான். பொதுவாக படம் வரைபவர்கள், அதாவது கார்ட்டூன் போடுபவர்களால் எழுதவும் முடியும். அதற்கு அவர்கள் சற்று நூல்களை படித்து பயிற்சி செய்யவேண்டும். அவ்வளவேதான். அந்தவகையில் ஆஸ்டின், தன்னுடைய அனுபவங்களை வாசகர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார். நூல் முழுக்க புகைப்படங்கள், எழுத்துகள் என அவரது கைவண்ணம் அழகாக உள்ளது. ஒருவர் தன்னுடைய திறமையை எப்படி வளர்த்துக்கொள்வது என எளிதாக கற்றுக்கொடுக்கிறார். அனைத்துமே எளிமையான சின்ன சின்ன விஷயங்கள்தான். குறிப்பாக, தினசரி நடக்கும் அனுபவங்களை நோட்டில் எழுதுவது, வேலை செய்யும் இடங்களை டிஜிட்டல் பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது என சிலவற்றை செய்தாலே நிறைய வேறுபாடுகளை பார்க்கமுடியும் என விளக்கிக் கூறுகிறார். கூடுதலாக நிறைய எழுத்தாளர்கள். ஓவியர்கள், ஓவியக்கலைஞர்களின் மேற்கோள்களு...

மனிதர்களின் மீது நம்பிக்கை குன்றாமல் எழுதிய படைப்பாளியின் படைப்பு விமர்சனங்கள்! - ஜானகிராமம்

படம்
      ஜானகிராமம் - ஜானகிராமனின் படைப்புகளைக்குறித்த கட்டுரைகள் கல்யாணராமன் காலச்சுவடு பதிப்பகம் பத்திரிகையாளர் நா கதிர்வேலன் மூலம் அறிந்துகொண்ட நூல். அவரைப் பொறுத்தவரை நூல்களை வேகமாக வாசிக்ககூடியவர். வார இதழ்களில் எழுதிய சினிமா கட்டுரைகளை வாசித்தாலே திஜாவின் ஆழமான பாதிப்பை உணர முடியும். எண்ணூறு பக்கங்களுக்கும் மேலுள்ள நூல். மொத்தம் நூறு கட்டுரைகளை பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். இதில், இடம்பெற்றுள்ள ரமேஷ் வைத்யா என்பவரின் கட்டுரை நீங்கலாக மற்ற கட்டுரைகள் அனைத்துமே ஓரளவுக்கு ஜானகிராமனின் கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என பலவற்றையும் விமர்சனநோக்கில் அணுகியுள்ளது. நூலில் நூறு கட்டுரைகளில் சுகுமாரன், மாலன், சு வேணுகோபால், சு தமிழ்செல்வன் என சிலரின் கட்டுரைகள் படிக்க சிறப்பாக இருந்தன. எழுத்தாளர்கள் குறிப்பிட்ட சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஒருகதை, இரண்டு கதை அல்லது அத்தனை கதைகளையும் என எடுத்துக்கொண்டு விமர்சிக்கிறார்கள்.மாலன் போன்ற எழுத்தாளர், ஓரளவுக்கு அனைத்து கதைகளையும் விளக்கி விமர்சனம் செய்ய முற்படுகிறார்கள். நூலின் நிறைய இடங்களில் பொதுவாக ...

மூடநம்பிக்கைகளை எதிர்த்துபோராடி வெற்றிகண்ட இஸ்மத் சுக்தாய்! - மழைப்பேச்சு பாட்காஸ்ட்

autoplay player                     https://archive.org/details/blue-modern-welcome-podcast-cover

நீங்கள் எழுதும் எழுத்துக்களை கவனிக்க வைக்க வழிகாட்டும் நூல்! - மழைப்பேச்சு பாட்காஸ்ட்

autoplay player                    https://archive.org/details/2024-08-14-10-29-00

முயற்சியும், பயிற்சியும் செய்தால் எழுத்தாளராக மாறமுடியும்!

படம்
            ரைட்டிங் தட் கெட் நோட்டிஸ்டு எஸ்டெல் எராஸ்மஸ் இந்த நூல் பொது வாசகர்களுக்கானது அல்ல. வளரும், துறையில் ஏற்கெனவே உள்ள எழுத்தாளர்களுக்கானது. நூலை எழுதியுள்ள எழுத்தாளர் எஸ்டெல், பல்வேறு பதிப்பகங்கள், பெண்கள் பத்திரிகைகள், நாளிதழ்களில் பணியாற்றி பல நூறு கட்டுரைகள் எழுதியுள்ளார். தற்போது சப்ஸ்டாக், பிளாக், வலைத்தளத்தளங்கள், பாட்காஸ்ட் ஆகியவற்றை நடத்தி வருகிறார். புதிய தலைமுறையினருக்கு எழுதுவது பற்றிய பயிற்சிகளை வழங்கி வருகிறார். நீங்கள் அவருடைய வலைத்தளத்திற்கு சென்று, மின்னஞ்சலுக்கு பதிவு செய்தால் கூட இலவச நூலை தரவிறக்கிக்கொள்ள வழிவகை செய்திருக்கிறார். நூல் தரவிறங்குமா என்று தெரியவில்லை. முடிந்தால் முயலுங்கள். எழுத்தாளர் பயணிதரன் என்பவர் கூட இப்படி மின்னஞ்சலில் இணைபவர்களுக்கு புத்தகப் பரிசு ஒன்றை வழங்குவதாக அறிவித்திருந்தார். ஆனால், வலைத்தளத்தில் சேர்ந்தபிறகும் கூட அவரது இலவச பரிசு இன்னும் வந்து சேரவில்லை. புதிய வாசகர்களைப் பிடிக்க இப்படியான தூண்டில்களை போடவேண்டும்போல. நூலில், எஸ்டெல் எப்படி எழுதவேண்டும், எடிட்டர்கள் கூறுவதைப் புரிந்துகொள்வது, நேரத்திற...

வாயை மூடு! - விமர்சனங்களை மௌனமாக்கும் ஊபா சட்டம்

படம்
      வாயை மூடு! - விமர்சனங்களை மௌனமாக்கும் ஊபா சட்டம் அரச நீதி என்பது தனது அதிகாரத்தை எப்படியேனும் தக்கவைத்துக்கொள்ள முயல்வது. நீதி,நிர்வாகம் தாண்டி சுயதோல்விகளைப் பற்றி விமர்சிக்கும் எவரையும் சர்வாதிகாரி விட்டுவைப்பதில்லை. அந்த வகையில் பிரிட்டிஷ் அரசும் தனது காலத்தில் போராட்டக்காரர்களை தேசதுரோக சட்டத்தின்படி தண்டித்தது. தலைவர்கள் பலரை சிறையிலிட்டது. நேதாஜி வழியில் சென்றவர்களை தூக்கிலிட்டது. இப்படி நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துமே அதற்கென உருவாக்கி வைத்த சட்டங்களின்படிதான் நடந்தன. அதே சம்பவங்களை ஒன்றிய ஆட்சியாளர்கள் நினைவுபடுத்துகிறார்கள். ஜனநாயகத்தின்படி கேள்வி கேட்பவர்களின் குரலை நசுக்க கூலிப்படை தொடங்கி அரசின் புலனாய்வு அமைப்புகள் வரை பயன்படுத்துகிறார்கள். அப்படி அரச பயங்கரவாதத்தைப் முறைப்படுத்தும் சட்டங்களில் ஒன்று ஊபா. எழுத்தாளர் அருந்ததி ராய், அவரது நாவல் எழுத்துக்காக உலகளவில் புகழ்பெற்றவர். அவரது எழுத்துகள், பேச்சுகள் அனைத்துமே பல லட்சம் பேரால் வாசிக்கப்படுபவை. கேட்கப்படுபவை. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஆற்றிய உரை ஒன்றுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அர...

பத்தாவது ஆண்டில் கோமாளிமேடை - தொடரும் பயணம்!

படம்
  பத்தாவது ஆண்டில் கோமாளிமேடை....  இந்த வலைப்பூவை இத்தனை ஆண்டுகள் நடத்த முடியும் என யார் நினைத்திருக்க முடியும்? எங்களுக்கே அந்த நம்பிக்கை இல்லை. என்ன எழுதுவது, எப்படி இயங்குவது, யாருக்கு என்ன தெரியும் என நிறைய கேள்விகள் இருந்தன. தொடக்க காலத்தில் எழுதிய கட்டுரைகளிலும் கூட இதுபோன்ற தடுமாற்றங்கள் தென்பட்டிருக்கலாம். கோமாளிமேடையின் ட்ரங்குப்பெட்டியில் இதற்கான சான்றுகள் உண்டு என நம்புகிறோம்.  அன்பரசு என்ற ஒருவரின் சிந்தனையில்தான் கோமாளிமேடை வலைப்பூ உருவானது. அதுதான் அடித்தளம். அதன் அடிப்படையில்தான் ஆராபிரஸ் இ நூல் பதிப்பகம் கூட பின்னாளில் உருவானது. இந்த பத்து ஆண்டுகளை திரும்பி பார்ப்பது என்பது கடினமாகவே இருக்கிறது. ஏனெனில் பாதை அந்தளவு எளிமையாக இல்லை. சந்தித்த மனிதர்களும், அவர்களுடனான அனுபவங்களும் கூட மகிழ்ச்சி கொள்ளத்தக்கவை அல்ல. ஆனால் , நகை முரணாக அவைதான் கோமாளிமேடையில் எழுதிய பல்வேறு கட்டுரைகளுக்காக அடித்தளமாக அமைந்தது.  பெரும்பாலான நேரங்களில் எழுதிய எழுத்துகள் மட்டுமே மனதளவில் பெரிய ஆறுதலாக இருந்தது. தொடக்க காலத்தில் கணியம் சீனிவாசன் அவர்கள், அன்பரசு எழுதிய  மொழ...

ஜிம்பாவே மண்ணின் இலக்கியத்தை வாழ வைக்கும் வேவர் பதிப்பகத்திற்கு வயது 25!

படம்
  ஜிம்பாவேயின் கதைகளைச் சொல்லும் பதிப்பகம்! ஒரு நாவலை வாசிக்கிறீர்கள். அதன் எழுத்து நடை வசீகரமாக இருக்கிறது. உடனே எழுத்தாளரின் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புகிறீர்கள். ஆனால் உண்மையில், எழுத்தாளர் மையக்கருவை எழுதுகிறார்தான். ஆனால் அதை செம்மைப்படுத்துபவர் ஆசிரியர். ஆங்கிலத்தில் எடிட்டர். இவரை பெரிதாக யாரும் கவனப்படுத்துவது இல்லை. தமிழில் அப்படியான சிறப்பான எடிட்டர் என தமிழினி வசந்தகுமார் அவர்களைக் கூறுவார்கள். இது சற்று வெளியே தெரிந்த விஷயம் என்பதால் கூற முடிகிறது. நிறைய எடிட்டர்கள் தங்களை பெரிதாக வெளிப்படுத்திக்கொள்ளாமல் பதிப்பகங்களின் புத்தக அடுக்குகளில் இருக்கிறார்கள். இப்படியானவர்களை கௌரவப்படுத்த ஒரு விருது கூட இல்லை.  அப்படியானவர்களில் ஒருவர்தான் ஜிம்பாவே நாட்டில் வேவர் பிரஸ் பதிப்பகத்தை நடத்தும் ஐரின் ஸ்டான்டன். இவர், ஏற்கெனவே பதிப்பகத்துறையில்,  இயங்கிய அனுபவம் கொண்டவர். தனது கணவரை லண்டனில் உள்ள ஆப்பிரிக்கா சென்டரில் சந்தித்து பேசி, கரம் பிடித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஜிம்பாவே வந்து வேவர் பிரஸ்ஸை தொடங்கி நடத்தி வருகிறார்கள். அந்த பதிப்பகத்திற்க...

பட்டியல் - விநோதரச மஞ்சரி

படம்
  பட்டியல் தியோடர் சியஸ் கெய்சென் என அழைக்கப்படும் டாக்டர் சியஸ், தனது லோரக்ஸ் நாவலை கென்யன் ஹோட்டலின் நீச்சல் குளத்தின் அருகே அமர்ந்து யானைக்கூட்டத்தை பார்த்தபடியே எழுதி முடித்தார். எழுத பயன்படுத்திய காகிதம், சலவை துணிகளின் பட்டியல் காகிதம்.   1907ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி எழுத்தாளர் எட்மண்ட் மோரிஸ், அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு விருந்து உண்ண வரும் விருந்தினர் பட்டியலைக் கவனித்தார். அதில்   நோபல் பரிசு வென்றவர், கலாசாரவாதி, வரலாற்று அறிஞர், கட்டுரையாளர், சுயசரிதையாளர், மானுடவியலாளர், குடிமைச்சமூக சீர்திருத்தவாதி, சமூக செயல்பாட்டாளர், நியூயார்க் நகர முன்னாள் ஆளுநர் என பல்வேறு தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டிருந்த ஒரே பெயர் தியோடர் ரூஸ்வெல்ட். அமெரிக்கா வியட்நாம் போரில் தோற்றுப்போனது. அதில் இறந்துபோனவர்களுக்கான நினைவகம் வாஷிங்டனில் உள்ளது. அதில், இறந்து அல்லது காணாமல் போனவர்கள் என 58 ஆயிரம் ராணுவ வீரர்களின் பெயர்கள் உள்ளன. அதற்கான நிதியகத்தில் 38 வீரர்களின் பெயர்கள் மட்டுமே உள்ளன. தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் அமெரிக்காவில் முதன்முதலில் சிகாகோவில்தான் வெளிய...

பத்திரிகை ஆசிரியரின் முதல் தகுதி என்ன தெரியுமா? - ஆ.வி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் சொன்ன அறிவுரை

படம்
  கோபத்தின் பிரயோஜனம் ஆசிரியரின் மறைவுக்கு இருபது நாட்களுக்கு முன்பு, அவரை சந்திக்க முடிந்தது. அவருடைய துணைவியார் சரோஜா மேடமும் அருகில் இருந்தார். நடுங்கும் கரங்களை காற்றில் அசைத்து பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டே வந்தார். பேச்சு சுற்றி வளைத்து கடைசியாக அவரைப் பற்றியே வந்து நின்றது. ‘’நெறைய தடவை நான் உங்ககிட்டயெல்லாம் கோபப்பட்டிருக்கேன் இல்லையா?’’ என்றார். ‘’ஐயோ கொஞ்சமான கோபமா சார் பட்டீங்க. நீங்க உரத்த குரலில் கண்டிக்கும்போதெல்லாம் நாங்க தடதடத்துப் போய் நின்றுக்கோம்’’ என்றேன். ‘’ஏண்டா, இவன்கிட்ட வேலை பார்க்கிறோம்னு வெறுத்துப் போயிருக்கும்.. இல்லையா’’ என்றார். சிரித்தபடியே மறுத்து தலையசைத்ததற்கு, ‘’நான் யாரிடம் கோபப்பட்டு வலிஞ்சு ஒரு விஷயத்தை சொல்றேனோ அவங்கள்லாம் நம்மோடயே இருந்து தொடர்ந்து நம்ம பேச்சக் கேட்டு திருத்திண்டு நல்லபடி முன்னுக்கு வருவாங்கன்னு நினைப்பேன். அவன்கிட்டதான் கோபப்படுவேன். கோபத்துக்கும் ஒரு பிரயோஜனம் இருக்கணும் இல்லியா.. இந்த ஆள் சரிவர மாட்டான். எவ்வளவு சொல்லியும் பயனில்லைனு நெனச்சுட்டா, அவங்கிட்ட எதுக்கு வீணா கோபப்படணும்? நீங்க செஞ்சது எனக்கு பிடிக்க...

தன்னைச்சுத்தி நடக்குறதை கவனிக்கிறதும், திறந்த மனசோட இருக்கிறதும் பத்திரிகைக்காரனுக்கு முக்கியம்!

படம்
  பாலசுப்பிரமணியன், ஆனந்தவிகடன் பாலசுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியர், ஆனந்தவிகடன்   பாலசுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியர், ஆனந்தவிகடன் சினிமாவில் இருந்து எது உங்களை பத்திரிகை நோக்கி ஈர்த்தது? எனக்கு சினிமா மேல எப்பவும் ஆர்வம் இருந்தது கிடையாது. சொல்லப்போனா, சினிமால இருந்ததே ஒரு நிர்பந்தம். பத்திரிகைக் கனவுதான் என்னைத் துரத்திக்கிட்டே இருந்தது. உங்களுக்கு பத்திரிகை ஆர்வம் எப்போது வந்தது? சின்ன வயசுலேயே. பனிரெண்டு வயசுலேயே கையெழுத்து பத்திரிகை நடத்தியிருக்கேன். சந்திரிகா அப்படின்னுட்டு. இப்போது வரும் பத்திரிகைகளைப் படிக்கிறீர்களா? இன்றைய தமிழ் இதழியலை எப்படி பார்க்கிறீர்கள்? ம்ஹூம்.. நான் எதையும் படிக்கிறதில்ல. கண்ணு சுத்தமா தெரியலை. எப்பவாது, எதையாவது வாசிக்கணும்னு தோணினா பேரனைவிட்டு வாசிக்கச் சொல்லிக் கேட்டுக்கிறதோட சரி. வீட்டுல ஹிண்டு மட்டும்தான் வாசிப்பேன். ஆபீஸ்லதான் மத்த பத்திரிகைகள் வாசிக்கிறதெல்லாம். ஆபீஸோட போன பல விஷயங்கள்ல அந்த வாசிப்பும் ஒண்ணு.   ஒரு பத்திரிகை ஆசிரியராக , மிகவும் முக்கியமான தருணம் என எதைச் சொல்லுவீர்கள்? நான் ஆனந்தவிகடனில் இருந்த ஐம்...

சப்ஸ்டாக் வலைத்தளத்திலும் பயணிப்போம் - வாய்ப்புள்ளோர் இணையலாம் - வாங்க!

படம்
  இனி வலைப்பூவில் எழுதும் கட்டுரைகள் சப்ஸ்டாக்கிலும் கிடைக்கும். நீங்கள் விரும்பினால் இதிலும், தொடரலாம். தமிழோடு இணைந்து பயணிப்போம்.  https://anbarasushanmugam.substack.com/ நன்றி - மெட்டாமங்கீஸ் - விஜய் வரதராஜ்

நீங்கள் மட்டும்தான் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? - எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ்

படம்
  எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ் நேர்காணல் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ். இவர் தனது முதல் நாவலை எழுதியபோது அதற்கு பெரும் வரவேற்பு, மாலை மரியாதையெல்லாம் கிடைக்கவில்லை. ஜான் குரோவ்ஸ் டெவில் என்பதுதான் நூலின் பெயர். இந்த நூல் பதிப்பாளர்களால் 78 முறை மறுக்கப்பட்டுள்ளது. கடும் விரக்திக்குள்ளான மார்லன், எழுதிய கையெழுத்து பிரதி, நண்பர்களின் கணினியில் இருந்த பிரதி என அனைத்தையும் அழித்தார். ஆனால் ஒரு ஒரு கணினி பிரதி மின்னஞ்சலில் தப்பி பிழைத்தது. பின்னாளில் 2015ஆம் ஆண்டு எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் செவன் கில்லிங்க்ஸ் என்ற புனைவை எழுதி   மேன் புக்கர் பரிசை வென்றார். நூலில், இசைக்கலைஞர் பாப் மார்லியை ஒருவர் கொலை செய்ய முயல்வதை புனைவாக்கியிருந்தார். அதற்குப் பிறகு டார்க் ஸ்டார் எனும் தொடர்வரிசை நாவல்களை எழுத தொடங்கினார். பிளாக் லியோபேர்ட், ரெட்வோல்ஃப் என இரண்டு நாவல்கள் ஓடிடியில் தொடராக தயாரிக்கப்படவிருக்கின்றன. ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவிற்காக வந்தவரிடம் பேசினோம். மரபான வரலாற்றை எப்படி கற்பனையான புனைவாக மாற்றுகிறீர்கள்? நான் சிறுவயதில் இருந்து பல்வேறு வகையான கதை...

சாதாரண டைப்ரைட்டரில் ஏஐயை இணைத்தால்.... தொழில்நுட்ப வல்லுநர் அரவிந்த் சஞ்சீவ்

படம்
  இப்போது எல்லோருமே சாட் ஜிபிடி, அதானி பங்கு, மோசடி, வாழ்க்கை, எதிர்காலம், வேலை போய்விடுவோமோ என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் சாட் ஜிபிடி சொல்லும் பதில்களில் உள்ள சரி தவறு என்பதைப் பற்றி நாமும் விவாதங்களை செய்யப்போவதில்லை. பிங் தன்னுடைய தேடுதல் தளத்தில் சாட் ஜிபிடியை இணைத்துள்ளது. அதுபோல ஏஐயை வேறு ஏதாவது சாதனங்களில் இணைக்க முடிந்தால் எப்படியிருக்கும்? யோசித்ததோடு அதை தனது திறமை மூலம் சாத்தியப்படுத்தி இருக்கிறார் இளைஞரான அரவிந்த் சஞ்சீவ். ‘’ஏஐ யைப் பயன்படுத்தி சோதனைகளை செய்வது, மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்குமான உறவை மேம்படுத்தும்’’ என்கிறார். இவர், இ காமர்ஸ் தளத்தில் வாங்கிய சாதாரண டைப்ரைட்டரை ஏஐ ஆற்றல் கொண்டதாக மாற்றியிருக்கிறார். இதற்கென சில மாறுதல்களை எந்திரத்தில் செய்திருக்கிறார்.   இந்த எந்திரம், ஓபன் ஏஐயின் சாட் ஜிபிடி 3 மாடலில் இயங்குகிறது. அரவிந்த் பயன்படுத்துவது, எண்பதில் வெளியான பிரதர்ஸ் நிறுவனத்தின் டைப்ரைட்டர். சாதாரண டைப்ரைட்டரில் எப்படி ஏஐயை இணைக்கும் யோசனை வந்தது? எல்லாம் ஒரு கலைதாகம்தான் அப்படி ஒரு திசை நோக்கி செலுத்தியிருக்கிறத...

காந்தியின் பேச்சால் ஊக்கம் பெற்று உருவான தற்சார்பு பேனா மற்றும் இங்க்!

படம்
  காந்தி தன் வாழ்நாளில் எழுதியுள்ள கடிதங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ? மொத்தம் 31 ஆயிரம் கடிதங்கள் . தினசரி உலக நாடுகளில் இருந்து வெளிவரும் கடிதங்களுக்கு பதில் அளிப்பது காந்தியின் வழக்கம் . அவர் வார நாட்களில் திங்கள்கிழமை மட்டும் மௌனவிரதம் இருப்பது வழக்கம் . ஆனால் வார நாட்களில் எப்போதும் எழுத்துக்கு விடுமுறை கிடையாது . இப்படி எழுதித்தான் நூறு நூல்களுக்கு மேல் காந்தி எழுதிய கட்டுரைகள் , பேச்சுகள் தொகுக்கப்பட்டு உள்ளன . இந்திய சுயராஜ்யம் பற்றி பேசிய காந்தி , இந்தியாவின் உள்நாட்டுத் தேவை போகவே பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டும் என்று கூறிவந்தார் . இவரது கருத்தால் ஊக்கம் பெற்றவர்கள் தான் நாட்டின் தனித்துவமான பேனா மற்றும் பேனாவிற்கான மையைத் தயாரித்தனர் . காந்தியின் சுய ராஜ்ய கனவால் உந்தப்பட்டவர்களில் ஒருவர்தான் ராஜ முந்திரியைச் சேர்ந்த கே வி ரத்னம் . இவர் , 1921 ஆம் ஆண்டு காந்தியை சந்தித்து சுயராஜ்ய லட்சியப்படி என்ன பொருளை உருவாக்க வேண்டுமென கேட்டார் . அதற்கு , காந்தி பின் முதல் பேனா வரையில் நிறைய பொருட்களை நாம் தயாரிக்கலாமே என்று சொன்னார் . இதன்படி , 1932 ஆம் ஆண்டு ரத்னம் பென் வொர்க...