இடுகைகள்

மனநலன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்வி, மனநலன் ஆராய்ச்சிக்கென தானமளிக்க தொடங்கியுள்ள தொழிலதிபர்கள்!

படம்
  Graeme hart rank group க்ரீம் ஹார்ட் தலைவர், ரேங்க் குழுமம் வயது 58 நியூசிலாந்து க்ரீம் ஹார்ட் இன்றைக்கு பல்வேறு பொருட்களை அடைத்து விற்கும் பேக்கேஜிங் பொருட்களை விற்கலாம். ஆனால், அவருக்கு ஒருகாலத்தில் பள்ளியில் படிக்கும்போது, பள்ளிப்படிப்பை தொடரமுடியாத பொருளாதார சூழ்நிலை இருந்தது. தற்போது பால் பாக்கெட், குடிநீர் புட்டிகள், காகிதம், அலுமினிய தாள் ஆகியவற்றை தயாரித்து வழங்கிவருகிறார். இவரின் சொத்து மதிப்பு 8.8 பில்லியன் டாலர்களாக உள்ளது.  அண்மையில் ஸ்டார்ஷிப் எனும் குழந்தைகள் மருத்துவமனைக்கு ஹார்ட், அவரது மனைவி ராபின் ஆகியோர் இணைந்து 3.8 மில்லியன் டாலர்களை தானமாக வழங்கியுள்ளனர். அந்த மருத்துவமனை தொடங்கி 32 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த மருத்துவமனைக்கு கிடைத்த தனிநபர் நன்கொடையில் இதுவே அதிகம். கிடைத்த நிதியில், தீவிரமாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை பராமரிக்கவும், செவிலியர்களுக்கு பயிற்சிகளை அளிக்கவும் மருத்துவமனை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 2018ஆம் ஆண்டு, ஹார்ட் தம்பதியினர் 10 மில்லியன் டாலர்களை ஒடாகோ பல்கலைக்கழகத்திற்கு வழங்கினர். ஆக்லாந்தில் உள்ள பல் மருத்துவ கல்லூரிக்கு 28.2 மில்லியன்

அளவற்ற அதிகாரம் தரப்படும்போது ஏற்படும் தனிநபரின் நடத்தை மாறுதல்கள்!

படம்
  பிலிப் ஸிம்பார்டோ philip zimbardo 1933ஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சிசிலிய அமெரிக்க குடும்பத்தில் பிறந்தார். பிரான்க்ஸில் உள்ள ஜேம்ஸ் மன்றோ பள்ளியில் படித்தார். இவரது நண்பராக உளவியலாளர் ஸ்டான்லி மில்கிராம் இருந்தார். நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளின் கல்லூரியில், பிஏ பட்டம் பெற படித்தார். யேல் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். 1968ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் செல்லும்வரை ஏராளமான பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தார். 1980ஆம் ஆண்டு, மக்களுக்கு உளவியலை அறிமுகம் செய்யும் நோக்கத்தில் டிவியில் டிஸ்கவரிங் சைக்காலஜி என்ற தொடரை தயாரித்தார். 2000ஆம் ஆண்டு, அமெரிக்க உளவியல் பவுண்டேஷன், வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க உளவியல் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  முக்கிய படைப்புகள் 1972 தி ஸ்டான்ஃபோர்ட் பிரிசன் எக்ஸ்பரிமென்ட்  2007 தி லூசிஃபர் எஃபக்ட் 2008 தி டைம் பாரடாக்ஸ்  2010 சைக்காலஜி அண்ட் லைஃப்  நல்ல மனிதர்கள் என்று அறியப்பட்டவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அதிகாரம் வழங்கப்படுகிறது. அதை அவர்கள் தங்கள் கீழுள்ளவர்கள் மீ

எல்இடி பல்பு போல மனநலன் ஒளிர என்ன செய்யலாம்?

படம்
  மனநலனைக் காத்துக்கொள்ள என்ன செய்யலாம்? மனிதர்களோடு பழகுவதை கைவிட வேண்டும் என பகடையாட்டம் லும்பா பாத்திரம் போல முடிவெடுக்கலாம்தான். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. குறைந்தபட்சம் சில குறிப்புகளை பின்பற்றலாம், மனதிற்கு ஏற்படும் சேதாரத்தை குறைக்க முயலலாம்.  சமூகவலைத்தள போதை வக்கிரம் பிடித்த, மனநல பிரச்னை உள்ளவர்கள், மூளை அழுகிப்போனவர்கள்  உள்ள இடமாக சமூக வலைத்தளங்கள் மாறிவருகின்றன. வேலைக்கு இடையே ஓய்வுக்காக பதினைந்து நிமிடங்கள் செலவழிப்பது தவறில்லை. மற்றபடி ஒருநாளுக்கு அதற்கு மிஞ்சி அதிகமாக செல்லக்கூடாது. அப்படி சலிப்பு ஏற்பட்டால் கூட சமூக வலைத்தளங்களுக்கு செல்லாமல் இருக்க வைராக்கியமாக முடிவு செய்யுங்கள். நேரத்தை வீணாக்கும் ஆப்கள் இருந்தால் அதை அன்இன்ஸ்டால் செய்து மகிழ்ச்சியாக இருங்கள்.  உண்மையான நண்பன்  சமூக வலைத்தள கணக்குகளுக்கு நேர வரையறை முக்கியம். அடுத்து, உங்களோடு தொடர்பு கொண்டிருந்த பழைய நண்பர்கள் இருக்கிறார்களா என கண்டறியலாம். பேசலாம். பழைய நண்பர்களில் யாரேனும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருந்தால் கவனம். போட்டித்தேர்வு எழுதி வென்று அரசு அதிகாரியானவர்களாக  இருந்தால் அவர்களோடு ந

மனநலன் குறைபாடுகளை எதிர்கொள்வது எப்படி? - முதியோர் அதிகரிப்பால் ஏற்படும் விளைவுகள்

படம்
  பெருகும் மனநலன் பாதிப்பு   1.இந்திய மக்கள் தொகையில் உளவியல் சிகிச்சை தேவைப்படும் மக்களின் அளவு 150 மில்லியன் 2.30 மில்லியன் அளவு மக்கள் மட்டுமே உளவியல் குறைபாடு சார்ந்த சிகிச்சைகளை நாடி அதைப் பெறுகின்றனர். 3.15-29 வயது கொண்ட பிரிவினர் இறப்பில் தற்கொலை முக்கியமான பங்கு வகிக்கிறது. இவர்களின் இறப்பில் நான்காவது முக்கியமான காரணமாக உளவியல் பிரச்னைகள் உள்ளன. 4.2022ஆம் ஆண்டில் மட்டும் 13,089 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2020ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 12,526 ஆக இருந்தது என தேசிய குற்ற ஆவண அமைப்பு கூறியுள்ளது. 5.மனம், நரம்பியல் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்படும் முதியோர்களின் அளவு 6.6 சதவீதமாக உள்ளது. 6.அறுபது வயது அல்லது அதற்கு மேல் உள்ளவர்களில் 50 சதவீதம் பேர் உளவியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 7.மனச்சோர்வு, பதற்றம் காரணமாக ஏற்படும் உற்பத்தித்திறன் இழப்பு 1 ட்ரில்லியனாக உள்ளது என உலகம் முழுமைக்கும் கணக்கிடப்பட்டுள்ளது. இப்படி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12 மில்லியன். மனிதர்கள் உடலைப் பெற்று வந்ததே அவதிப்படத்தான் என்ற

தலைமுடி மூலம் மனநோய்களை அறியலாம்!

படம்
            முடி மூலம் நோய்களை அறிய முடியுமா ? மூளையிலுள்ள ஹைப்பர் ஆக்டிவ் மரபணுக்கள் மன நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள் . மூளையில் நடக்கும் பிரச்னைகளுக்கு நாம் அதனை திறந்து பார்க்கவேண்டியதில்லை . முடியைப் பார்த்தாலே போதும் . மூளையில் உள்ள எம்பிஎஸ்டி மரபணு , கட்டற்று இயங்கும்போது பாதிப்பு ஏற்படுகிறது . இந்த மரபணுவினால் ஹைட்ரஜன் சல்பைடு அதிகளவு மூளையில் உருவாகிறது . இது ஆன்டி ஆக்சிடன்ட்தான் என்றாலும் அதிகளவு உருவாகும்போது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது . ஹைட்ரஜன் சல்பைடு மைட்டோகாண்ட்ரியாவின் செயல்பாடுகளை முடக்குகிறது . மேலும் பிற நரம்பு செல்களின் தகவல்தொடர்பையும் பாதிக்கிறது . இதனால் ஸிசோபெரேனியா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது . எம்பிஎஸ்டி மரபணுவால் மூளையில் ஏற்படும் பாதிப்பு மட்டுமன்றி , முடியில் ஸ்டெம் செல்லும் பாதிக்கப்படுகிறது . ஆர்என்ஏவை நகல் எடுத்து எம்பிஎஸ்டி என்சைம்களை உருவாக்க முயல்கிறது . இதனால் தலைமுடியை எடுத்து சோதித்தால் மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை அடையாளம் கண்டு்விடலாம் .

அன்புக்கு உரியவர்களிடம் பேசுவதுதான் மனநலன் காக்கும் வழி! - குப்ரா சைத்

படம்
      குப்ரா சைத் வக்காலத்ஃபிரம் ஹோம் படப்பிடிப்பு எப்படிபோகிறது? ஒரு நடிகையாளக இப்படி நடிப்பது எனக்கு பிடித்திருக்கிறது. நாம் எப்போதும் வீடுகளை மறக்கமுடியாத மனிதர்களாகவே இருக்கிறோம். இப்படி நடிப்பது உண்மையில் வித்தியாசமாக இருக்கிறது. இந்த முயற்சி எனக்கு தினமும் பல்வேறு விஷயங்களைக் கற்க உதவுகிறது. நீங்கள் கொரானோ காலத்தில் மனநலம் பற்றியும் பேசியுள்ளீர்கள் நமது அன்புக்குரியவர்களை தொடர்புகொண்டு அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்று பேசுவது முக்கியம். இந்த நேரத்தில் சுசாந்த் சிங்கின் மரணம் தற்கொலையா, கொலையா என்ற விவாதம் அர்த்தமில்லாதது. இந்த நேரத்தை நாம் நமக்கும், அன்பிற்கும் உரியவர்களுக்கும் பயன்படுத்தலாம். ரியாவுக்கு ஊடகங்களில் நடந்த அனுபவம் பற்றி சொல்லியிருந்தீர்கள். எனது குடும்பம் நீ நடிகை, போராட்டக்காரி இல்லை என்று உறுதியாக சொல்லியிருக்கிறார்கள். ரியாவுக்கு ஊடகங்களில் நடந்த விஷயங்கள் பற்றி எனது அனுபவத்தை நான் பகிர்ந்திருந்தேன். அப்படி நடந்துகொண்டது நீதியல்ல. என் அனுபவத்தை சொல்வது தாண்டி வேறெதுவும் என்னால் கூற முடியாது என்பதே உண்மை. நீங்கள் கதைகளை சொல்லுபவராகவும் உள்ளீர்கள். ஒரு நடிகையாக