இடுகைகள்

இணையத் தாக்குதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெருந்தொற்றைப் பயன்படுத்தி இணையத் தாக்குதல்களை நடத்துகிறார்கள்!

படம்
பெருந்தொற்று பாதிக்காத நாடுகளை எளிதாக இணையத் தாக்குதல்களுக்கு உள்ளாக்க முடியும்! ராஜேஸ் மௌரியா, ஃபோர்டிநெட் அண்மையில் இணையத்தால் தாக்கப்பட்ட நாடுகள் பற்றிய செய்தியை எப்படி பார்க்கிறீர்கள்? இன்று அனைத்து நாடுகளும் கோவிட் -19 பாதிப்பால் பாதிக்கப்பட்டு சரியான மருத்துவப் பொருட்கள், சிகிச்சைகள், தனிமைப்படுத்தும் வசதிகள் இன்றி கஷ்டப்படுகின்றன. இந்த நேரத்தை இணையத்தாக்குதல்காரர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இப்போது உங்கள் மின்னஞ்சலுக்கு, யாரோ அனுப்பிய மின்னஞ்சல் வந்தால்கூட நிலைமையின் தீவிரத்தில் நீங்கள் அதனை திறந்து பார்த்துவிடும் வாய்ப்புள்ளது. அதனை யோசித்துப்பார்த்து திறக்கலாமா என முடிவு செய்வதற்கு கூட இப்போது பலருக்கும் நேரம் இல்லை என்பதே உண்மை. இந்த தாக்குதல் எப்படி தொடங்கியது? மின்னஞ்சல் வழியாக தொடங்கியது. இப்போது நாம் அனைவருமே இணையம் வழியாக பணிபுரிந்து வருகிறோம். இணையத்தில் விளையாடுகிறோம். படங்கள் பார்க்கிறோம். செய்திகளை அனுப்புகிறோம். நாள் முழுக்க பெரும்பகுதி நேரம் நாம் இணையத்தில் உள்ள சூழலில் போலியான பல்வேறு அமைப்புகளின் பேரில் மின்னஞ்சல்களை அனுப்பி தாக்குகிறார்கள் சைபர்

பத்திரிகைகளை தாக்கும் சைபர் குழு!

படம்
நாளிதழ்களை தாக்கிய இணைய கொள்ளையர்கள்! அமெரிக்காவைச் சேரந்த லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நாளிதழ் இணையத்தாக்குதலில் சிக்கியுள்ளது.  பத்திரிகையாளர்களை திட்டமிட்டு தாக்கிய இணைய தாக்குதல் குழு, நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல் ஆகிய இதழ்களை அச்சகத்திற்கு அனுப்பும் பணியை தாமதப்படுத்தியுள்ளனர். அமெரிக்கர்கள் தாக்குதலுக்கு காரணம் யார் என்று கூறுவார்கள்? அதேதான். வடகொரியா அல்லது கிழக்கு ஐரோப்பா என சந்தேகப்பட்டனர் . பின்னர் தாக்குதல் அமெரிக்காவிலேயே நடந்துள்ளது கண்டறியப்பட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். Ryuk  எனும் ரான்சம்வேர் அமெரிக்க பத்திரிகைகளை தொடர்ச்சியாக தாக்கியுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. பாரம்பரிய செய்தி நிறுவனங்களைக் கடந்த சோஷியல் தளங்களின் வழியே செய்திகளை படிக்கும் அமெரிக்கர்கள் உருவாகத் தொடங்கியுள்ளனர். இதில் தகவல்கள் சரியாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.