இடுகைகள்

திறந்தவெளிசிறைகள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திறந்தவெளிசிறைகள் தொடங்கப்படுமா?

படம்
குற்றவாளிகளை மனிதர்களாக்கும் திறந்தவெளி சிறை! –- ச.அன்பரசு இந்தியாவில் நீதிமன்றம் மூலம் வழங்கப்படும் ஒருவருக்கு வழங்கப்படும் தண்டனை, அவர் தன் தவறை உணர்ந்து வருந்தி திருந்துவதற்காகவே. ராஜஸ்தான் முதல் இந்தியாவெங்குமுள்ள திறந்தவெளி சிறைகள் பிராக்டிக்கலாக சாதிக்க முயற்சித்து வருகின்றன. 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் குற்றவாளிகளின் பழக்கவழக்கங்களை மாற்றி சீர்திருத்தும் முயற்சியில் திறந்தவெளி சிறைகள் உருவாயின.   இந்தியாவில் 1953 ஆம் ஆண்டு உ.பியில் முதல் திறந்தவெளி சிறைக்கூடம் உருவானது. இதற்கடுத்த முன்னேற்றமாக ராஜஸ்தானில் தொடங்கிய திறந்தவெளி சிறையில் குற்றவாளிகள் குடும்பத்துடன் தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்தாண்டு டிசம்பரில் உச்சநீதிமன்றம், ராஜஸ்தானில் வெற்றிபெற்ற திறந்தவெளி சிறைகளை பல்வேறு மாநிலங்களிலும் உருவாக்க உத்தரவிட்டது. இந்த ஆணை செயல்படுத்தப்பட்டால் சிறைக்கைதிகளுக்கு சுதந்திரமான வாழ்வு கிடைப்பதோடு, சிறைத்துறையின் செலவுகளும் கணிசமாக குறையும். தற்போது இந்தியாவிலுள்ள 63 திறந்தவெளி சிறைகளில் 5 ஆயிரத்து 370 கைதிகள் வாழ்கின்றனர். நாட்டிலுள்ள மொத்த கைத