இடுகைகள்

இரக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மயிலாப்பூர் டைம்ஸ் - பிச்சைக்கு இரங்கேல்!

படம்
giphy.com பிச்சை கேட்பதை வள்ளுவர் மட்டுமல்ல, சங்க காலம் முதற்கொண்டு தவறு என்றுதான் கூறி வந்திருக்கிறார்கள். பிச்சையை எப்படி கூறுகிறார்கள் என்றால் தங்கம், வெள்ளி நாணயம் மட்டுமல்ல, ஒருவர் வளர்க்கும் கால்நடைகளின் தாகத்திற்கு தண்ணீர் கேட்பது கூட தவறு என்று வரையறுக்கிறார்கள். நமக்கு வந்து சேர்பவர்கள் வேறு ரகமாக இருக்கிறார்கள். பள்ளி தொடங்கி வேலை பார்க்கும் இடம் வரை நான் பெரும்பாலான இடங்களில் இளிச்சவாயனாகவே இருந்திருக்கிறேன். இதற்கு அர்த்தம் நான் பொருட்களை ஒருவருக்கு கொடுத்துவிடுகிறேன் என்பதல்ல. அதை தெரிந்தே செய்கிறேன் என்பதுதான்.  இன்று பாருங்கள். எங்கள் அலுவலக வளாகத்தில் உள்ள வாடிக்கையான ஓட்டுநர் எப்போதும் பதினொரு மணிக்கு அங்குள்ள திண்ணையை யாருக்கும் தரமாட்டேன் என கிடையைப் போட்டு படுத்துவிடுவார். அவருக்கு அடுத்து இருக்கும் இடத்தில் பெண் நாய் ஒன்று படுத்திருக்கும். இல்லையென்றால்  இங்குள்ள இழுத்து மூடப்பட்ட சிறப்பு அங்காடிக்கு காவல் காக்கும் வெள்ளை நிற நாய் ஒன்று படுத்துவிடும். பெரும்பாலும் திண்ணைக்கு இவர்கள்தான் ஓனர்கள் போல. எனவே புதிதாக வந்து நின்ற டாடா டியாகோ கார் அருகே இ