இடுகைகள்

ஓரினச்சேர்க்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெறுப்பை, குரோதத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி சித்திரங்கள்! கொமோரா - லஷ்மி சரவணக்குமார்

படம்
  கொமோரா நாவல் கொமோரா - லஷ்மி சரவணக்குமார் கொமோரா லஷ்மி சரவணக்குமார் கிழக்கு பதிப்பகம்   வாழ்க்கையில் துயரம், அவமானம், துரோகம் ஆகியவற்றை மட்டுமே சந்தித்து வளர்ந்த கதிர் என்ற இளைஞனின் வாழ்க்கைப்பாடே கதையின் முக்கியமான மையம். கம்போடியாவில் நடைபெற்ற கம்யூனிச படுகொலைகளை பின்னணியாக வைத்து நாவல் எழுதப்பட்டுள்ளது. அங்கு வேலை செய்துவரும் கோவிந்தசாமி, உணவகம் ஒன்றை நடத்துகிறார். ஆனால் கம்போடிய உள்நாட்டு புரட்சிப்படை போரில் வெற்றிபெற, வெளிநாட்டு மக்கள் அனைவரும் விசாரணை என்ற பெயரில் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதில் இருந்து தப்பி மீண்டு வரும் அழகர்சாமி என்ற சிறுவன் என்னவானான், அவனது வாழ்க்கை எப்படி அமைந்தது என்பது கிளைக்கதை. நாவலில் கதை நடைபெறும் இடம், நிகழ்ச்சி எல்லாமே முன் பின்னாக அமைந்துள்ளது. ஆனால் படித்து முடித்தபிறகு அனைத்துமே மனதில் கோவையாக கோத்துக்கொள்ளலாம். நாவலில் வரும் பல்வேறு விஷயங்கள் வாசிப்பவர்களை தீவிரமாக அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. கதிர், கிறிஸ்துவ விடுதியில் வல்லுறவு செய்யப்படுவது, பசியால் கோழி திருடி கடுமையாக அடிக்கப்படுவது, அப்பாவால் வல்லுறவு செய்யப்பட

மாற்றுப் பாலினத்தவர்களுக்கான திரைப்படங்கள்- பட்டியல்

படம்
  ஃபிரன்ட் கவர் ஹேப்பி டுகெதர் ஹார்ட் பீட்ஸ் லவுட் லவ் சைமன் எ ஃபென்டாஸ்டிக் வுமன் 2017 டேனியல் வேகா நடித்துள்ள படம். அவர்தான் மெரினா. அவரது பார்ட்னர் திடீரென இறந்துபோகிறார். இருவருமே மாற்றுப்பாலினத்தவர்கள். இறந்துபோனவரின் குடும்பத்தினருக்கு மாற்றுப்பாலினத்தவர் என்றாலே ஆகாது. இந்த சூழ்நிலையை அவர் எப்படி சமாளிக்கிறார், மாற்றுப்பாலினத்தவர்களை சமூகம் எப்படி புரிந்துகொள்கிறது என்பதை சொல்லிய சிலிய படம். வெளிநாட்டு பட வரிசையில் ஆஸ்கர் பரிசு பெற்றது.  டிஸ்குளோசர்  2020 ஆவணப்படம்.  திரைப்படங்களில், சமூகத்தில் மாற்றுப்பாலினத்தவர்கள் எப்படி நடத்தபடுகிறார்கள் என்பதை அவர்களை வைத்தே பகிர்ந்துகொண்டால் எப்படி இருக்கும்? நெட்பிளிக்ஸின் ஆவணப்படம். வாய்ப்பு இருப்பவர்கள் பாருங்கள்.  ஃபிரன்ட் கவர் 2015 சீன நடிகர் ஒருவருக்கும், உடை வடிவமைப்பாளருக்கும் பற்றிக்கொள்ளும் ஒரினச்சேர்க்கை உறவு பற்றிய கதை.  ஹேப்பி டுகெதர் 1997 இரு ஆண்களுக்கு இடையிலான ஓரினச்சேர்க்கை உறவு எப்படி வன்முறை கொண்டதாக மாறி, பிரிவு நேரிடுகிறது என்பதை சொல்லுகிற படம். ஹாங்காங் தொடங்கி அர்ஜென்டினா வரையில் செல்லும் இரு நண்பர்களின் பயணம்தான் தி

ஓர் ஆணை இருபெண்கள், ஓர் ஆண் காதலித்தால் - நர்த்தனசாலா படம் எப்படி?

படம்
நர்த்தனசாலா -2018 இயக்கம் ஸ்ரீனிவாஸ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு விஜய் சி குமார் இசை மகதி ஸ்வரா சாகர் ஒரு ஆணை இரண்டு பெண்கள் மற்றும் ஓர் ஆண் விரும்பினால் என்ன நடக்கும்? அதுதான் நர்த்தனசாலா படம் சொல்லுகிறது. ஆஹா பெண்கள் மீதான கிண்டல், கேலிக்கு அவர்களே பதிலடி கொடுக்கும் காட்சி அருமை. காஷ்மீராவின் அழகு, யாமினியின் தைரியம் என இரண்டு நாயகிகளும் சிறப்பாக இருக்கிறார்கள். ஜெயபிரகாஷ் ரெட்டி, நாக சௌரியாவின் தந்தையான சிவாஜி ராஜா ஆகியோர் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். சாகரின் அற்புதமான பாடல்கள் படத்தை பொறுமையாக பார்க்கச் செய்கின்றன. ஐய்யையோ ஓரினச்சேர்க்கை பற்றி இத்தனை கிண்டல்கள் அவசியமா? அதற்கு கிளைமேக்ஸில் நாக சௌரியா  கொடுக்கும் ஒற்றை வரி சமாளித்தல் எப்படி உதவும் இயக்குநர் சார்? இரு நாயகிகளுக்கும் நடிப்பதற்கான வாய்ப்பை இயக்குநர் இறுதிவரை தரவே இல்லை. ஷோகேஸ் பொம்மை போல பயன்படுத்தி இருக்கிறார்கள். யாமினி பாஸ்கர் தைரியமாக இருக்கிறார். அதுசரி, அதற்காக அவரை புகழ்ந்த ஒரு ஆணை இன்ஸ்டன்டாக லவ் செய்து திருமணம் வரை போகும் காட்சிகள் சரியாக இல்லை. அவரை வீட்டில் சந்திக்கும்போ

சிறுவர்களை செக்சுக்கு பயன்படுத்திய கோமாளி! - ஜான் வெய்ன் கேசி

படம்
அசுர குலம் ஜான் வெய்ன் கேசி இன்று ஜோக்கர்கள்தானே எதிர்கால வில்லன்களாக மாறுகிறார்கள். அப்படித்தான் ஜான் வேய்ன் கேசி, நினைத்துப் பார்க்க முடியாத கொடூர ஆளாக மாறியதும். முதலில் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு கேசி ஒரு கோமாளிதான். கோமாளி வேடம் போட்டு குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுபவர்தான். ஆனால் உள்ளுக்குள் அவர் ஓரினச்சேர்க்கையாளர். பாலினம் சார்ந்த விருப்பங்கள் நிச்சயம் குற்றம் கிடையாது. ஆனால் அதற்கு அவர் நாடியது சிறுவர்கள். அவர்களை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொண்டு சிறை தண்டனை பெற்ற வரலாறு அவருக்கு உண்டு. பின்னர், சிறுவர்களை கொல்லத் தொடங்கியதுதான் அவரை சீரியல் கொலைகாரர்களில் முக்கியமானவராக மாற்றியது. சிகாகோவில் கட்டடத்துறை சார்ந்த வேலைகளைச் செய்து வந்த கேசி பொது சமூகத்தில் நல்ல பெயரை சம்பாதித்தார். ஊரில் கந்தையா மாமா, பழனிச்சாமி சித்தப்பா என சிலர் உண்டு. இவர்கள் ஊரில் எந்த விழா நடந்தாலும் அங்கு சென்று வாழை மரத்தை ஊன்றி நிமிர்த்தி வைப்பது முதல் சோற்று பந்தியை கவனிப்பது வரை வேலைகளை செய்வார்கள். ஏறத்தாழ கேசி அப்படிப்பட்ட ஆள்தான். அதனால்தான் அவருக்கு சிகாகோவில் அவர

LGBTயினரை ஆதரிக்கும் போஸ்ட்வானா!

படம்
theconversation.com ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் போஸ்ட்வானா! அண்மையில் போஸ்ட்வானா நாட்டு உயர் நீதிமன்றம், ஓரினச்சேர்க்கையாளர்களை குற்றவாளிகளாக்கும் சட்டத்தை அகற்றியுள்ளது. இந்த தீர்ப்பு வரும் ஜூன் முதல் அமலுக்கு வரவிருக்கிறது. கென்யாவில் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, வரும் மே மாதம் வெளியிடப்பட விருக்கிறது.  காலனிய ஆட்சிகாலச் சட்டப்படி, ஓரினச்சேர்க்கையாளர்களின் உறவு, சட்டம் 164 படி தண்டனைக்குரிய குற்றம். இதற்கு ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்க முடியும். இயற்கைக்கு புறம்பான செயல்பாடுகள் பிரிவில் ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்க முடியும்.  போஸ்ட்வானாவின் சட்டங்கள் அப்படியே இந்தியச்சட்டங்களைப் போன்றதே. 1830 ஆம் ஆண்டு தாமஸ் பாபிங்டன் மெக்காலே, இந்திய சட்ட கமிஷன் மூலம் ஓரினச்சேர்க்கை சட்டத்தை இயற்றினார். இந்தியா மற்றும் போஸ்ட்வானா சட்டங்கள் இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றியின்(1533) சட்டத்தைப் பின்பற்றி இயற்றப்பட்டது. 1960 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போஸ்ட்வானா, 2003 ஆம் ஆண்டுதான் சட்டங்களை நவீனப்படுத்த தொடங்கியது.  பிரிட்டிஷின் காலனி நாடுகளாக இருந்த பல்வேறு ந