சிறுவர்களை செக்சுக்கு பயன்படுத்திய கோமாளி! - ஜான் வெய்ன் கேசி



Gacy Clown




அசுர குலம்

ஜான் வெய்ன் கேசி


இன்று ஜோக்கர்கள்தானே எதிர்கால வில்லன்களாக மாறுகிறார்கள். அப்படித்தான் ஜான் வேய்ன் கேசி, நினைத்துப் பார்க்க முடியாத கொடூர ஆளாக மாறியதும்.

Gacy Mug Shot



முதலில் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு கேசி ஒரு கோமாளிதான். கோமாளி வேடம் போட்டு குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுபவர்தான். ஆனால் உள்ளுக்குள் அவர் ஓரினச்சேர்க்கையாளர். பாலினம் சார்ந்த விருப்பங்கள் நிச்சயம் குற்றம் கிடையாது. ஆனால் அதற்கு அவர் நாடியது சிறுவர்கள். அவர்களை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொண்டு சிறை தண்டனை பெற்ற வரலாறு அவருக்கு உண்டு. பின்னர், சிறுவர்களை கொல்லத் தொடங்கியதுதான் அவரை சீரியல் கொலைகாரர்களில் முக்கியமானவராக மாற்றியது.


சிகாகோவில் கட்டடத்துறை சார்ந்த வேலைகளைச் செய்து வந்த கேசி பொது சமூகத்தில் நல்ல பெயரை சம்பாதித்தார். ஊரில் கந்தையா மாமா, பழனிச்சாமி சித்தப்பா என சிலர் உண்டு. இவர்கள் ஊரில் எந்த விழா நடந்தாலும் அங்கு சென்று வாழை மரத்தை ஊன்றி நிமிர்த்தி வைப்பது முதல் சோற்று பந்தியை கவனிப்பது வரை வேலைகளை செய்வார்கள். ஏறத்தாழ கேசி அப்படிப்பட்ட ஆள்தான். அதனால்தான் அவருக்கு சிகாகோவில் அவரின் குடியிருப்பு பகுதியில் ஏராளமான நண்பர்கள் உண்டு. 1964 ஆம் ஆண்டு கேசிக்கு களங்கம் தொடங்கியது. இரு சிறுவர்களை இச்சைக்கு பலியாக்க முயல, அவர்கள் பயந்து அலற போலீஸ் புகாரானது. பதினெட்டு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


1975 ஆம் ஆண்டு கேசிக்காக வேலை செய்து வந்த சிறுவன் திடீரென காணாமல் போனான், போலீஸ் விசாரணை செய்த தில் எனக்கு எதுவும் தெரியாது என கேசி கையை விரித்துவிட்டார். போலீசுக்கு கேஸ் முடிக்கும் அவசரம். கேசி இல்லையென சொல்லிவிட்டார் என கோப்பை மூடி வைத்து விட்டது. ஆனால் சிறுவனின் பெற்றார் மீண்டும் கேசை திறக்க வைத்து கேசி மீது சந்தேகம் என புகார் கொடுத்தனர்.

அப்போதுதான் கேசி இரண்டாவது மனைவியை கழற்றி விட்டு சுதந்திரமாக இருந்தார். அதற்கு பிறகு மூன்று ஆண்டுகளில் 33  சிறுவர்களை வல்லுறவு செய்து கொன்று தன் வீட்டின் கீழே, தச்சு வேலை செய்யும் இடத்தின் கீழே புதைத்து அதன் மேலேயே வாழ்ந்து வந்தார். புகார்களுக்கு மேல் புகார்கள் வர போலீஸ் வேலை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கேசியின் வீட்டுக்கு விசிட் அடிக்க காணாமல் போன சிறுவனின் மோதிரம், மலமும் ரத்தமும் தோய்ந்த இரும்புக்குழாய் ஆகியவை கிடைத்தன. வாட் இஸ் திஸ் என கோபமாக போலீஸ், மேலும் சில ஆதாரங்களை சேகரித்து கேசியை சிறை பிடித்தனர். பின்னர் கோர்ட்டில் ஆதாரங்களை சேகரித்து, பிணங்களை கண்டுபிடித்து மார்ச்சுவரில் சேர்க்க கேசியின் கதை முடிவுக்கு வந்தது. 1944 ஆம்ஆண்டு அவரை விஷ ஊசி போட்டு அமெரிக்க அரசு கொன்றது.


வின்சென்ட் காபோ

நன்றி - கில்லர் புக் ஆஃப் சீரியல் கில்லர்ஸ் நூல், கிரைம் மியூசியம் வலைத்தளம்