இந்தியா பிராந்திய ஒப்பந்தத்தில் இணைவது நல்லது - அரவிந்த் பனகரியா
நேர்காணல்
அரவிந்த் பனகரியா
இந்தியா, பிராந்தி பொருளாதார ஒப்பந்த த்திலிருந்து விலகியுள்ளது. அது பற்றி உங்களது கருத்து?
பிரதமர் மோடிதான் இதுபற்றி கருத்து தெரிவித்திருந்தாரே. நாம் நினைத்த து போல பல்வேறு விதிமுறைகளை மாற்ற வேண்டும். மேலும் இந்தியா இதில் இடம்பெறவில்லை என்பது தற்காலிக முடிவுதான். இந்த ஒப்பந்த த்திலுள்ள பல்வேறு முடிவுகள் மாற்றப்படுவது காலத்தின் கட்டாயமும் கூட.
இந்தியா இந்த வர்த்தகத்தில் இடம்பெறும் என திடமாக நம்புகிறீர்கள் போல?
இந்த ஒப்பந்த த்தில் இடம்பெற்றுள்ள நாடுகள் அனைத்தும் தங்கள் நாடுகளுக்குள் இலவசமாக அல்லது குறைந்த வரிகளுடன் வணிகம் செய்கின்றன. ஆனால் இந்த முறை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஆபத்தானது என இந்தியா கருதுகிறது. அதேசமயம் 300 கோடி மக்களைக் கொண்ட நாடுகளின் ஒப்பந்தம் இது. உலக உற்பத்தியில் 20 சதவீதம் இந்த நாடுகள்தான் கொண்டுள்ளன. இதிலிருந்து வெகுநாட்கள் இந்தியா விலகியும் நிற்கமுடியாது.
பிரதமரை அளவுக்கு அதிகமாக நம்புகிறீர்கள்?
ஆம். பிரதமர் மோடி பல்வேறு துறைகளில் தனது துணிச்சலை நிரூபித்துள்ளார். ஆசிய நாடுகளின் ஒப்பந்தத்தில் இந்தியா நிச்சயம் தனித்து நின்று சாதிக்க முடியாது. பிரதமர் தனது அனுபவத்தில் இதனை உணர்ந்தே இருப்பார். எனவே விதிமுறைகளை சரி செய்துகொண்டால் இந்தியா விரைவில் அதில் இணைந்து பொருளாதார பயன்களைப் பெறும் என்று நான் நம்புகிறேன். மேலும் உலக நாடுகளின் நிறுவனங்களோடு இந்திய நிறுவனங்கள் போட்டியிடும் தகுதி கொண்டவைதான்.
ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்தால் உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை சமாளிக்க முடியுமா?
தொண்ணூறுகளில் இப்படித்தான் பேச்சு எழுந்தது. தாராளமயமாக்கல் சீர்திருத்தம் நம் பொருளாதாரத்திற்கு உதவ வில்லையா என்ன? உறுதியான அரசியல் தலைமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. எனவே இந்த ஒப்பந்தத்தில் இணையும்.
இதன் விளைவாக சீனாவின் மலிவான இறக்குமதிகள் குவியும் என்கிறார்களே?
ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்னர் இப்படி பேசுவார்கள். பதினைந்து அல்லது இருபது ஆண்டுகள் இந்த ஒப்பந்தம் நடப்பில் இருக்கும். அதில் பல்வேறு மாறுதல்களை செய்ய வாய்ப்புள்ளது. இதைக்காரணம் காட்டி ஒப்பந்தத்தை முற்றாக கைவிடுவது தவறானது.
நன்றி - இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஹரி கிஷன் சர்மா