பசுமை சக்தியில் இந்தியாவின் இடம் என்ன?



experience electricity GIF




பசுமை சக்தி


உலகம் முழுக்க ஹைட்ரஜன் வாகனங்கள், மின் வாகனங்கள் என போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலும் அதுதொடர்பான சட்டங்கள் உருவாகி வருகின்றன. இன்று நாம் பெட்ரோல் டீசல் என ஊற்றி ஓட்டினாலும் வருங்காலம் என்பது ஹைட்ரஜன், லித்தியன் அயன் பேட்டரி வண்டிகளாகவே இருக்கும் என்பது உறுதி.

அத்துறை சார்ந்த நிறுவனங்களும் இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் சந்தையை விட்டுவிடாது. தற்போது வரை உலகளவில் அதிகளவு கார்பன் வெளியிடும் நாடுகளில் சீனா, அமெரிக்காவைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. அதுபற்றி சில தகவல்களைப் பார்ப்போம்.


2030க்குள் தனது கார்பன் வெளியீட்டு அளவை பெருமளவு குறைத்துக்கொள்வதாக இந்தியா கூறியுள்ளது. எவ்வளவு தெரியுமா 30-35 சதவீதம்.


தொண்ணூறுகளிலிருந்து 2015 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வெளியேறிய கார்பன் அளவு 147 சதவீதம் என்கிறது சூழல் அமைப்புகளின் அறிக்கை.

உலகளவில் இந்தியா வெளியேற்றும் கார்பன் அளவு 6.55 சதவீதம்தான். தனிநபர் வெளியேற்றும் கார்பன் அளவில் இந்தியா 20 வது இடத்தில் உள்ளது.

காற்றாலைகள் மூலம் கிடைக்கும் ஆயிரம் ஜிகாவாட் மின்சாரம் மூலம் 250 பேரின் வாழ்க்கை காப்பாற்றப்படுகிறது.

இந்தியாவில் தற்போது கரிம எரிபொருட்கள் மூலம் 74 சதவீத மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இதன் அளவு 40 சதவீதமாக குறைய வாய்ப்பு உள்ளது.


இங்கிலாந்து நிறுவனம் செய்த ஆய்வில், நடப்பு ஆண்டில் 70 சதவீதம் மின்சாரத்தேவை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் 83 ஜிகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய மின்சார ஆணையம் கூறியுள்ளது. பிரதமர் மோடியின் கனவு 450 ஜிகாவாட் மின்சாரத்தயாரிப்பு சூழலுக்கு பாதிப்பின்றி நடைபெறவேண்டும் என்பதுதான்.



நன்றி - இந்தியா டுடே