தோர்கல் பயணிக்கும் புதிய உலகம் - சாகாவரம் பெற்ற வில்லிகள்!



Image result for thorgal comics



தோர்கல் செத்துப் பிழைக்கும்

ஏறத்தாழ சொர்க்கம்

சன்ஷைன் கிராபிக் நாவல்

லயன் காமிக்ஸ்

விலை ரூ. 60

வட துருவத்தில் குதிரையில் பயணிக்கும் தோர்கல் வழிதவறிவிடுகிறார். ஓநாய்க்கூட்டம் தாக்குதல் நடத்த குதிரையுடன் தப்பிக்க முயல்கிறார். அப்போது மலைப்பிளவில் தவறி விழுகிறார். எழுந்து பார்த்தால் இரு பெண்கள் அவர் கண்முன்னே நிற்கிறார்.  அவர் அங்கே பார்க்கும் இடம் பூக்கள் பூத்து அழகாக இருக்கிறது. ஆனால் சுதந்திர உலகாக இல்லை. அங்கே இரண்டு பெண்கள் மட்டுமே இருக்கின்றனர். யார், அங்கிருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதுதான் கதை.

இதில் தோர்கல் ஆக்சன் அதிரடி எதுவும் செய்யவில்லை. முழுக்க பெண்களின் ஆட்சிதான். கோமாவில் ஓராண்டுக்கு மேல் இருக்கும் தோர்கல்லுக்கு, எதிர்பாராதவிதமாக ஒரு பெண் உதவுகிறாள். இதன்விளைவாக தன் உயிரையை பறிகொடுக்கிறாள். ஆனாலும் அந்த உதவி அப்படித்தால் தோர்கல்லுக்கு கிடைக்கிறது. படங்கள் பிரமாதமாக வரைந்திருக்கிறார்கள். குதிரை பள்ளத்திற்குள் விழுந்து இறக்கும் காட்சியை இதற்கு உதாரணமாக காட்டலாம். சாகச பயணமாக காமிக்ஸ் தேவை என்றால் அதற்கு இந்த காமிக்ஸை வாங்கிப் படிக்கலாம்.