ஆல்பெர்டோவின் செக்ஸ் வாழ்க்கை!



the 40 year old virgin GIF

ஆல்பெர்ட் டிசால்வோவின் செக்ஸ் வாழ்க்கை


பெண்களை நைலான் கயிற்றில் கட்டி அவர்களை தலையில் பாட்டிலால் அடித்து குற்றுயிராக்குவது முதல் பணி. அதற்குப் பிறகு அவர்கள் வலி, வேதனையில் துடிப்பார்கள். பின்னர் ரத்தப்போக்கினால் இறப்பார்கள். அதெல்லாம் ஆல்பெர்டுக்கு தெரியாது. அவனுக்கு மகிழ்ச்சி வேண்டும். அப்போது வல்லுறவு செய்வதுதான் அவனுக்கு பிடித்தமானது. பின் உடலை குறிப்பிட்ட மாதிரி செட் செய்து விட்டு கிளம்புவான். போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்த சீரியல் சைக்கோ கொலைகாரர் இவர்.

ஆல்பெர்ட்டின் குற்றச்செயல்கள் பற்றி பிறகு பார்ப்போம். முதலில் அவரது குடும்பம் பற்றி...

அவரின் தந்தை குடிபோதையில் அலைபவர். வீட்டிற்கே விலைமாதர்களை கூட்டி வந்து மஜா செய்பவர். இதனால் தெரியவேண்டிய அத்தனையும் சிறுவயதிலேயே ஆல்பெர்டோவுக்கு தெரிந்துவிட்டது. அவரது சகோதர ர்கள் சீர்திருத்த பள்ளிக்கு செல்வதும் வருவதுமாக சாதனை செய்து கொண்டிருந்தனர்.

ஆல்பெர்டோ டிசால்வோ வளரும்வரை போஸ்டனில் உள்ள மால்டன் நகரில் எந்த குற்றங்களிலும் ஈடுபடவில்லை. ஜெர்மன் அகதியான இர்ம்கார்ட் என்ற பெண்ணை திருமணம் செய்தார். செக்ஸ் மீது மிக ஆர்வமாக இருந்த ஆல்பெர்டோ, வேலையில் டீ பிரேக் விட்டால் கூட வீட்டுக்கு வந்து இருபது நிமிடங்கள் மனைவியுடன் கசமுசா செய்வார். அதிகாலை, மதிய உணவு இடைவேளை,  மாலைவேளை, இரவு என வாரத்திற்கு 30 முறைகளுக்கு மேல் செக்ஸ் செய்யும் கோளாறான ஆள்தான் ஆல்பெர்ட். வார இறுதிகளில் மேற்சொன்ன கட்டுப்பாடுகள் கிடையாது என்பதால் மஸ்தி குதிரையே திணறும் அளவு சமாச்சாரங்களை முருங்கைக்காய் சாப்பிடாமல் ஆல்பெர்ட் நடத்துவார். வீக் எண்டில் ஆறுமுறை உடலுறவு கொள்வது தோராயக் கணக்கு.

இந்த நேரங்களில் டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியா டுடே செக்ஸ் சர்வே போல தான் பார்த்த அழகான பெண்களைப் பற்றி பேசியபடியே ஜாலி செய்வார் ஆல்பெர்டோ.